சீதா-அருணின் ரெஜிஸ்டர் மேரேஜுக்கு உதவி செய்யும் மீனா, முத்துவுக்கு தெரிய வருமா? சிறகடிக்க ஆசை

By subhashini · 19/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, சீட்டு குலுக்கி போட்டார். அதை சீதா தான் எடுத்தார். அதில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். இதனால் மீனா, கடவுளுடைய விருப்பத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ அருணை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள். நான் உன் மாமாவை சமாளித்துக் கொள்கிறேன் என்றார். அதனால் சீதா ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் இதைப்பற்றி சீதா, அருண் இடம் போன் செய்து சொன்னார். அதற்குப்பின் அருணை சந்தித்த மீனா கோபப்பட்டு பேசி இருந்தார். இந்த விஷயத்தில் என் புருஷனை ஜெயித்ததாக நினைக்காதீர்கள். சீதா அப்பா இல்லாததை நினைத்து வருத்தப்பட்டால் அதற்காக தான் இதற்கு நான் ஓற்றுக் கொண்டேன் என்றார்.

இன்னொரு இன்னொரு பக்கம் முத்து, ராமா குரூப்பில் இருந்த நபர் காசு தரவில்லை. அதனால முத்து, எமதர்மராஜா வேடமணிந்து வீட்டிற்கு வந்தார். முத்துவை பார்த்தவுடன் விஜயா பயப்பட்டார். ஏற்கனவே ஜோசியர், உன் வீட்டிற்கு எமதர்மன் வருவார் என்று சொல்லி இருந்தார். அதை நினைத்து பார்த்து உண்மையாலுமே எமதர்மன் வந்து விட்டானோ என்று கதறுகிறார் விஜயா. முத்து இது தான் சந்தர்ப்பம் என்று தன்னுடைய அம்மாவை ரொம்பவே பயமுறுத்துகிறார். அப்போது வந்தா அண்ணாமலை, என்னடா வேஷம் முத்து என்று கேட்க, விஜயா ஷாக் ஆனார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் முத்து தான் எமதர்மராஜா வேடத்தில் வந்தது என்று தெரிந்ததுமே விஜயா திட்டினார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே எதற்காக இந்த வேஷம்? ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டார்கள். அப்போது டிராமா குரூப்பில் இருந்த நபர், சீக்கிரம் வேசத்தை கழட்டுங்கள். எனக்கு நேரம் ஆகிறது என்று சொன்னவுடன் முத்துவும் அதை எடுத்து கொடுத்தார். விஜயா ரொம்பவே பயந்து விட்டார். அதற்குப்பின் முத்து தான் போட்ட எமதர்மராஜா வேடத்தை பற்றி மீனாவிடம் பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் விஜயா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய கனவில், விஜயா இறந்து விட்டார். அண்ணாமலைக்கு வீட்டில் உள்ள எல்லோருமே கட்டாயப்படுத்தி வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். இதனால் தூக்கத்திலேயே விஜயா வேண்டாம், வேண்டாம் என்று கத்தினார். அண்ணாமலை, விஜயாவை எழுப்பி அமைதியாக தூங்கு என்றார். அப்போதான் அது கனவு என்று புரிந்து விஜயா பெருமூச்சு விட்டார். மறுநாள் காலையில் சாமியார் சொன்னது போல் விஜயா சிவப்பு புடவை கட்டியிருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே ஒரு கீரை விற்றுக்கும் பெண்ணுடன் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தார். கனவில் அண்ணாமலை திருமணம் செய்த பெண் அவர் தான் என்பதால் விஜயா ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் அந்தப் பெண்ணை பார்த்து விஜயா பயங்கரமாக திட்டுகிறார். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன ஆனது? என்று அண்ணாமலை விசாரிக்கிறார். ஆனால், விஜயா உண்மையை சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். அதற்குப் பின் விஜயா, மனோஜ்- ரோகினி இருவரையும் சாமி ரூமுக்கு அழைத்து சென்று, நீ இனி மனோஜ் ஷோரூமிற்கு போ. நீ பொய்யாக சொன்ன கோடீஸ்வரி என்ற விஷயத்தை உண்மையாக்கு. நீ கோடீஸ்வரி ஆனால் தான் இந்த வீட்டில் மரியாதை என்று ரோகினியை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். இதனால் மனோஜ்- ரோகினி இருவருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அருண், ரிஜிஸ்டர் மேரேஜிக்கு தேவையான எல்லா வேலையும் ஏற்பாடு செய்து விட்டேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

சீதா பயமாக இருக்கிறது என்று சொல்கிறார். அப்போது மீனா, நான் சீதாவிற்காக தான் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறேன். மற்றபடி எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து வந்த சத்யா, நான் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ணி விட்டேன் என்று சொல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார். மீனா-சீதாவுக்கு ரொம்ப சந்தோசம். பின் இதைப்பற்றி முத்துவிடம் சொல்ல சத்யா கிளம்புகிறார். இன்னொரு பக்கம் முத்துவின் நண்பர் முருகன் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்வதற்காக முத்துவை அழைக்கிறார். முத்துவுமே சம்மதிக்கிறார். அந்த சமயம் வந்த சத்யா, தான் தேர்வில் பாஸ் ஆனதை பற்றி சொல்ல, முத்து சந்தோஷத்தில் எல்லோருக்குமே விருந்து போட என்று கொண்டாடுகிறார். கடைசியில் பார்வதி, சிந்தாமணியின் பிறந்தநாளுக்கு போக டிரஸ் வாங்கி வந்து விஜயாவிடம் கொடுக்கிறார். விஜயா-பார்வதி போட்டு இருக்கும் ட்ரஸை பார்த்து முத்து ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full