முத்து செய்த சாதனை, ரோகினியின் உண்மை முகத்தை அறிந்த ஸ்ருதி- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் சத்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் கோவிலில் கூல் ஊத்த இருப்பதாக மீனாவிடம் சொன்னார்கள். ஆனால், உன்னுடைய புருஷன் வரக்கூடாது என்று சத்யா சொன்னதால் எப்படி சொல்வது என்று தயங்கி இருந்தார் மீனா. இதை முத்து கண்டுபிடித்து, நீ போகவே கூடாது என்று சொல்ல, மீனாவும் தன்னுடைய அம்மாவின் கட்டாயத்தால் கோவிலுக்கு போய் இருந்தார். இதையெல்லாம் விஜயா பார்த்து முத்துவிடம் சொல்ல, அவர் கோயிலுக்கு போனார்.
அங்கு முத்துவை பார்த்த மீனா, அதிர்ச்சியாகி நிற்க, முத்துவும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு வந்து விட்டார். பின் முத்து, குடித்து விட்டு வந்து மீனாவிடம் சண்டை போட்டார். இதை பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். மறுநாள் முத்து வேலை செய்யும் இடத்திற்கு வந்த மீனாவின் அம்மா, தங்கை இருவருமே மன்னிப்பு கேட்க, முத்து கோபமாக பேசி அங்கிருந்து கிளம்பி விட்டார். அதன் பின் மீனாவின் நிலைமை புரிந்து கொண்டு வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிற்கு அல்வா கொடுத்து மன்னிப்பு கேட்கிறார்.
சிறகடிக்க ஆசை:
இருவரும் சந்தோசமாக பேசி சாப்பிடுவதை பார்த்து விஜயா வயிறு எறிகிறார். மேலும், சீதா வேலை செய்யும் இடத்திற்கு மீனா சென்றார். அந்த சமயம் பார்த்து ரோகினி ஹாஸ்பிடலுக்கு வந்தார். ரோஹினியை மீனா பார்த்து விடுகிறார். உடனே சீதா, ரோகினியை பற்றி விசாரிக்கிறார். அப்போது தான் ரோகினி இரண்டாவது குழந்தைக்கான டெஸ்ட்டுக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்தது. இதை அறிந்த உடன் மீனா அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார். யார் எது சொன்னாலும் காதில் கேட்காமல் அமைதியாகவே இருந்தார்.
சீரியல் கதை:
கடைசியில் ரோகினி- மனோஜ் இருவரும் ஸ்வீட் கொண்டு வந்து தந்தவுடன் விஜயா, ரோகினி கர்ப்பமாக தான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டார். ஆனால், ஷோரூமில் நல்ல வியாபாரம் ஆகிறது என்று சொன்னவுடன் வீட்டிற்கு குழந்தை வந்தால் தானே நன்றாக இருக்கும் என்று விஜயா சொல்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், மீனா அதிர்ச்சியில் இருந்து மீண்டே வரவில்லை. விஜயா சொல்லும் வேலைகளை கூட காதில் வாங்கவில்லை.
இன்றைய எபிசோட்:
அப்போது ரோகினி, கடையில் நல்ல வியாபாரம் ஆனது என்று சுவீட் கொடுக்க, மீனா அதிர்ச்சியிலேயே இருக்கிறார். ரோஹிணியை மட்டும் பார்த்து இருக்கிறார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு அண்ணாமலை, ஸ்ருதி, ரவி எல்லோருமே வந்து முத்து செய்த சாதனையை புகழ்கிறார்கள். யாருக்குமே புரியவில்லை. கடைசியில் முத்து, தன்னுடைய காரில் ஒரு பெண்ணிற்கு பிரசவம் பார்த்திருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை பலருமே பாராட்டி இருந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
வழக்கம் போல் மனோஜ்- விஜயா கிண்டல் அடித்து சாதனை ஊரில், காரில் எல்லாம் நடக்கிறது. வீட்டில் எதுவும் இல்லை என்று சொன்னவுடன் அண்ணாமலை கூடிய விரைவில் நடக்கும் என்று சொல்கிறார். பின் விஜயா, மீனாவை திட்ட முத்து சண்டைக்கு போகிறார். ஆனால், எல்லோரும் பேசிக் கொண்டிருக்க மீனா மட்டும் அமைதியாக இருக்கிறார். கடைசியில் ஸ்ருதி, ஏன் இப்படி இருக்கிறீர்கள்? முத்து ஏதாவது சண்டை போட்டாரா? என்று கேட்டதற்கு மீனா, ரோகினி இரண்டாவது முறை கர்ப்பமாக டெஸ்ட் எடுத்து இருக்கிறார் என்று சொன்னவுடன் சுருதி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.