அண்ணாமலை சொன்ன வார்த்தையால் கதறி அழும் மீனா, நடந்தது என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ பீரோவில் பணம் இல்லை என்று பார்வதி சொன்னவுடன் விஜயா ஷாக் ஆகி தேடிப் பார்த்தார். ஆனால், அங்கு பணம் இல்லை. பார்வதி உடைய நகைகள், பணமெல்லாம் இருந்தது. ஆனால், விஜயா பணம் மட்டும் இல்லை. இதனால் மீனா தான் இதற்கு காரணம் என்று விஜயா சொல்லி, வீட்டில் பார்வதி பணம் காணவில்லை. மீனா தான் எடுத்திருப்பார் என்று ட்ராமா போட்டார். இதை கேட்டு மீனாவுக்கு ஆத்திரம் தாங்க முடியலவில்லை, பயங்கரமாக அழுதார். அண்ணாமலை-முத்து இருவரும் மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். ஆனால், விஜயா கேட்கவில்லை.
மீண்டும் மீண்டும் மீனா மீது தான் பழி போட்டாள். நேற்று எபிசோட்டில் முத்து , உண்மையை கண்டுபிடிக்க பார்வதி வீட்டிற்கு போனார். அப்போது முத்து கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பார்வதி தவித்தாள். உடனே முத்து, போலீஸ்- புகார் என்று சொன்னவுடன் பார்வதி, பயத்தில் அது என்னுடைய பணமில்லை. விஜயா பணம். சத்யா கேஸ் மூலமாக வக்கீல் கொடுத்தது என்று சொன்னவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டிற்கு வந்த முத்து, மீனா தான் பணத்தை திருடினாள் என்று ஒரு ட்ராமா போட்டார்.
சிறகடிக்க ஆசை:
எல்லோரும் நம்பிவிட்டார்கள். இருந்தாலும் மீனா எந்த தவறும் செய்யவில்லை என்று அண்ணாமலை உறுதியாக இருந்தார். வழக்கம்போல் மனோஜ்- விஜயா இருவருமே மீனாவை திட்டி பேசி இருந்தார்கள். கடைசியில் முத்து, மீனா பணத்தை எடுக்கவில்லை. இந்த எல்லா வேலையும் செய்தது அம்மா தான் என்று சொன்னவுடன் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்தார். பின் அண்ணாமலை கோபப்பட்டு விஜயாவை திட்டி மீனாவிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். ஆனால், விஜயா முடியாது என்றார். நேற்று எபிசோடில் அண்ணாமலை, உன்னால் தான் முத்து-மீனா கஷ்டப்பட்டு இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அவர்கள் இழந்த மொத்த பணத்தையும் நீதான் கொடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு விஜயா முடியாது என்று மறுத்தார். உடனே ஸ்ருதி, விஜயாவிற்கு எதிராக பேசி இருந்தார். ஆனால், விஜயா பணம் தர முடியாது என்று சொன்னதால் அண்ணாமலை அந்த பணத்தை தருவதாக வாக்குறுதி கொடுத்தார். பின் விஜயா, மனோஜ்- ரோகினி இருவரிடமே நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது மனோஜிடம் பணத்தை கேட்க, அவர் இல்லை என்று மறுத்து விட்டார். பின் ரோகினி இடம் கேட்க, அவருமே ஏதேதோ காரணத்தை சொன்னார்.
சீரியல் ட்ராக்:
உடனே விஜயா, மலேசியாவிற்கு டிக்கெட் போடு. உங்க அப்பாவை சந்தித்து பணம் வாங்கலாம் என்று சொன்னதற்கு ரோகினி ஷாக்காகி, நான் உங்களுக்கு பணத்தை ரெடி பண்ணி தருகிறேன் என்று சொன்னார். பின் மனோஜ் இடம் ரோகினி பணம் கேட்க, பார்ட்டிலேயே செலவாகிவிட்டது என்று மனோஜ் சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதமானது. பின் பார்வதி வீட்டிற்கு சென்ற ரோகினி, வீட்டில் நடந்ததை பற்றி சொல்லி பண உதவி கேட்டார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ரோகினி 3 லட்சம் ரூபாய் பணத்தை ரெடி பண்ணி விஜயாவிடம் கொடுக்கிறார்.
https://www.youtube.com/watch?v=1KAzLhQhESk
சீரியல் ப்ரோமோ:
அதை விஜயா, அண்ணாமலை இடம் கொடுத்து யாரும் என் மீது குறை சொல்ல வேண்டாம். பழியும் போட வேண்டாம் என்று சொல்கிறார். பின் விஜயா, பார்வதிக்கு போன் செய்து பணம் காணாமல் போகவில்லையா? அங்கே தான் இருக்கிறதா? என்று சொன்னவுடன் முத்துவிற்கு கோபம் வந்தது. உடனே அண்ணாமலை, உன்னால் மீனா குடும்பம் தான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று கேட்டவுடன், ஒருதலை பட்சமாக பேச வேண்டாம் என்று விஜயா சொல்கிறார். உடனே அண்ணாமலை, மீனாவிற்கு அப்பா இல்லை. அந்த இடத்திலிருந்து நான் தான் பேசுவேன் என்று சொன்னவுடன் அண்ணாமலை காலில் விழுந்து மீனா அழுகிறார்.