ரோகினி போட்ட திட்டம் பலித்ததா? சந்தோஷத்தில் மீனா குடும்பம் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 17/10/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதிக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தும் ரவி வேலைக்கு சென்றதால், கோபப்பட்ட ஸ்ருதி வீட்டை விட்டு கிளம்பி இருந்தார். விஜயா, சுருதியை சமாதனம் செய்தும் அவர் கேட்காமல் சென்றதால் பயங்கர கோபம் வந்து ரவிக்கு போன் செய்து நடந்ததை சொல்லி ஸ்ருதியை திட்டி இருந்தார். இந்த வாரம் மீனாவின் உறவினர் வீட்டிற்கு வர, அவர்களுக்கு சாப்பாடு போட்டு மீனா உபசரித்து இருந்தார். இதை பார்த்த விஜயா வழக்கம் போல் மீனாவையும் அவருடைய உறவினர்களையும் ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்.

இதனால் அவர்கள் பாதி சாப்பாட்டிலேயே சென்று விட்டார்கள். பின் நடந்ததை தன்னுடைய தோழிகளிடம் மீனா சொல்ல, அவர்கள் உன் மாமியாரை பெல்ட் எடுத்து வெளுத்து வாங்கு என்று சொல்லி இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ்க்கு நண்டு சூப்பு வை என்று விஜயா சொல்ல, மீனா முடியாது என்று மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. உடனே கோபத்தில் மனோஜ், மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி கண்டமேனிக்கு பேசி இருந்தார். இதனால் கோபத்தில் மீனா பெல்ட்டை எடுத்துக்கொண்டு வந்தார்.

சிறகடிக்க ஆசை:

மனோஜ்- ரோகினி- விஜயா மூவரையுமே சாரா மாறியாக பெல்ட்டில் மீனா அடித்தார். அவர்களும் வலி தாங்க முடியாமல் கத்தினார்கள். கடைசியில் அது மீனா கண்ட கனவு. அதை நிஜத்தில் நடந்தது போல மீனா நினைத்து விழுந்து விழுந்து சிரித்தார். அவர்கள் மூவருமே என்ன? எதற்கு சிரிக்கிறாய்? என்று கேட்டதற்கு, மீனா எதுவுமே சொல்லாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த முத்து, எதற்கு சிரிக்கிறாய்? என்று கேட்டதற்கு நடந்ததை மீனா முத்துவின் காதில் சொன்னார். அவரும் விழுந்து விழுந்து சிரித்தார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்து கத்தி இருந்தார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் ரவி, சுருதிக்கு டைமன் மோதிரம் கொடுத்து சமாதானம் செய்து இருந்தார். நேற்று எபிசோட்டில் சுருதி- ரவி வீட்டிற்கு வந்தார்கள். அதை பார்த்தவுடன் விஜயா, ஷாக்காகி எதற்கு அவளை அழைத்துக் கொண்டு வந்தாய்? என்று கேட்க, ஸ்ருதி- விஜயா இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. பின் அண்ணாமலை, ஸ்ருதிக்கு அறிவுரை சொல்லி இருந்தார். பின் ரோகினி, முத்துவின் மொபைலை எடுக்க அவர் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து இருந்தார். இது தெரியாமல் முத்து-மீனா இருவருமே குடித்து விட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து- மீனா இருவருமே நன்றாக அசந்து தூங்கி விடுகிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று மொபைலை எடுக்க ரோகிணி வருகிறார். அந்த சமயம் பார்த்து வந்து விஜயா, என்ன செய்கிறாய்? என்று கேட்கிறார். தூக்கம் வரவில்லை, நடக்கிறேன் என்று சொல்லி ரோகினி சமாளித்தார். அதற்குப்பின் மொபைலை எடுக்க ரோகினி வெளியே வருகிறார். அப்போது மனோஜ் வந்ததால் மீண்டும் அவரால் போன் எடுக்க முடியவில்லை. கடைசியில் பொழுதே விடிந்து விடுகிறது.

சீரியல் ட்ராக்:

மேலும், முத்து- மீனா இருவருமே சிரித்ததை நினைத்து வகுப்பில் விஜயா புலம்பி கொண்டு இருக்கிறார். இதைப்பற்றி பார்வதி இடம் சொல்லி மீனாவிடம் கேட்க சொல்கிறார். பார்வதியும் போன் செய்து கேட்க, அது ரகசியமாகவே இருக்கட்டும் என்று மீனா சொல்லி விடுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ் கடையில், அவர் வைத்த பீம்பாய் அடியாட்கள் கூட்டிட்டு வந்து பணத்தைக் கேட்டு மிரட்டுகிறார். பணம் கொடுக்காததால் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் அந்த ஆட்கள் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். அதற்குப்பின் கோவிலில் சீதாவை பார்த்து மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்கிறார்கள். இதை மீனாவுக்கு போன் செய்து அவர் அம்மா சொல்ல சந்தோசப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full