கிரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க முயலும் மீனா-முத்து, அதிர்ச்சியில் உறைந்த ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 14/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், கிரிஷை வீட்டில் இருக்கக் கூடாது. அதற்கு நீங்கள் தான் எனக்கு சப்போர்ட் செய்யணும் என்று சொன்னார். இதை கேட்டு சுருதி-ரவி எதுவுமே சொல்லவில்லை. பின் வீட்டிற்கு வந்த முத்து, உங்கள் பாட்டியின் போட்டோ, அம்மா போட்டோ ஏதாவது இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டார். அதற்கு கிரிஷ், எனக்கு தெரியாது என்று சொல்லி விட்டார். உடனே மீனா, ஸ்கூலில் கிரிஷ் பாட்டி, அம்மாவுடைய போட்டோ இருக்கும். நாம் அதை வைத்து விசாரிக்கலாம் என்று சொன்னார். இதைக் கேட்டு ரோகினி ஷாக் ஆனார்.

முத்து, பள்ளிக்கூடத்தில் கிரிஷ் உடைய அம்மா, பாட்டி போட்டோ எல்லாம் இருக்கும். அதை வைத்து விசாரித்து சொல்லுங்கள் என்று தன்னுடைய தந்தையிடம் சொன்னார். உடனே அண்ணாமலையுமே கிரிஷ் பயோடேட்டாவை கேட்டு வாங்கினார். ஆனால், அதில் கிரிஷ் பாட்டியின் போட்டோ தான் இருக்கிறது. கிரிஷ் அம்மா பற்றிய விவரம் எதுவுமே இல்லை. அதற்குப்பின் க்ரிஷ் பாட்டியின் போட்டோவை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி விட்டு முத்து,மீனா, அண்ணாமலை எல்லோருமே விசாரித்தார்கள். இதையெல்லாம் பார்த்து கடுப்பான விஜயா, எதற்கு இந்த தேவையில்லாத வேலை. அவனை கொண்டு போய் எங்கேயாவது விட்டு விடுங்கள் என்று சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் மனோஜ், கிரிஷ் இந்த வீட்டில் இருக்கணுமா? இல்லையா? என்பதை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கலாம். யாரெல்லாம் இந்த வீட்டில் கிரிஷ் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார். முத்து, மீனா, அண்ணாமலை மூவருமே கை தூக்கினார்கள். ஆனால், சுருதி- ரவி கையை தூக்கவில்லை. அதற்கு பின் கிரிஷ் இங்கு இருக்க கூடாது என்று சொல்லுங்கள் என்றார். அதற்கு விஜயா, மனோஜ் இருவரும் ஓட்டு போட்டார்கள். அவர்களுக்குமே ஸ்ருதி, ரவி கையை தூக்கவில்லை. ரோகினி தூக்கலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து கிரிஷ்க்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை, கிரிஷ் இந்த வீட்டில் தான் இருப்பான். அவன் பாட்டி வரும்வரை எங்கேயும் அனுப்ப முடியாது என்று சொல்கிறார். இதனால் மனோஜ் பிரச்சனை செய்கிறார். உடனே சுருதி-ரவி இருவருமே கிரிஷுக்கு சப்போர்ட் செய்து பேசுவதால் மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் முத்து-மீனா இருவருமே தங்களுக்கு தெரிந்த இடங்களுக்கு சென்று கிரிஷ் பாட்டியை பற்றி விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஸ்கூல் வந்த ரோகினி, தலைமை ஆசிரியரிடம் கிரிஷை தன்னுடன் அழைத்துச் செல்வதால் டிசி கொடுக்க சொல்லி கேட்கிறார். அவர்களும் ஒத்து கொண்டு கிரிஷுக்கு டிசி கொடுத்து விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் மீனா, கிரிஷ் பாட்டி கோயிலில் வேலை செய்து கொண்டு அன்னதானம் சாப்பிடும் விஷயத்தை தெரிந்து கொள்கிறார். பின் இதைப்பற்றி முத்துவிடம் சொல்கிறார். மீனா வருவதற்குள் கிரிஷ் பாட்டி சென்று விடுகிறார். பின் ரோகினி, கிரிஷை அழைத்துக் கொண்டு வித்யா வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது ரோகினி, கொஞ்ச நாட்களுக்கு கிரிஷ் இங்கேயே இருக்கட்டும். நான் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்கிறார். ஆரம்பத்தில் வித்யா முடியாது என்று வருகிறார் பின் வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொள்கிறார். அதோடு வித்யா, ஒரு வாரம் மட்டும் தான் கிரிஷ் இங்க இருக்க நான் ஒத்துக் கொள்வேன். அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டு சென்று விடணும் என்று சொல்வதால் ரோகிணியும் சம்மதிக்கிறார்.

https://www.youtube.com/watch?v=nNr0cdi1F7A

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டிற்கு வந்த முத்துவிடம் அண்ணாமலை, கிரிஷ் எங்கே? என்று கேட்கிறார். அதற்கு முத்து, கிரிஷ் பள்ளிக்கூடத்திலேயே இல்லை. அவனுடைய அம்மா அழைத்து சென்று விட்டதாக சொன்னார்கள் என்கிறார். இதை கேட்டவுடன் விஜயா, மனோஜ் இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். உடனே மீனா, கிரிஷ் அம்மா துபாயில் இருக்கும்போது எப்படி அழைத்து செல்ல முடியும். கிரிஷ் அம்மா துபாயில் இருக்க முடியாது. இங்கேதான் இருக்கனும். கிரிஷுக்கு பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது என்று சொல்கிறார். முத்து, கிரிஷ் அம்மாவை முதலில் கண்டுபிடிக்கலாம் என்கிறார். இதையெல்லாம் கேட்டு ரோகினி ரொம்பவே பயப்படுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full