மீனா கொடுத்த பிரியாணியால் விஜயாவிற்கு வந்த சோதனை, அண்ணாமலை சொன்ன வார்த்தை- சிறகடிக்க ஆசை

By subhashini · 10/9/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரோகினி-விஜயா செய்த வேலையால் ஸ்ருதி-ரவி, முத்து -மீனா ஆகிய நான்கு பேருக்கும் இடையே சண்டை பயங்கரமாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். ஆனால், இது எல்லாம் நாடகம் என்று அண்ணாமலையிடம் முத்து சொல்லி இருந்தார். பின் மீனாவின் ஸ்கூட்டி, முத்து கார் மீது மோத, இருவருக்கும் சண்டை வந்து கோபத்தில் மீனா இருந்தார். பின் முத்து அல்லவா கொடுத்து சமாதானம் செய்தார்.

இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜ்க்கு போன் செய்து பொய் சொல்லி இருந்தார். ஆனால், மனோஜ்க்கு சந்தேகம் வந்து ரோஹினிடம் கேட்க, அவர் ஏதோ ட்ராமா செய்து மனோஜை நம்ப வைத்தார். பின் முத்து, மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போயி தத்தெடுப்பது பற்றி பேச, ரோகினி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கடைசியில் முத்து, யோசித்து முடிவெடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்ப, இதை ரோகினி இடம் அவருடைய அம்மா சொன்னவுடன் ரோகினி ஆவேசப்பட்டு கத்தி இருந்தார். பின் முத்து- மீனா இருவருமே கிரிஷ்யை தத்தெடுப்பது பற்றி அண்ணாமலையிடம் பேச, அவர் வீட்டில் எல்லோரிடமும் பேசி முடிவெடுக்கலாம் என்று சொல்லி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

இதை ஒளிந்து நின்று கேட்ட ரோகினி, விஜயாவிடம் சொல்லி ஏத்தி விட்டார். மேலும், மீனாவை சமைத்து பார்வதி வீட்டிற்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வா என்று விஜயா சொன்னவுடன் முத்து கோபம் வந்து சண்டை போட்டார். நேற்று எபிசோடில் சாப்பாடு கொண்டு வருவதில் முத்து- விஜயா இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது அண்ணாமலை, நானே சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொன்னவுடன் மீனா, நான் கொண்டு போகிறேன் என்று சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் கடையில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் லெட்டர் கொண்டு வந்து கொடுத்து படிக்கச் சொல்லி மறைந்து விட்டார்.

மனோஜுக்கு வந்த கடிதம்:

அந்த கடிதத்தில் உன் தம்பி கொலையாளி ஆவான், நீ தற்கொலை செய்து கொள்வாய் என்று இருந்ததை பார்த்து மனோஜ் ரொம்ப பயந்து அந்த நம்பரை தேடி போனார். அந்த நபர் ஒரு டீக்கடையில் இருந்து பில் கொடு நான் சொல்கிறேன் என்று சொன்னவுடன் மனோஜும் நம்பி பணம் கொடுக்க, அதற்குள் அந்த நபர் காணாமல் போய்விடுகிறார். அங்கிருந்தவர்கள் மனோஜை கிண்டலாக பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம், மீனா தன்னுடைய மாமியாருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் முதியவர்கள் பசியால் இருந்ததால் அவர்களுக்கு போட்டு விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் விஜயாவிற்கு பிரியாணி வாங்கி கொண்டு போய் மீனா கொடுத்தார். ஏன் ஓட்டலில் வாங்கி வந்தாய்? என்று விஜயா கேட்டதற்கு ஏதேதோ சொல்லி மீனா சமாளிக்கிறார். கடைசியில் பார்வதி பிரியாணி நன்றாகத்தான் இருக்கும் என்று இருவரும் சாப்பிட்டு விடுகிறார்கள். அப்போது காதல் ஜோடி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மீனாவிற்கு கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் டிராபிக் போலீஸ் இடம் சரக்கு கொண்டு போன விஷயத்தில் சத்யா மாட்டிக் கொண்டு நிற்கிறார். அந்த சமயம் வந்த முத்து, அறிவுரை சொல்வது போல போலீஸ் இடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் கோபம் வந்து சத்யா நக்கலாக முத்துவை பேச, முத்துவும் பதில் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறார். வீட்டில் விஜயா, பிரியாணி சாப்பிட்டு ஜீரணம் ஆகாமல் ரொம்ப அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க, உங்களால் தான் அத்தைக்கு இந்த மாதிரி ஆகிவிட்டது என்று மீனா மீது பழி போடுகிறார் ரோகினி. அப்போது அண்ணாமலை, உனக்கு சமைத்து தானே எடுத்துக் கொண்டு மீனா போனார் என்று கேட்டதற்கு, அவள் வீட்டில் கொடுத்து இருப்பார் என்று விஜயா சொல்கிறார். பின் மீனா, முதியவர்களுக்கு சாப்பாடு கொடுத்த விசயத்தை சொல்ல, முத்து- அண்ணாமலை இருவருமே பாராட்டி இருந்தார்கள். பின் எல்லாரும் தூங்கிய பிறகு மனோஜ் தனக்கு வந்த கடிதத்தை தன் அம்மாவிடம் காண்பிக்கிறார். சீரியல் முடிந்தது.

behindtalkies AMP · Quick view
View full