மனோஜின் தில்லு முல்லு வேலையை அறிந்த மொத்த குடும்பம், கோபத்தில் முத்து-ரவி செய்தது- சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, விஜயா கேஸ் வாபஸ் வாங்கின விஷயத்தை பற்றி பார்வதி இடம் போட்டு வாங்க, அவர் உளறி விட்டார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய புதிய ஆர்டருக்கான வேலையை சிறப்பாக செய்திருந்தார். இதை பார்த்து ஸ்ருதி- முத்து இருவருமே பாராட்டி இருந்தார்கள். கடந்த வாரம் சுருதி, நீங்கள் இதை சோசியல் மீடியாவில் போட்டால் நிறைய ஆர்டர் கிடைக்கும் என்று சொல்ல, முத்து ஒத்துக் கொண்டார். பின் மீனாவை அழகாக தயார் செய்து மாடலிங் போல் ஸ்ருதி நடிக்க வைத்தார்.
இதையெல்லாம் பார்த்து முத்துவுக்கு ஒரே சந்தோஷம். இன்னொரு பக்கம் சிட்டி, ரோகினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்ட, அவர் பார்வதி வீட்டிற்கு சென்று விஜயாவிற்கு பானிபூரி கொடுத்து ஐஸ் வைத்தார். பின் பார்வதியின் ரூமிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு வந்தார் ரோகினி. இன்னொரு பக்கம் வீட்டில் ரவி - முத்து இருவருமே மீனா- சுருதி செய்வதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வந்த மனோஜ், மீனா-முத்து நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியானார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் முத்து செய்த வேலையை பார்த்த விஜயா, அந்த பொண்ணு யார்? மீனா எங்கே போயிட்டாள்? என்று அவளுக்கு சப்போர்ட் செய்து பேசி இருக்கிறார். உடனே மீனா, அது நான் தான் அத்தை என்று சொன்னவுடன் விஜயா ஷாக் ஆகினார். பின் விஜயா தனக்காக சப்போர்ட் செய்து பேசியதை நினைத்து மீனா ரொம்ப சந்தோஷப்பட்டார். இந்த விளம்பரம் எடுக்கும் வேலையை எங்கேயாவது செய்து கொள்ளுங்கள் என்று விஜயா திட்டி விட்டு சென்றார். அதற்குப் பின் ரோகினி, சிட்டி கேட்ட பணத்தை கொடுத்து விட்டு பிஏவை எதாவது செய்ய சொன்னார்.
நேற்று எபிசோட்:
பின் மனோஜ்- ரோகினி இருவரும் காரில் வந்து கொண்டிருக்கும் போது புது டீலர், போன் செய்து உங்களுடைய பிசினஸ் நல்லா இருக்கிறது. இன்னும் ப்ரொமோட் செய்ய வேண்டும் என்றால் விளம்பரம் எடுக்க வேண்டும். அதற்கு உங்களுடைய குடும்ப ஆட்களை வைத்தே பண்ணுங்கள் என்று சொன்னவுடன் மனோஜ், வேண்டாம் என்றார். உடனே அவர், நாலு ஜோடிக்கு இரண்டு லட்சம் தருகிறேன் என்று சொன்னவுடன் மனோஜ் ஒத்துக் கொண்டார். ஆனால், இந்த பணம் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் நடிக்க வைக்கலாம் என்று மனோஜ் திட்டம் போட, ரோகினி சரி என்றார்.
இன்றைய எபிசோட்:
பின் மனோஜ், டீலர் சொன்ன விஷயத்தை வீட்டில் சொல்ல, முதலில் எல்லோருமே மறுத்தாலும் கடைசியில் கடையின் டெவெலப்புக்காக ஒத்துக் கொண்டார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எல்லோருமே விளம்பரத்தில் நடிக்க பணம் கேட்டார்கள். ஆனால், மனோஜ் குடும்பம் ஒற்றுமை என்று டயலாக் பேச, எல்லோரும் சரி என்று ஒத்துக்கொண்டதால் ரோகினி ரொம்ப சந்தோசப்படுகிறார். பின் தன்னுடைய அம்மாவிற்கு மட்டும் தனியாக சந்தித்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை மனோஜ் கொடுத்தார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் சூட்டிங் நடக்கிறது. டைரக்டர் ஒவ்வொருவருக்கும் டயலாக் கொடுத்து பேச சொல்கிறார். எல்லோருமே ஆரம்பத்தில் தப்பு தப்பாக பேசுவதால் அவர் பயங்கரமாக திட்டுகிறார். குறிப்பாக அண்ணாமலையை திட்டுவது முத்துவிற்கு பிடிக்கவே இல்லை. இதனால் முத்து, அவரிடம் சண்டைக்கே போகிறார். உடனே அவர் கோபப்பட்டு, யாரும் ஓசியில் நடிக்கவில்லை. காசு வாங்கி தானே நடிக்க வந்தீர்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக்கில் மனோஜை பார்க்கிறார்கள். பின் வீட்டில் இதை பற்றி எல்லோரும் கேட்க, சூட்டிங் முடிந்து தரலாம் என்று இருந்தேன் என்கிறார். ஏன் முன்னாடியே சொல்லவில்லை? என்பதற்கு, அதையே திருப்பி திருப்பி மனோஜ் சொல்ல, முத்து- ரவி இருவருமே மனோஜை அடிக்க போகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.