ரோகினியின் முகத்திரையை கிழித்த முத்து, கொந்தளித்த அண்ணாமலை - விஜயா முடிவு என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 25/3/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் பவானி திருமணத்தில் இரண்டு திருடர்கள் நகை, பணத்தை திருடுவதற்காக சொந்தக்காரர்கள் போல் வேஷம் போட்டு சொந்தக்காரர்கள் போர் வேஷம் போட்டு வந்தார்கள். ஆனால், மீனாவிற்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது. இன்னொரு பக்கம் முத்து குடிக்கவில்லை என்று தெரிந்தவுடன் மீனா, இதை உன் அண்ணன் தான் சொன்னார். கோபத்தில் முத்து, மனோஜ் போனை பிடுங்கி வைத்து மன்னிப்பு கேட்க சொன்னார். ஆனால், மனோஜ் முடியாது என்றார். அதற்கு பின் நல்லபடியாக பவானி திருமணம் முடிந்தது. ஆனால், அந்த திருடர்கள் இரண்டு பேருமே பவானியின் நகையை எடுத்துக்கொண்டு கிளம்ப பார்த்தார்கள்.

இதை பார்த்தவுடன் சந்தேகம் வந்த மீனா, முத்துவிடம் சொல்ல, இரண்டு பேருமே அவர்களை வளைத்து பிடித்து பிடித்தார்கள். பின் அந்த திருடனை முத்து வெளுத்து வாங்கி இருந்தார். அப்போது அந்த திருடன் மீனாவின் கையை அறுத்துவிட்டு தப்பித்து விட்டார். பின் பவானியின் அப்பா வந்தவுடன் நடந்ததை சொல்ல, அவர் பணம் போனால் போகட்டும். உங்களுக்கு எதுவும் இல்லையா? என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார். பின் இதை வீட்டில் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். நீங்கள் திருமண வேலையை பாருங்கள் என்று முத்து சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் மலேசியா மணி இடம் பவானியின் அப்பா, திருடர்கள் நகையை திருட பார்த்தார்கள். என் நண்பனின் குடும்பம் தான் காப்பாற்றியது என்று ரொம்ப பெருமையாக பேச அவர்களுக்கு மரியாதை செலுத்த மாலையுடன் மலேசியா மணி வந்தார். அவரை பார்த்தவுடன் முத்து-மீனா இருவரும் ஷாக்காகி இருந்தார்கள். மலேசியா மணிக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

அப்போது முத்து- மீனா ரோகினி மாமாவைப் பற்றி பேசி இருந்தார்கள். உடனே அவரை உள்ளே வரவைத்தார்கள். ரோகினிக்கு பேரதிர்ச்சி. என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். விஜயா, மனோஜ் இருவரும் உண்மை என்னவென்று புரியாமல் அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே முத்து, இவர் மலேசியா மாமா கிடையாது. பவானி கணவனின் தாய் மாமன் என்று அவருடைய பற்றி எல்லா உண்மையும் சொல்ல, வீட்டில் உள்ள எல்லாருமே ஷாக் ஆனார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, இவர் மலேசியா மாமாவே கிடையாது, சென்னை மணி. எல்லாம் பார்லர் அம்மா பண்ண வேலை. எல்லாமே பித்தலாட்டம். மலேசியா, ஜெயில், அப்பா இறந்தது என்று சொன்னது எல்லாமே பொய் என்று சொன்னவுடன் மொத்த பெருமே ஷாக் ஆகிறார்கள். பின் மணி, என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள். ரோகிணி வாழ்க்கையில் பிரச்சனை இருக்கிறது. அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவருடைய தோழி வித்தியா கேட்டுக்கொண்டார்.

சீரியல் ட்ராக்:

அதனால் தான் நான் நடித்தேன். உங்களை எல்லாம் ஏமாற்றனும் என்று இல்லை என்று சொல்லி, ரோகிணி இடம் உன் வீட்டிற்கு உண்மையாக இரு. பொய் என்றும் மறைக்க முடியாது என்று சொல்கிறார். விஜயா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ஆத்திரம் தாங்க முடியாமல் அண்ணாமலை, ரோகினியை திட்டி விடுகிறார். அதற்குப்பின் விஜயாவும், ரோகினியை அடித்து விட்டு எவ்வளவு பொய். உன்னால் நான் அசிங்கப்பட்டு நிற்கிறேன். நீ பொய்யின் உருவமாக இருக்கிறாய் என்று மோசமாக திட்டுகிறார். மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full