சிந்தாமணிக்கு பாடம் புகட்டிய மீனா, மாட்டிக்கொண்டாரா விஜயா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணிக்கு யார் இந்த ஐடியாவை சொல்லி இருப்பார்? மீனா பணம் எடுத்துக் கொண்டு வரும் விஷயத்தை யார் சொன்னார்? என்பதை பற்றி தீவிரமாக முத்து யோசித்தார். இன்னொரு பக்கம் சீதா, அருணுக்கு போன் செய்து மீனாவிற்கு நடந்ததை பற்றி சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். அதற்கு பின் வீட்டில் முத்து, மீனா, சுருதி, ரவி ஆகிய நான்கு பேருமே ஜாலியாக பூவை போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த ரோகினி ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
மேலும், முத்து, செல்வம் இருவருமே பார்வதி வீட்டிற்கு சென்று மீனா பணம் காணாமல் போன விஷயம் தொடர்பாக பேசி இருந்தார்கள். பார்வதி ஆரம்பத்தில் எதுவுமே தெரியாதது போல் அமைதியாக இருந்தார். பின் முத்து அழுது டிராமா செய்கிறார். உடனே பார்வதி, இது சிந்தாமணி வேலையாக தான் இருக்கும் என்று உலறிவிட்டார். பின் முத்து, நீங்கள் சிந்தாமணியை இங்கு வரவைத்து கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் அவருடைய வீட்டில் போய் பணத்தை எடுத்து விடுகிறோம் என்று சொன்னவுடன் பார்வதியும் ஒத்துக் கொண்டார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் மீனா, அருணின் அம்மாவை தன்னுடைய வண்டியில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்தார். அங்கு சீதா, அருண் அம்மாவிற்காக காத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்தவுடன் மீனாவிற்கு சந்தேகம் வந்து விசாரித்தார். உடனே சீதா, நான் காதலிக்கும் நபருடைய அம்மா இவங்கதான் என்று சொன்னவுடன் மீனா அமைதியாகி விட்டார். கடைசியில் வீட்டில் முத்து, மீனா, ரவி, சுருதி, செல்வம் எல்லோருமே சிந்தாமணி வீட்டில் நகையை எடுப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்து, வருமானவரி துறை அதிகாரிகள் போல் நாடகம் செய்துதான் இந்த வேலையை செய்யணும் என்று சொன்னவுடன் எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் முத்து, சுருதி, ரவி, செல்வம் ஆகிய நான்கு பேருமே வருமானத்துறை அதிகாரிகள் போல் வேடம் அணிந்து சிந்தாமணியின் வீட்டிற்கு சென்றார்கள். பார்வதி வீட்டில் பூஜை இருக்கிறது என்று சிந்தாமணியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்தார். சிந்தாமணி வெளியே கிளம்பிய உடன் முத்து உடைய குருப் சிந்தாமணியின் வீட்டிற்குள் சென்றார்கள். பின் அங்கு உள்ளவர்கள் சுருதி பேசியதைக் கேட்டு பயந்து விட்டார்கள். பின் வீட்டில் முத்து உடைய குரூப் பணத்தை தேடுகிறார்கள். ஒரு வழியாக மீனாவின் பணம் கிடைத்து விட்டது. இன்னொரு பக்கம் சிந்தாமணி வயிறு சரியில்லை வீட்டிற்கு கிளம்பலாம். பூஜைக்கு அப்புறம் போகலாம் என்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மீனாவின் பணத்தை எடுத்தவுடன் முத்துவும் அவருடைய குரூப்பும் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். ஸ்ருதி மட்டும் வீட்டிற்குள் இருக்கிறார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி வீட்டுக்குள் வருகிறார். சுருதி ஏதேதோ சொல்லி சிந்தாமணியிடம் தப்பித்து வந்துவிடுகிறார். பின் மீனாவிற்கு ஃபோன் பண்ண முத்து, பணம் எடுத்த விஷயத்தை சொன்னவுடன் அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
இன்னொரு பக்கம் வீட்டிற்குள் வந்த சிந்தாமணி இடம், வருமானத்துறை அதிகாரிகள் வந்தார்கள். மஞ்சப்பை பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் என்று சொன்னவுடன் சிந்தாமணிக்கு சந்தேகம் அதிகமாகிறது.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் போன் செய்த மீனா, வருமானவரித்துறை அதிகாரிகள் போல் என்னுடைய ஆட்கள் தான் வந்தார்கள். அடுத்தவர்களை ஏமாத்தி பிழைக்க நினைக்காதே. வாழு வாழ விடு என்றெல்லாம் பயங்கரமாக பேசுகிறார். சிந்தாமணியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் வீட்டிற்கு வந்த முத்து, அண்ணாமலை இடம் மீனா பணம் கிடைத்த விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டு விஜயா ஷாக் ஆகி கோபப்படுகிறார். பின் முத்து, அம்மாவின் நண்பர் சிந்தாமணி தான் இந்த வேலையை செய்தார் என்று சொன்னவுடன் விஜயா உள்ளுக்குள் பயப்படுகிறார். உடனே ஸ்ருதி-ரவி இருவருமே இந்த பணத்தை நாங்கள் சிந்தாமணி வீட்டில் தான் எடுத்தோம் என்று சொன்னவுடன் விஜயாவால் எதுவும் பேச முடியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.