சீதா காதலுக்காக மீனா எடுத்த முடிவு, எமதர்ம ராஜன் அவதாரம் எடுத்த முத்து - சிறகடிக்க ஆசை

By subhashini · 17/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் உயர் அதிகாரி, அருண் மோசடி செய்தது அறிந்து திட்டி விட்டார். அருணுக்கு போன் செய்த சீதா, எதற்காக இப்படி செய்தீர்கள்? இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தியிருந்தால் நம்ம காதலுக்கு உதவியாக இருந்திருக்கும். நீங்கள் என் மாமாவின் கோபத்தை இன்னும் தூண்டி விட்டீர்கள் என்று கேட்டார். அருணால் எதுவும் பேச முடியவில்லை. அருணின் அம்மாவுமே, நீ செய்தது தவறு தான். இனி சீதா உனக்கு கிடைக்க வாய்ப்பில்லை. நான் வேறு ஒரு பெண்ணை பார்க்கிறேன் என்று சொன்னார். அதற்குப்பின் மீனாவை முத்து கோயிலுக்கு அழைத்துப் போனார். அங்கு தனக்கு கிடைத்த தங்க செயினை சீதாவிற்கு போட்டு அழகு பார்த்தார் முத்து.

இன்னொரு பக்கம் ரோகினி, நீங்கள் அத்தையை எப்படியாவது சாமியாரிடம் அழைத்து வந்து விடுங்கள். நானும் மனோஜூம் சேருவதற்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார். அதனால் பார்வதியுமே விஜயாவை சாமியாரை பார்க்க அழைத்தார். கடைசியில் சீதா, மீனா இருவருமே அருணை சந்தித்தார்கள். அப்போது அருண், இரண்டு வீட்டிலும் எங்களுடைய கல்யாணத்திற்கு எதிர்ப்பு இருக்கிறது. அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். நானும் சீதாவும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்கிறோம் என்றார். இதனால் மீனா ஷாக் ஆனார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் அருண், நாங்கள் திருமணம் செய்து கொள்வது நம் மூன்று பேர் தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டாம். பிரச்சனை எல்லாம் முடித்துவிட்டு ஊரறிய நான் சீதாவை திருமணம் செய்து கொள்கிறேன். அவள் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொன்னார். அதற்கு மீனா, எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். யோசித்து சொல்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் பார்வதி, விஜயா, மனோஜ் மூவருமே சாமியாரை பார்க்க போனார்கள். அங்கு சாமியார், நீ உன் மகனுக்கு கட்டிய கயிறை கழட்டி விடு. அந்த கயிறால் உனக்கு ஆபத்திருக்கிறது என்று சொன்னார். உடனே விஜயா, அந்த கயிரை கழட்டி விட்டார்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் சாமியார், உன் மூத்த மருமகளால் தான் உன்னுடைய உயிர் காப்பாற்றப்படும். மகனையும் மருமகளையும் பிரித்து வைக்காதே என்று ஏதேதோ கதை அடித்து விட்டார். இன்னொரு பக்கம் முத்து, சீதாவிற்காக ஒரு மாப்பிள்ளையை அழைத்து வந்தார் ஆனால், அவர் டிரைவர் என்று தெரிந்தவுடன் மீனா வேண்டாம் என்றார். அதற்கு முத்து, சரி இந்த மாப்பிள்ளை வேண்டாம். ஆனால், அருணை மட்டும் நான் சீதாவிற்கு திருமணம் செய்து வைக்க ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னார். மீனாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பின் சாமியின் சம்மதத்தை கேட்கலாம் என்று சீட்டில் எழுதி போட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, சீட்டு குலுக்கி போடுகிறார். அதை சீதா தான் எடுக்கிறார். அதில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறது. இதனால் மீனா, கடவுளுடைய விருப்பத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ அருணை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள். நான் உன் மாமாவை சமாளித்துக் கொள்கிறேன் என்கிறார். அதனால் சீதா ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் இதைப்பற்றி சீதா, அருண் இடம் போன் செய்து சொல்கிறார். அதற்குப்பின் அருணை சந்தித்த மீனா கோபப்பட்டு பேசுகிறார். இந்த விஷயத்தில் என் புருஷனை ஜெயித்ததாக நினைக்காதீர்கள். சீதா அப்பா இல்லாததை நினைத்து வருத்தப்பட்டால் அதற்காக தான் இதற்கு நான் ஓற்றுக் கொண்டேன் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு இன்னொரு பக்கம் முத்து, ராமா குரூப்பில் இருந்த நபர் காசு தரவில்லை. அதனால முத்து, எமதர்மராஜா வேடமணிந்து வீட்டிற்கு வருகிறார். முத்துவை பார்த்தவுடன் விஜயா பயப்படுகிறார். ஏற்கனவே ஜோசியர், உன் வீட்டிற்கு எமதர்மன் வருவார் என்று சொல்லி இருந்தார். அதை நினைத்து பார்த்து உண்மையாலுமே எமதர்மன் வந்து விட்டானோ என்று கதறுகிறார் விஜயா. முத்து இது தான் சந்தர்ப்பம் என்று தன்னுடைய அம்மாவை ரொம்பவே பயமுறுத்துகிறார். அப்போது வந்தா அண்ணாமலை, என்னடா வேஷம் முத்து என்று கேட்க, விஜயா ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full