பல்லி விழுந்த சகுனத்தை பார்த்து சந்தோஷப்படும் ரோகினி, வேதனையில் மீனா-விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜுக்கு புது டீலர் ஆர்டர் கிடைத்தால் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. இன்னொரு பக்கம் முத்துவின் போனை ரோகினி எடுத்து மனோஜ் பாக்கெட்டில் போட்டு விட்டார். பின் இவர்கள் மூவரும் குடித்து இருப்பதை அறிந்த அண்ணாமலை கோபப்பட்டு திட்டி அவர்களை வெளியிலேயே தூங்க சொன்னார். முத்து - மனோஜ் - ரவி மூவருமே படிக்கட்டிலேயே தூங்கி இருந்தார்கள்.
இதை பார்த்த அண்ணாமலை அவர்களை எழுப்பி திட்டி அனுப்பி இருந்தார். அதற்குப்பின் மனோஜின் கோட்டில் இருந்த முத்து போனை ரோகினி பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டார். அந்த சமயம் வந்த சப் டீலர்ஸ் மனோஜிற்கு மாலை அணிவித்து அவரை பாராட்டி புகழ்ந்து பேசி இருந்தார்கள். இதெல்லாம் கேட்டு மனோஜ் ரொம்பவே பெருமைப்பட, விஜயா-ரோகினி இருவருமே மனோஜை புகழ்ந்து பேசி சந்தோசப்பட்டார்கள். வழக்கம்போல் முத்து, மனோஜை கிண்டல் அடுத்து பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
பின் வேலைக்கு கிளம்பும்போது போன் காணவில்லை என்று முத்து சொல்ல, மீனாவும் போனை தேடி இருந்தார். நேற்று எபிசோட்டில் போனை காணவில்லை என்று வீடு முழுக்க முத்து- மீனா இருவருமே தேடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து ரோகினி மனதுக்குள் சந்தோஷப்பட்டார். பின் முத்து, செல்வத்திற்கு போன் செய்து, தன் போனை காணவில்லை. அதில் தான் வீடியோ இருக்கிறது என்று சொன்னவுடன் அவரும் பதறி போனார். உடனே மீனா, என்ன வீடியோ? என்று கேட்க, ஏதேதோ சொல்லி முத்து சமாளித்தார்.
நேற்று எபிசோட்:
பின் பங்க்ஷன் நடந்த இடத்திற்கு முத்து சென்று மண்டபம் முழுவதுமே மொபைலை தேடி பார்த்தார். ஆனால், கிடைக்கவே இல்லை. இன்னொரு பக்கம் ரோகினி, சிட்டியை பார்க்கப் போனார். அப்போது அவர் பிஏவை கடத்தி அடைத்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல, ரோகினியும் வீடியோவை சிட்டியின் மொபைலுக்கு அனுப்பி விட்டார். இந்நிலையில் இன்று எபிசோடில் சத்யா வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட சிட்டி திட்டம் போடுகிறார். பின் தன்னுடைய பீகார் நண்பர் ஒருவர் மூலமாக அந்த வீடியோவை வெளியிட நினைக்கிறார்.
இன்று எபிசோட்:
இன்னொரு பக்கம் மொபைலை காணவில்லை என்ற வருத்தத்தில் முத்து வீட்டிற்கு வந்தார். இதைக் கேட்ட விஜயா, வழக்கம் போல முத்து-மீனவையும் திட்டி பேசி இருந்தார். ஆனால் முத்து, மொபைலில் இருந்த வீடியோவை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு சவாரி இருக்கிறது என்று கிளம்பிவிட்டார். அதன் பின் விஜயா மேல் பல்லி விழந்தது. அதை மீனா தட்டி விட அது மனோஜின் முகத்தில் ஒட்டிக் கொள்கிறது. ஒரு வழியாக பல்லியை மனோஜ் துரத்தி விடுகிறார்கள். இருந்தாலுமே, பல்லி விழுந்த சகுனம் சரியில்லை என்று விஜயா புலம்பி இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
மொபைலில் ரோகினி செக் பண்ணி பார்த்தார். அப்போது விஜயா- மனோஜ்- ரோகினி மூவருக்குமே நன்றாக இருக்கிறது. ஆனால், மீனாவிற்கு தான் துன்பம் வரும் என்று போடப்பட்டிருக்கிறது. இதனால் அவர் வருத்தத்தில் இருக்கிறார். அதற்கு பின்பு தன்னுடைய தோழிகளிடம் நடந்ததை சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார் மீனா. உடனே அவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை கொடுத்து மொபைல் வாங்கி தர சொல்கிறார்கள். அந்த சமயம் பார்த்து விஜயா வந்த ஆட்டோ நின்று விடுகிறது. அப்போது மீனாவின் தோழிகள் விஜயாவிடம் பேச, அவர் வழக்கம் போல் மீனாவை திட்டி பேசி இருக்கிறார். இதனால் அவர்கள் மீனாவிற்கு ஆதரவாக பேசுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.