ரோகினியை அடி வெளுத்து வாங்கிய விஜயா , மனோஜ் செய்த வேலை - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அருண், என் காதலை ஒத்துக் கொண்டாயா? என்று கேட்க, நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று சீதா விளையாடி இருந்தார். பின் சீதா, பாதியிலேயே விட்டு விடாதீர்கள் என்று சொன்னவுடன் அருண் கடைசிவரை உன்னுடன் தான் நான் சேர்ந்து வாழ்வேன் என்றார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே மனோஜின் நிலைமையை நினைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போ மீனா, உங்கள் அண்ணன் செய்வது ரொம்ப தவறு. ரோகினி பக்கம் இருக்கும் நியாயத்தை கேட்டு இருக்க வேண்டும். ஆனால், அவர் அதைப் பற்றி எல்லாம் எதுவுமே கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார் என்றார்.
இது எல்லாம் கேட்ட மனோஜ், என் விஷயத்தைப் பற்றி பேச உங்கள் இருவருக்குமே உரிமை கிடையாது. உங்கள் வேலையை பாருங்கள் என்று கோபமாக திட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் ரோகினி, ஸ்ருதிக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது ஸ்ருதி, ரோகினி பற்றி தெரிந்த விஷயத்தை சொன்னவுடன் அவர் ஷாக் ஆனார். பாட்டியை வர வைக்கும் விஷயத்தை சொன்னவுடன் ரோகினிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அமைதியாக இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் பாட்டியை அண்ணாமலை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். பாட்டி வந்த உடனே பாட்டி மனோஜை திட்டி அவர் செய்த வேலையை கேட்டார். அப்போது ஸ்ருதி, ரவி இருவருமே வீட்டிற்கு வந்து விட்டார்கள். பின் ரோகினிக்கு போன் செய்து வர வைக்க சொல்கிறார் பாட்டி. மனோஜ் போன் செய்தும் ரோகினி எடுக்கவே இல்லை. ரொம்ப நேரமாக மனோஜ் ட்ரை பண்ணியுமே ரோகினி எடுக்கவில்லை.
நேற்று எபிசோட்:
அதற்கு பின் போனை எடுத்த ரோகினி அழுதார். உடனே மனோஜ், பாட்டி உன்னை வீட்டிற்கு வரச் சொன்னார் என்று சொன்னவுடன் கோபப்பட்டார். பின் ரோகினி, நான் வீட்டுக்கு வர வேண்டும் என்றால் உன் அம்மா என்னை அடிக்கக்கூடாது, திட்டக்கூடாது என்று கண்டிஷன் எல்லாம் போட்டார். மனோஜிமே ஒத்துக்கொண்டார். அதற்குபின் அண்ணாமலையும் விஜயாவிற்கு போன் செய்தார். ஆனால் விஜயா, போனிலேயே ருத்ரதாண்டவம் ஆடி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, அந்த துரோகி இருக்கும் இடத்திற்கு நான் வரமாட்டேன் என்று சொன்னார். உடனே பாட்டி, போனை வாங்கி விஜயாவிடம் பேசுகிறார். பின் விஜயா வரும் நேரம் பார்த்து ரோகினியும் வந்திருக்கிறார். அவரை பார்த்த உடனே பயங்கரமாக கோபப்படுகிறார். அதற்குப்பின் பாட்டி, ரோகினி எதற்காக பொய் சொன்னாள்? இந்த காரணத்தை கேட்க வேண்டும் என்றவுடன் விஜயா, அதெல்லாம் முடியாது. அவளிடம் பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் விஜயா, தன் மகனை ரோகினியை அடிக்கச் சொல்லி சொல்கிறார். ஆனால், மனோஜ் அமைதியாக இருக்கிறார். இதனால் ஆத்திரத்தில் விஜயா ரோகினியை அடிக்கிறார். உடனே மனோஜ், அடிக்காதீர்கள். இந்த உண்மை எனக்கு ஏற்கனவே தெரியும் என்று பொய் சொல்கிறார். இதனால் மொத்த குடும்பமே ஷாக் ஆகிறது. பின் எல்லோரும் மனோஜ் பக்கம் திரும்பி விட்டார்கள். முத்து, நீ உனக்கு தெரியவே தெரியாது என்று சொன்னாயே, இப்ப எதுக்கு மாத்தி சொல்கிறாய் என்று கேட்டதற்கு, ஏதோ காரணங்களை மனோஜ் செல்கிறார். ஆனால், விஜயாவால் எதுவுமே நம்ப முடியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.