முத்து வீட்டிற்கு வந்த மலேசியா மணி, குடும்பத்திற்காக காதலை விட்டுக் கொடுத்தாரா சீதா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி பேசியிருப்பதை ஒட்டு கேட்ட மனோஜ், வெளியே வந்து யாரிடம் பேசுகிறாய்? என்று கேட்டார். ரோகினி, என்னுடைய பிரண்டு என்று சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் வீட்டுக்கு ஸ்ருதி அம்மா வந்தார். அவர் 10 லட்ச ரூபாய் செக் உடன் பழம், ஸ்வீட் தட்டு வைத்து கொடுத்தார். அண்ணாமலை எதற்கு என்று கேட்டார். அதற்கு ஸ்ருதி அம்மா, ரவி தொடங்க இருக்கும் புது ஓட்டலுக்கு தான். நாங்கள் கொடுக்கும் சின்ன தொகை என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், ரவிக்கு விருப்பமே இல்லை.
ரவி, நான் சொந்தமாக ஆரம்பிக்கிறேன் என்று சொன்னார். ஆனால், சுருதி ஒத்துக் கொள்ளவே இல்லை. விஜயா, பணத்தை வாங்க சொல்லி ரவியை கட்டாயப்படுத்தி இருந்தார். அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் ரவி முடிவு தான், நாங்கள் தலையிட மாட்டோம் என்றார். பின் ஸ்ருதி கட்டாயத்தினால் ரவி மனதே இல்லாமல் அந்த பணத்தை வாங்கி கொண்டார். அதற்குப் பின் தன்னுடைய நண்பர்களிடம் மீனா, சீதாவின் கல்யாணத்தை பற்றி பேசி இருந்தார். இன்னொரு பக்கம் செல்வம்-முத்து, சீதாவின் காதலைப் பற்றி பேசினார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் செல்வம், சீதாவின் காதலுக்கு சப்போர்ட்டாக முத்துவிடம் பேசி இருந்தார். ஆனால், முத்து பிடிவாதமாக இந்த கல்யாணம் நடக்காது என்றார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அம்மாவிடம் சீதா கல்யாணத்திற்காக பேசி இருந்தார். அதற்கு மீனாவின் அம்மா, மாப்பிள்ளை முடிவு தான் என்னுடைய முடிவு. அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. சீதா மனதை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான் என்று சொன்னார். பின் முத்து வரும் வழியிலேயே அருணம் பைக்கில் வந்தார். ஒத்தடி பாதை என்பதால் முத்து, அருணை பின்னாடி போக சொன்னார். அருண், முத்துவை பின்னாடி போக சொல்கிறார். இதனால் இருவருமே முறைத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த இடத்திற்கு வந்த சீதா, அருணை பின்னாடி போக சொல்லி சைகை காண்பிக்க, அருணும் விட்டுக்கொடுத்தார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் விஜயா, ரோகிணி தனக்காக கொடுத்த செயினை பார்வதியிடம் காண்பித்து சந்தோஷப்பட்டார். உடனே பார்வதி, நீயும் மருமகளும் சேர்ந்து விட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு விஜயா, அப்படி எல்லாம் இல்லை. அவளை எல்லாம் என் மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று வழக்கம்போல ரோகினி பற்றி கேவலமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணி, விஜயாவை பார்க்க வருகிறாள். அவர், என்னுடைய பிறந்தநாளுக்கு அழைக்க வந்தேன். நீங்கள் வரவேண்டும் என்று பார்வதியையும் விஜயாவையும் அழைத்தார். விஜயா சரி என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் அருணை சந்தித்த சீதா, இந்த கல்யாணம் நடக்காது. என்னை மன்னித்து விடுங்கள் என்று பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சீதா, என் குடும்பம், என்னுடைய மாமாவின் சம்மதமும் இல்லாமல் நம்முடைய திருமணம் நடக்காது. என்னை மறந்து விடுங்கள் என்று சொல்கிறார்.அருண் எடுத்து சொல்லியுமே சீதா கேட்கவில்லை. அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதன்பின் வீட்டுக்கு வந்த சீதா, நான் இனிமேல் அருணை பார்க்க மாட்டேன். அவரிடம் இந்த திருமணம் நடக்காது என்று சொல்லிவிட்டேன் என அழுது கொண்டே சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து சத்யா, முத்துவிடம் சீதாவின் காதலை பற்றி பேச நினைக்கிறார். இன்னொரு பக்கம் முத்துவின் வீட்டிற்கு மலேசியா மணி வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அங்கு அவரை பார்த்தவுடன் விஜயா ருத்ரதாண்டவம் ஆடுகிறார். அப்போது மலேசியா மணி, ரோகினியிடம் நலம் விசாரித்துவிட்டு வீட்டில் உள்ள எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார். பின் மலேசியா மாமா, நான் செய்தது மிகப்பெரிய தவறு தான். இருந்தாலும் ரோகினியின் வாழ்க்கைக்காக தான் நான் பொய் சொன்னேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றார். இதைக் கேட்டவுடன் விஜயா கோபப்பட்டு மலேசியா மாமாவை ரொம்ப மோசமாக பேசுகிறார். ஆனால், அண்ணாமலை பெருந்தன்மையாக மன்னித்து விடுகிறார். அதற்குப்பின் முத்து, சீதாவிற்காக பார்த்த மாப்பிள்ளை பற்றி விசாரிக்க கம்பெனிக்கு போகிறார். அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருவரும் மாப்பிள்ளை பற்றி குறை சொல்கிறார்கள். இதனால் முத்துவிற்கு இந்த சம்பந்தம் வேண்டாம் என்று வந்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.