ரோகினிக்கு சப்போர்ட் செய்த மனோஜ், விஜயா வைத்த ஆப்பு - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கோவிலில் முதலில் முத்து-அருண் இருவருமே யார் என்று தெரியாமல் சந்தித்துக் கொண்டார்கள். இதனால் கோபப்பட்டு இருவருமே முறைத்துக்கொண்டார்கள். பின் முத்து- மீனா இருவரும் சீதாவை பார்த்தார்கள். அப்போது சீதா, அருணை அறிமுகம் செய்கிறார். அருணை பார்த்தவுடன் மீனா-முத்து இருவருமே ஷாக் ஆனார்கள். அப்போது முத்துவிற்கு பயங்கர கோபம் வந்து மீனாவிடம் இந்த கல்யாணம் நடக்காது என்று அங்கிருந்து சொல்லிவிட்டு சென்று விட்டார். அருண், நான் இந்த வேலை சஸ்பெண்ட் ஆனதற்கு காரணம் உன் மாமா தான் என்று சொன்னார்.
பின் மீனாவின் அம்மாவை பார்க்க சென்ற முத்து, சீதா ஒருவரை காதலித்தார். அவன் நல்லவனே கிடையாது. அவனால் சீதாவை நன்றாக பார்த்துக்கொள்ள மாட்டான். நான் நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொன்னார். மீனாவின் அம்மாவால் எதுவுமே பேச முடியவில்லை, அமைதியாக இருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு மீனா, சீதா வந்தார்கள். அப்போது சீதா காதலிக்கும் விஷயம் தெரிந்ததால் மீனாவின் அம்மா கோபப்பட்டு அவரை அடித்தார். மீனா, நான் அவரிடம் எடுத்து சொல்லி புரிய வைக்கிறேன். தயவுசெய்து அமைதியாக இருங்கள் என்று தன் அம்மாவை சமாதானம் செய்தார். சீதாவிற்கு சப்போர்ட்டாக மீனா இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
ரோகினி, மனோஜிற்காக சாப்பாடு ஆர்டர் செய்து அனுப்பி வைத்தார். அதை பார்த்தவுடன் மனோஜ் நண்பர், உன் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறாய். ஏன் நீ இப்படி செய்கிறாய்? என் நண்பர் ஒருவர், அவர் மனைவியிடம் பேசவில்லை. அதனால் அவர் மனைவி வேறு ஒருவர் தொடர்பில் இருந்தார் என்று சொன்னார். இதை கேட்டவுடன் மனோஜ்க்கு பயம் வந்தது. பின் வீட்டில் ரோகினி, இல்லாததை பார்த்து மனோஜ் பயப்பட்டார். ஆனால், ரோகினி எங்கும் போகவில்லை. இருந்தாலும் மனோஜ் தன் நண்பன் சொன்னதை நினைத்து பார்த்தார். அதற்குப்பின் முத்துவிடம் மீனா, சீதாவின் காதல் விஷயமாக பேசி இருந்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
அப்போது முத்து, முடியாது. நான் வேறொரு பையனை பார்க்கிறேன். அவன் வேணாம் என்று வாக்குவாதம் செய்தார். இருவரும் இடையே வாக்குவாதம் நடக்கும்போது கோபத்தில் முத்து, மீனாவை அடிக்க வந்தார். இதனால் மீனா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, புது ரெஸ்டாரன்ட் திறப்பதற்கான இடத்தை புரோக்கர் இடம் சொல்லி வைத்தார். ரவி இடமும் சொல்லி புரிய வைத்தார்.
ஆனால், ரவிக்கு புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிப்பதில் விருப்பமே இல்லை. பின் முத்து, ரவி, மனோஜ் மூவருமே மொட்டை மாடியில் சரக்கு சாப்பிட்டு தங்களுடைய மனைவிகளை பற்றி புலம்பி கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட் முத்து-ரவி இருவருமே, நீ அம்மா பேச்சைக் கேட்டு ரோகினியை கஷ்டப்படுத்துகிறாய். இப்படியே செய்தால் உன் நண்பர் சொல்வது போல் ரோகினி, எங்கேயாவது போய்விடுவார் என்று சொன்னவுடன் மனோஜ் பயப்படுகிறார். இன்னொரு பக்கம் சுருதி, மீனா, ரோகினி மூவருமே தங்களுடைய கணவன்மார்கள் செய்வதை பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா- சுருதி இருவரும் நீங்கள் மனோஜை உங்கள் கண்ட்ரோலில் வைக்க பாருங்கள் என்று சொல்கிறார்கள். மறுநாள் காலையில் விஜயாவிடம் மனோஜ், நான் ரோகினியை ஷோ ரூமுக்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னவுடன் அவர் பயங்கரமாக கோவப்பட்டு சண்டை போடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அண்ணாமலை, ரோகினிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். உடனே விஜயா, நீ உன் மனைவியுடன் சந்தோசமாக இரு. ஆனால், என்னுடன் பேசாதே. என் உறவை முடித்துக் கொள் என்றவுடன் மனோஜால் எதுவும் பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் மீனாவிற்கு போன் செய்த சீதா, அருணின் அம்மா வீட்டிற்கு வருகிறார்கள் என்றவுடன் மீனா முத்துவிடம் ஏதேதோ சொல்லிவிட்டார் கிளம்பி விடுகிறார். பின் தன்னுடைய அம்மாவிடம் அருணின் அம்மா வரும் விஷயத்தை மீனா சொல்கிறார். அதன் பின் அருணும், அவர் அம்மாவும் வருகிறார்கள். ஆனால், அருண் வெளியேவே இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது