மனோஜிடம் வசமாக மாட்டிக்கொண்ட ரோகினி, முத்து மீது கடும் கோபத்தில் மீனா - சிறகடிக்க ஆசை

By subhashini · 4/9/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினியை பற்றி மீனா வீட்டில் சொன்னவுடன் விஜயா கோபத்தில் சண்டை போட்டார். கடைசியில் ரோகினி சொன்ன கதையை எல்லோருமே நம்பி விடுகிறார்கள். பின் இதை எல்லாம் மீனா தான் சொன்னார் என்றவுடன் விஜயா பயங்கரமாக திட்டி பேசி இருந்தார். கடந்த வாரம் மீனா-சுருதி இருவருமே உட்கார்ந்து பேய் படம் பார்க்க, பயத்தில் மீனா கத்துகிறார். இதை பார்த்த விஜயா கிண்டலாக பேச, உடனே சுருதி, விஜயாவிற்கு பயத்தை காண்பிக்க நினைத்து, பேய் போல் பயங்கரமாக சவுண்ட் எபெக்ட் எல்லாம் வைத்து பயமுறுத்தி இருந்தார்.

பின் சுருதி செய்த வேலை என்று தெரிந்தவுடன் விஜயா, மீனாவை தான் திட்டி இருந்தார். மறுநாள் ஸ்ருதி வெளியே வரும்போது மீனாவை இடித்ததால் கையில் இருந்த எண்ணெய் கீழே விழுந்தது. அந்த சமயம் வந்த விஜயா வழுக்கி விழுந்தார். ஆனால், அதற்கு காரணம் மீனா என்று திட்டி இருந்தார். இதை எல்லாம் பார்த்த சுருதி, விஜயாவை திட்டி விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி -மனோஜ் இருவருமே விஜயாவை ஏற்றி விடுகிறார்கள். பின் கிச்சனில் இருந்த மொத்த மாவு டப்பாவும் விஜயா மேல் விழுந்ததால் பார்ப்பதற்கு காமெடியாக இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

இதை ஸ்ருதி போட்டோ எடுத்து சோசியல் மீடியா போட்டுவிட்டார். உடனே ரோகினி, ஸ்ருதி- மீனாவை பற்றி தப்பு தப்பாக விஜயாவிடம் சொல்ல, விஜயாவிற்கு கோபம் வந்து அவருடைய அம்மாவிற்கு போன் செய்து வர வைத்து நடந்ததை சொன்னார். உடனே ஆத்திரத்தில் அவர் மீனாவை பார்த்து ரொம்ப கேவலமாக பேசி இருந்தார். அதன்பின் முத்துவிடம் நடந்ததை மீனா சொல்ல, அவர் கோபமாக வீட்டிற்கு வந்தார். பின் ஸ்ருதி-ரவி, முத்து -மீனா ஆகிய நான்கு பேருக்கும் இடையே சண்டை பயங்கரமாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து விஜயா சந்தோசப்பட்டார்.

சீரியல் கதை:

நேற்று எபிசோடில் அண்ணாமலை, எதற்கு இப்படி சண்டை போடுகிறீர்கள்? என்று முத்துவிடம் கேட்க, முத்து நடந்ததை பற்றி சொல்ல, அண்ணாமலைக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சுருதி-மீனாவை பிரிக்க அம்மா இந்த மாதிரி எல்லாம் திட்டம் போடுகிறார். அதனால் தான் அவர்களுக்காக நாங்கள் ஒரு மாஸ்டர் பிளான் போட்டோம் என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை, தேவையில்லாமல் இதை வைத்து வீட்டில் ஒரு சண்டை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய அம்மாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போயிருக்கிறார்.

நேற்று எபிசோட்:

மருத்துவர், அவருடைய நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது என்று சொன்னவுடன் வருத்தப்படுகிறார். அப்போது ரோகினி அம்மா, கிரிஷை பற்றி நினைத்து வருத்தப்பட, ரோகினியும் ஆறுதல் சொல்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் முத்து சவாரியில் ஒரு நபரை அழைத்துக் கொண்டு வருகிறார். அந்த சமயம் பார்த்து மீனாவின் ஸ்கூட்டி முத்து கார் மீது மோதுகிறார். ஏதோ தெரியாத நபர்கள் போல இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது போலீஸ் வந்து விசாரிக்க உடனே முத்து, இவர் என் மனைவி என்று சொல்ல சவாரி வந்த நபர், நீங்கள் சொன்ன பேயாட்டம் பொண்ணு இவர்கள் தானா? என்று கேட்டவுடன் மீனாவிற்கு பயங்கர கோபம் வந்து விடுகிறது.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் ரோகினி இருக்கிறார். மனோஜ்க்கு போன் செய்து ரோகினி, நான் வித்யா உடன் இருக்கிறேன். வர லேட் ஆகும் என்று சொன்னவுடன் அந்த சமயம் பார்த்து ஷோரூமுக்கு வித்யா வருகிறார். உடனே மனோஜ்க்கு சந்தேகம் வருகிறது. அப்போது வித்யாவிடம் ரோகினி சமாளி என்று சொன்னவுடன் வித்யாவும் என்னென்னவோ பொய் சொல்லி சென்று விடுகிறார். இருந்தும், மனோஜுக்கு ரோகினி மேல அதிக சந்தேகம் வருகிறது. மீனாவை சமாதானம் செய்ய கட்டிலுக்கு கொசுவலையை கொடுத்து கட்ட சொல்லி அனுப்புகிறார் முத்து. அதற்குப் பின் வெள்ளைக்கொடியுடன் சமாதானம் செய்ய முத்து வருகிறார். இருந்தும் கோபத்தில் மீனா கத்துகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full