மனோஜ் - விஜயாவை பெல்ட்டால் அடி வெளுத்து வாங்கிய மீனா, ரோகினியின் அடுத்த பிளான்- சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கல்லூரியில் தேர்வு எழுத முடியாததால் சத்யா வீட்டுக்கு வந்திருந்தார். இதனால் முத்து, கல்லூரி முதல்வர் முன்பு முத்து குடிப்பது போல நடித்து மீனாவை அடித்தார். உடனே அந்த கல்லூரி முதல்வர், மீண்டும் நீ கல்லூரியில் சேர்ந்து கொள் என்று சத்யாவிடம் சொல்ல, மீனா-சத்யா சந்தோசப்படுகிறார்கள். ஆனால், முத்து மீது போலீசில் புகார் கொடுத்ததால் அவரை போலீஸ் கைது செய்து இருந்தது. நடந்த உண்மையை மீனா போலீசிடம் சொல்ல, அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முத்துவை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று மீனா, ஸ்ருதிக்கு போன் செய்து நடந்ததை சொல்லி உதவி கேட்டார்.
இதுதான் சந்தர்ப்பம் என்று ஸ்ருதி அம்மா, ஒன்னுக்கு ரெண்டு ஆக முத்து அம்மாவிடம் பேசி இருந்தார்.
பின் வேதனையில் வீட்டிற்கு வந்த மீனாவை எல்லோருமே ஒன்று கூடி டார்கெட் செய்து பேச, அண்ணாமலை, நீங்கள் செய்தது தப்பு என்று கோபப்பட்டு பேசி இருந்தார். இதை பார்த்து விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனில் முத்து எந்த தவறும் செய்யவில்லை என்று அவரை விடுதலை செய்தார்கள். அதற்குப்பின் ஸ்ருதிக்கு உடம்பு சரியில்லாததால் வேலைக்கு லீவு போட சொல்லி கேட்க, ரவியின் ஓனர் கண்டிப்பாக வந்தே தீர வேண்டும் என்று சொல்வதால் ரவி கிளம்பி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
இதனால் கோபப்பட்ட ஸ்ருதி வீட்டை விட்டு கிளம்பி இருந்தார். மீனா எவ்வளவு தடுத்துமே சுருதி கேட்கவில்லை. அப்போது வந்த விஜயா, சுருதியை சமாதனம் செய்தார். ஸ்ருதி கேட்காமல் சென்று விட்டார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்து ரவிக்கு போன் செய்து நடந்ததை சொல்லி ஸ்ருதியை திட்டி இருந்தார். நேற்று எபிசோட்டில், சுருதியை எப்படியாவது சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வா என்று மீனா அறிவுரை சொல்ல, ரவியும் ஏற்று கொண்டார். அதற்குப்பின் மீனாவின் உறவினர் வீட்டிற்கு வர, அவர்களுக்கு சாப்பாடு போட்டு மீனா உபசரித்து இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதை பார்த்த விஜயா வழக்கம் போல் மீனாவையும் அவருடைய உறவினர்களையும் ரொம்ப கேவலமாக பேசி இருந்தார். இதனால் அவர்கள் பாதி சாப்பாட்டிலேயே சென்று விட்டார்கள். பின் நடந்ததை தன்னுடைய தோழிகளிடம் மீனா சொல்ல, அவர்கள் உன் மாமியாரை பெல்ட் எடுத்து வெளுத்து வாங்கு என்று சொல்லி இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ்க்கு நண்டு சூப்பு வை என்று விஜயா சொல்ல, மீனா முடியாது என்று மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது.
இன்றைய எபிசோட்:
அதற்குப்பின் கோபத்தில் மனோஜ், மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி கண்டமேனிக்கு பேசி இருந்தார். இதனால் கோபத்தில் மீனா பெல்ட்டை எடுத்துக்கொண்டு வந்தார். இந்த நிலையில் இன்று எபிசோட்டில், மனோஜ்- ரோகினி- விஜயா மூவரையுமே சாரா மாறியாக பெல்ட்டில் மீனா அடிக்கிறார். அவர்களும் வலி தாங்க முடியாமல் கத்துகிறார்கள். கடைசியில் அது மீனா கண்ட கனவு. மீனா அவர்கள் மூவரையும் அடிப்பது போல கனவு காண்கிறார். பின் நிஜத்தில் மீனா நடந்தது நினைத்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அவர்கள் மூவருமே என்ன? எதற்கு சிரிக்கிறாய்? என்று கேட்டதற்கு, மீனா எதுவுமே சொல்லாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த முத்து, எதற்கு சிரிக்கிறாய்? என்று கேட்டதற்கு நடந்ததை மீனா முத்துவின் காதில் சொல்கிறார். அவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார். முத்து- மீனா இருவரும் சிரிப்பதை பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்து கத்துகிறார். ஆனால், அவர்கள் சிரிப்பதை நிறுத்தவில்லை. இன்னொரு பக்கம் ரவி, சுருதிக்கு டைமன் மோதிரம் கொடுத்து சமாதானம் செய்து விடுகிறார். இதனால் சுருதி அப்பா அம்மாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. இன்னொரு பக்கம் ரோகினி, தூக்க மாத்திரை கலந்து தந்து முத்துவின் மொபைலை எடுக்க திட்டம் போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.