அருண்-சீதா காதலுக்கு துணை நிற்கும் மீனா, முத்து எடுக்கப்போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 27/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, மனோஜிற்காக சாப்பாடு ஆர்டர் செய்து அனுப்பி வைத்தார். அதை பார்த்தவுடன் மனோஜ் நண்பர், உன் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறாய். ஏன் நீ இப்படி செய்கிறாய்? என் நண்பர் ஒருவர், அவர் மனைவியிடம் பேசவில்லை. அதனால் அவர் மனைவி வேறு ஒருவர் தொடர்பில் இருந்தார் என்று சொன்னார். இதை கேட்டவுடன் மனோஜ்க்கு பயம் வந்தது. பின் வீட்டில் ரோகினி, இல்லாததை பார்த்து மனோஜ் பயப்பட்டார். ஆனால், ரோகினி எங்கும் போகவில்லை. இருந்தாலும் மனோஜ் தன் நண்பன் சொன்னதை நினைத்து பார்த்தார். அதற்குப்பின் முத்துவிடம் மீனா, சீதாவின் காதல் விஷயமாக பேசி இருந்தார்.

அப்போது முத்து, முடியாது. நான் வேறொரு பையனை பார்க்கிறேன். அவன் வேணாம் என்று வாக்குவாதம் செய்தார். இருவரும் இடையே வாக்குவாதம் நடக்கும்போது கோபத்தில் முத்து, மீனாவை அடிக்க வந்தார். இதனால் மீனா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, புது ரெஸ்டாரன்ட் திறப்பதற்கான இடத்தை புரோக்கர் இடம் சொல்லி வைத்தார். ரவி இடமும் சொல்லி புரிய வைத்தார்.
ஆனால், ரவிக்கு புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிப்பதில் விருப்பமே இல்லை. பின் முத்து, ரவி, மனோஜ் மூவருமே மொட்டை மாடியில் சரக்கு சாப்பிட்டு தங்களுடைய மனைவிகளை பற்றி புலம்பி கொண்டிருந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் முத்து-ரவி இருவருமே, நீ அம்மா பேச்சைக் கேட்டு ரோகினியை கஷ்டப்படுத்துகிறாய். இப்படியே செய்தால் உன் நண்பர் சொல்வது போல் ரோகினி, எங்கேயாவது போய்விடுவார் என்று சொன்னவுடன் மனோஜ் பயந்தார். இன்னொரு பக்கம் சுருதி, மீனா, ரோகினி மூவருமே தங்களுடைய கணவன்மார்கள் செய்வதை பற்றி புலம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா- சுருதி இருவரும் நீங்கள் மனோஜை உங்கள் கண்ட்ரோலில் வைக்க பாருங்கள் என்று சொன்னார்கள். மறுநாள் காலையில் விஜயாவிடம் மனோஜ், நான் ரோகினியை ஷோ ரூமுக்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னவுடன் அவர் பயங்கரமாக கோவப்பட்டு சண்டை போட்டார்.

நேற்று எபிசோட்:

அண்ணாமலை, ரோகினிக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். உடனே விஜயா, நீ உன் மனைவியுடன் சந்தோசமாக இரு. ஆனால், என்னுடன் பேசாதே. என் உறவை முடித்துக் கொள் என்றவுடன் மனோஜால் எதுவும் பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் மீனாவிற்கு போன் செய்த சீதா, அருணின் அம்மா வீட்டிற்கு வருகிறார்கள் என்றவுடன் மீனா முத்துவிடம் ஏதேதோ சொல்லிவிட்டார் கிளம்பி விட்டார். பின் தன்னுடைய அம்மாவிடம் அருணின் அம்மா வரும் விஷயத்தை மீனா சொன்னார். அதன் பின் அருணும், அவர் அம்மாவும் வந்தார்கள். ஆனால், அருண் வெளியேவே இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அருணின் அம்மா, நீங்கள் என் பையனை பற்றி தவறாக புரிந்து இருக்கிறீர்கள். இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்று பேசுகிறார். மீனாவின் அம்மா, என் மாப்பிள்ளை முடிவு தான் எங்களுடைய முடிவு. அவர் பேச்சை மீறி நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். அவருக்கு இந்த திருமணத்தில் சம்மந்தமில்லை. தயவு செய்து கிளம்புங்கள் என்று அவரை அனுப்பி விடுகிறார். பின் அருணின் அம்மா, இந்த திருமணத்தில் அவர்கள் வீட்டில் யாருக்குமே விருப்பம் இல்லை என்கிறார். இன்னொரு பக்கம் முத்துவை சந்தித்த சீதா, அருணை காதலிக்கும் விஷயம் பற்றி பேசுகிறார். உடனே முத்து, நான் உனக்கு நல்ல மாப்பிள்ளையாக பார்க்கிறேன். தயவு செய்து இந்த விஷயமாக என்னிடம் பேசாதே என்று கோபப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மீனாவிடம் முத்து, எங்கே போயிருந்தாய்?அருணின் அம்மா வீட்டிற்கு வந்தாரா? என்று கேட்கிறார். அதற்கு மீனா, நீங்கள் கோபப்படுவீர்கள் என்று தான் நான் சொல்லவில்லை. அருண் என்னை தனியாக சந்தித்து பேசினார். அவர் சீதாவை திருமணம் செய்தில் உறுதியாக இருக்கிறார் என்று சொன்னவுடன் முத்து, அதெல்லாம் முடியாது. நான் சீதாவிற்கு வேறு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று இருவருக்கும் இடையே விவாதம் நடக்கிறது. இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை தன் வழிக்கு கொண்டு வருவதற்கு யாரோ ஒருவரிடம் பேசுவது போல் பேசுகிறார். அதைக் கேட்ட மனோஜ் சந்தேகப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full