வீட்டுக்கு தெரியாமல் சீதாவுக்கு திருமண ஏற்பாடு செய்யும் மீனா, முத்துவுக்கு தெரிய வருமா? சிறகடிக்க ஆசை

By subhashini · 23/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணியின் பர்த்டே பார்ட்டிக்கு பாவாடை தாவணி ட்ரஸ் கோடில் பார்வதி- விஜயா இருவரும் போனார்கள். இதை பார்த்த மொத்த குடும்பமே ஷாக் ஆனது. முத்து- அண்ணாமலை இருவருமே இந்த கோலத்துடன் போக வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் கேட்கவில்லை சந்தோசமாக கிளம்பி போனார்கள். பார்ட்டியில் எல்லோரிடமும் விஜயாவை சிந்தாமணி அறிமுகம் செய்து இருந்தார். அதற்குப்பின் கேக் வெட்டி சந்தோஷமாக பிறந்த நாள் பார்ட்டியை சிந்தாமணி கொண்டாடி இருந்தார்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று சிந்தாமணி வீட்டில் நடந்தது. இன்னொரு பக்கம் மனோஜ்- ரோகினி இருவருமே ஷோரூம்விற்கு சென்றிருந்தார்கள். அப்போது ரோகினி, விஜயாவுக்கு ஆன்லைனில் புடவை ஆர்டர் செய்த விஷயத்தை மனோஜிடம் சொன்னார். அந்த சம்பவம் பார்த்து போன் செய்து ரோகினி அம்மா, கிரிஷ் உன்னிடம் பேச வேண்டுமாம். நேரில் வர முடியுமா? என்றெல்லாம் கேட்டார். அதற்கு ரோகினி வருகிறேன் என்று போனை வைத்துவிட்டு மனோஜிடம் பொய் சொல்லி அங்கிருந்து கிளம்பி இருந்தார். விஜயா, சிந்தாமணியின் வீட்டில் பார்ட்டியை என்ஜாய் பண்ணிக் கொண்டிருந்தார்.

சிறகடிக்க ஆசை:

அப்போது அங்கு வந்த சிந்தாமணியின் தோழி, விஜயாவின் கழுத்தில் இருக்கும் செயினை பார்த்து, இது என்னுடைய திருட்டு போன செயின். உங்களிடம் எப்படி வந்தது? நீங்கள் தான் திருடினீர்களா? என்று கேட்டார். உடனே விஜயா, இது என்னுடைய கோடீஸ்வரி மருமகள் வாங்கி தந்தது என்றார். அதற்கு சிந்தாமணியின் தோழி, என்னுடைய செயினுக்கு பின் என்னுடைய கணவர் பெயர் இருக்கும் என்று சொன்னார். பின் அந்த செயினை வாங்கி பார்த்தார்கள். அதில் அவர் சொன்னது போல தான் இருந்தது. இதை பார்த்து விஜயா ஷாக் ஆனார். பின் விஜயா அசிங்கப்பட்டு கோபத்திலேயே வீட்டுக்கு வந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

அந்த சமயம் பார்த்து ரோகினி, விஜயாவிற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த புடவையை கொடுத்தார். அதை பிரித்து பார்த்த விஜயா, இது எந்த கடையில் திருடினாய்? என்று ரோகினியை அடி வெளுத்து வாங்கி இருந்தார். அப்போது விஜயா, எனக்கு இவள் கொடுத்த செயின் திருட்டு நகை. எனக்கு இவள் பொய்காரி என்று நினைத்தேன். ஆனால், இவர் திருடின்னு இப்பதான் தெரிகிறது என்று சொன்னார். ரோகினிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பின் அண்ணாமலை, இதை பற்றி ரோகினி இடம் கேட்டார். அதற்கு ரோகினி, நான் எனக்கு தெரிந்தவர் மூலம் வாங்கினேன். நான் நிஜமாகவே திருடவில்லை. என்னை நம்புங்கள் என்று ரொம்ப எமோஷனாக அழுதார். பின் வீட்டில் உள்ள எல்லோரும் ரோகினிக்கு அறிவுரை சொன்னார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், பணத்தை எப்படியாவது வாங்கிக் கொண்டு வா. அப்போதான் அம்மா உன் மீது கோபப்பட மாட்டார் என்று சொல்கிறார். உடனே கோபத்தில் ரோகினி, நீ எப்போதுமே எனக்கு சப்போர்ட் செய்ய மாட்டாயா? என்று மனோஜ் இடம் சண்டை போடுகிறார். அதற்கு மனோஜ், நீ செய்த காரியம் அப்படி இருக்கிறது என்று வாக்குவாதம் செய்கிறார். இன்னொரு பக்கம் சீதா யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்யப் போவது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதே போல் மீனாவும் முத்துவிற்கு தெரியாமல் திருமணம் செய்யப்போவதை நினைத்து வேதனை பட்டு கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

மறுநாள் காலையில் சீதா ரெஜிஸ்டர் மேரேஜ்க்காக தயாராகி கிளம்புகிறார். இன்னொரு பக்கம் மீனாவும் தன்னுடைய தங்கையின் திருமணத்திற்கான மாலைகள் தயார் செய்து கிளம்புகிறார். அப்போது முத்து, எங்கு போகிறாய் என்று கேட்கிறார். மீனா, தெரிந்தவர் கல்யாணத்திற்கு மாலை கொடுக்கப் போகிறேன் என்று சொல்கிறார். பின் முத்து, அந்த மாலையை போட்டோ எடுத்துக் கொள்கிறார். முத்துவுக்கு தெரியாமல் செய்வதை நினைத்து மீனா குற்ற உணர்ச்சி படுகிறார். இருந்தாலும் தன் தங்கையின் வாழ்க்கைக்காக எதுவும் சொல்லாமல் மீனா கிளம்பி விடுகிறார். ரெஜிஸ்டர் ஆபீசில் சீதாவை பார்த்து மீனா ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். பின் திருமணத்திற்கான வேலைகள் எல்லாம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் முருகன் ரெஜிஸ்டர் ஆபீஸ் வர சொல்லி முத்துவை அழைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full