மீனா கேட்ட கேள்வியால் உறைந்து போன ரோகினி, மனோஜுக்கு எழும் சந்தேகம் - சிறகடிக்க ஆசை

By subhashini · 8/1/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் விஜயா, நீங்கள் அந்த 27 லட்சம் பணத்தை கொடுத்து விட்டால் முத்துவின் ஆட்டத்தை அடக்கிவிடலாம். நீ எப்படியாவது உன்னுடைய அப்பாவிடம் சொல்லி பணத்தை வாங்கி கொடு என்று ஆர்டர் போட, அதிர்ச்சியில் ரோகினியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் முத்து, தன்னுடைய அப்பாவுக்கு மாலை அணிவித்து ஸ்வீட் கொடுத்து, இவர் தான் இனி கடையின் ஓனர் என்று சொன்னவுடன் அங்கு வேலை செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த சமயம் பார்த்து சந்தோஷி அங்கு வந்தார். அவரை பார்த்தவுடன் ஏதோ சொல்லி அண்ணாமலை சமாளித்து விட்டார்.

அப்போது மனோஜிடம் அட்வான்ஸ் கொடுத்த சப் டீலர்ஸ்கள் வந்தார்கள். அவர்கள் பணத்தை திருப்பி கேட்டவுடன் மனோஜ் ஏதேதோ காரணத்தை சொல்லி இருந்தார். உடனே சந்தோஷி, பொருள் தாமதம் ஆகிறது வந்து விடும் என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு மனோஜை பயங்கரமாக திட்டி இருந்தார். பின் அண்ணாமலை, பங்களா வாங்க மனோஜ் செய்த வேலையை சொன்னவுடன் அவருக்கு கோபம் அதிகமானது. உடனே அவர், மனோஜை திட்டிவிட்டு இனிமேலாவது புத்தியாக நடந்து கொள் என்று கிளம்பி விட்டார். பின் வீட்டில் முத்து வந்தவுடன் விஜயா தாண்டவம் ஆடி இருந்தார். மனோஜ்-ரோகினி இருவருமே முத்துவிடம் சண்டைக்கு போனார்கள்.

சிறகடிக்க ஆசை:

பின் விஜயா, நீ எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி கொடுத்துவிடு. இந்த பிரச்சனை முடிந்து விடும் என்று ரோகினியை மிரட்டி இருந்தார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் கதிரை கண்டுபிடிக்க திட்டம் போட்டார்கள். நேற்று எபிசோடில் சிந்தாமணி நடிகரின் வீட்டில் ஆர்டர் வாங்கப் போனார். அந்த சமயம் வந்த மீனா, பூ தினமும் போடுவதாக அந்த நடிகரிடம் சொன்னார். இதை எல்லாம் பார்த்து சிந்தாமணிக்கு கோபம் வந்து சண்டை போட்டார். ஆனால், கதிரை பிடிக்கத்தான் அந்த நடிகரின் வீட்டிற்கு மீனா போனார். இன்னொரு பக்கம் முத்து- செல்வம் இருவருமே புது பிசினஸ் செய்வதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

பின் வித்யாவின் வண்டி மீது மீனாவை காதலிப்பதாக துரத்திய முருகன் வண்டி மோதி இருந்தது. வித்யா அவரை திட்ட, முருகன் சாரி சொல்லி சமாதானம் செய்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த ரோகினியிடம் விஜயா, பணத்தை ஏற்பாடு செய்தீர்களா? உன்னுடைய சொந்தக்காரர்களிடம் கேட்டு பணத்தை ரெடி பண்ணு என்று சொல்ல, ரோகினியால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் அண்ணாமலை, கதிர் விஷயம் பற்றி கேட்க, மீனா செய்யும் சிஐடி வேலை பற்றி முத்து சொன்னார். உடனே மனோஜ், பணம் கிடைத்தவுடன் என்னிடம் கொடு என்றவுடன் முத்து, மனோஜை திட்டி விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, சீக்கிரமாகவே கதிரை பிடிக்க பார்க்கிறோம். அதற்காகத்தான் மீனாவும் நானும் தீவிரமாக அலைந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார். அதற்குப்பின் மீனாவை விஜயா சமைக்க சொல்கிறார். உடனே முத்து, ரோகியை சமைக்க சொல்லுங்கள் என்று கிளம்பி விடுகிறார். இதனால் விஜயா, நீ பணத்தை ரெடி பண்ணும் வரை இந்த வீட்டில் இவ்வளவுதான் நம்மளுக்கு மரியாதை. சீக்கிரம் ரெடி பண்ணு என்று திட்டுகிறார். பின் கிச்சனில் ரோகினி தோசை சுட தெரியாமல் சுட்டுக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்து சுருதிக்கு சிரிப்புதான் வந்தது. ரோகினி சமைத்த சாப்பாட்டை வாயில் வைக்க முடியாமல் விஜயா-மனோஜ் எழுந்து சென்று விட்டார்கள். இதனால் ரோகினிக்கு பயங்கர கோபம் வந்தது. அப்போது மீனா, சிட்டியிடம் நீங்கள் ஏன் கடன் வாங்கி இருக்கிறீர்கள்? என்று சொன்னவுடன் ரோகினிக்கு முகமே வியர்த்து போய்விடுகிறது. என்ன சொல்வது என்று புரியாமல் அங்கிருந்து ரோகினி கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து, சிட்டியிடம் ரோகினி பணம் வாங்கி இருக்கும் விஷயத்தை ரவியிடம் சொல்ல, இருவருமே மனோஜிடம் கேட்கிறார்கள். ஆனால், மனோஜ் அதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல்
இருவரையும் திட்டி விட்டு வருகிறார். பின் இதைப் பற்றி மனோஜ், ரோகினி இடம் கேட்க அவரால் எதுவுமே பதில் சொல்ல முடியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full