ஜெயிலுக்கு போனாரா முத்து? மனோஜ் சொன்ன வார்த்தையால் வெடித்த கலவரம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மீனா, சிந்தாமணிக்கு பாடம் புகூட்ட வேண்டும் என்று யோசித்தார். அப்போது அவர், சீதாவிடம் சிந்தாமணிக்கு போன் செய்து மண்டபத்திற்கு டெக்ரேசன் ஒர்க் பண்ண வேண்டும் என்று செய்ய சொன்னார். சீதா, மீனா சொன்னது போலவே பேசியதால் சிந்தாமணி ஒத்துக் கொண்டார். பின் அவர் பேசியதை ரெக்கார்ட் செய்து அதை ஸ்ருதி இடம் போட்டு காண்பித்து சிந்தாமணி குரலில் மேனேஜரிடம் பேச சொன்னார் மீனா. சுருதியும் சிந்தாமணி போலவே பேசி அந்த மேனேஜரை பொன்னியம்மன் கோயிலுக்கு பணத்தோடு வரவைத்தார்.
அதற்குப்பின் சீதா, சிந்தாமணிக்கு போன் செய்து பொன்னியம்மன் கோயிலுக்கு வரவைத்தார். இதற்கிடையில் அந்த மண்டபத்தின் ஓனரையும் அந்த கோயிலுக்கு மீனா வரவைத்தார். பின் கோயிலுக்கு வந்த மேனேஜர்- சிந்தாமணி இருவருமே மீனா ஏமாந்து போனதை பற்றி பேசி சிரித்தார்கள். இதை மீனா, மண்டபத்தின் ஓனர் எல்லோருமே பார்த்து விட்டார்கள். உடனே கோபத்தில் அந்த ஓனர், மேனேஜரை வெளுத்து வாங்கி திட்டி இருந்தார். அதோடு சிந்தாமணியையும் திட்டினார்.
சிறகடிக்க ஆசை:
மண்டபத்தின் ஓனர் பணத்தை மேனேஜரிடம் வாங்கி மீனாவிடம் கொடுத்துவிட்டார். பின் அவர், இனிமேல் இந்த மண்டபத்தின் பக்கமே உன்னையும், சிந்தாமணியும் பார்க்க கூடாது என்று திட்டி விட்டார். அதற்கு பின் இனிமேல் என்னுடைய மண்டபத்திற்கு வரும் எல்லா ஆர்டருக்கும் உனக்குதாம்மா என்று சொன்னார். சந்தோஷத்தில் மீனா அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் பணம் வட்டிக்கு வாங்கிய பைனான்சியரை சந்தித்து நடந்ததை சொல்லி மீனா பணத்தை கொடுத்தார். பைனான்சியர், இனி உனக்கு எந்த உதவி என்றாலும் என்னிடம் கேளுமா என்று சொன்னார்.
கடந்த வாரம் எபிசோட்:
அதற்குப்பின் முத்துவிற்கு ஃபோன் செய்த மீனா, நடந்ததை எல்லாம் சொல்ல, அவர் ரொம்பவே ஷாக் ஆனார். உடனே முத்து, எனக்கும் சவாரி முடிந்துவிட்டது, நானும் வருகிறேன் என்று சொன்னார் அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிற்கு மாலை அணிவித்து அவர் செய்த சாகசத்தை வீட்டில் சொன்னார். இதைக் கேட்டவுடன் விஜயா ஷாக் ஆகிறார். மனோஜ் வழக்கம்போல முத்து,மீனாவை நக்கல் அடித்து பேசி இருந்தார். ஆனால், அண்ணாமலை திட்டி விட்டார். அதற்குப்பின் எல்லோருக்கும் முத்து ஸ்வீட் கொடுத்தார்கள். விஜயா மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவின் வீட்டிற்கு செல்வம் அவருடைய மனைவியை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். முத்து, அவர்களை சாப்பிட வைத்தார். இன்னொரு பக்கம் மனோஜ், வேலைக்கு டைம் ஆகிறது சாப்பாடு ரெடியா? என்று கேட்கிறார். ரோகினி மீனாவிடம் கேட்க, அவர்கள் சாப்பிட்ட பின்னால் சாப்பிடட்டும் என்று சொல்கிறார். பின் கோபத்தில் ரோகினி, இதை மனோஜிடம் சொல்ல, அவர் ஆவேசமாக முத்துவையும் அவருடைய நண்பரையும் பற்றி தரகுறைவாக பேசுகிறார். இதனை கேட்ட முத்து, மெதுவாக பேசு. அவர்கள் சாப்பிடட்டும். எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறாய்? என்று கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
மனோஜ், யார் சொல்வதையும் கேட்காமல் ரொம்ப கேவலமாக எல்லாரையும் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் செல்வம் தன்னுடைய மனைவியை சாப்பிடாமல் அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். இதனால் கோபப்பட்ட முத்து, மனோஜை உட்கார வைத்து வாயில் சாப்பாடு போட்டு திணிக்கிறார். உடனே மனோஜ், என்னை கொல்ல தானே பார்க்கிறாய், நீ ஏற்கனவே ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தானே என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். இதனால் இன்னும் கோபத்தின் உச்சிற்க்கு சென்ற முத்து, கத்தியை எடுத்து மனோஜை குத்தப் போகிறார். பின் எல்லோருமே மனோஜ், முத்துவை தடுத்து விடுகிறார்கள். அதற்குப்பின் சுருதி, மனோஜ்-முத்து இடையே இருக்கும் சண்டையை தீர்ப்பதற்கு ஒரு கேமை விளையாட வைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.