உண்மை அறிந்து முத்து செய்த வேலை, சீதா-அருண் திருமணம் நடக்குமா? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் என்று தெரியாமல் சுருதி -மீனா இருவருமே பொளந்து கட்டினார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த விஜயாவும் திருடன் என நினைத்து பயங்கரமாக அடித்தார். மனோஜால் பேச கூட முடியவில்லை. அதற்கு பின் வீட்டிற்கு முத்து- அண்ணாமலை வந்தார்கள். முத்து, மனோஜின் கையை முறுக்கி அடித்தார். பின் மனோஜ் அலறல் சத்தத்தை கேட்டு தான் எல்லோருமே அடிப்பதை நிறுத்தினார்கள். அதற்கு பின் முகமூடியை திறந்து பார்த்து ஷாக் ஆனார்கள். நான் தான் அந்த திருடனை பார்த்தேன். அவன் என் முகத்தில் முகமூடியை போட்டு விட்டு சென்று விட்டான் என்று அழுதார். இன்னொரு பக்கம் மேனேஜர், சிட்டியிடம் அடி வாங்கியதை பற்றி சொல்லி புலம்பி இருந்தார்.
பின் ரோகினிக்கு போன் செய்த மேனேஜர், என்னை அடி வாங்க வைக்க பிளான் செய்தாயா? நான் முத்துவிடம் உண்மை சொல்ல போகிறேன் என்று மிரட்ட, பயப்படாமல் சொல்லி கொள் என்றார் ரோகினி. இதனால் மேனேஜரால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் சீதா- அருண் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் முத்து- மீனா பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மனோஜ் சாப்பாட்டில் வடை வைக்கவில்லை என்று ரகளை செய்து கொண்டிருந்தார். பெண் வீட்டாரே பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார் என்று மண்டபத்தில் இருப்பவர்கள் பேசி இருப்பதை கேட்ட முத்து, மனோஜிடம் பஞ்சாயத்து கேட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் சீதா திருமணத்தை நினைத்து வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அருண் நண்பர், தன்னுடைய மனைவியிடம் இது அருணிற்கு இரண்டாவது கல்யாணம் என்று சொன்னார். இது புரியாமல் அவருடைய மனைவி மண்டபத்தில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டார். மண்டபத்தில் உள்ளவர்கள் எல்லோருமே தங்களுக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மண்டபம் முழுக்க இது அருணுக்கு இரண்டாவது கல்யாணம் என்ற பேச்சு தான் அதிகமாக சென்று கொண்டிருக்கின்றது. பின் இதைப்பற்றி மீனாவின் கேட்டார்கள். ஆனால், மீனா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாளித்து விட்டார். பின் இந்த விஷயம் முத்துவின் காதிற்கு சென்று விட்டது.
நேற்று எபிசோட்:
கொந்தளித்த முத்து மணமேடையில் இருந்து அருணை கீழே இழுத்து வந்து சண்டை போட்டார். மீனாவின் அம்மா, சீதா, சத்யா எல்லோருமே குழப்பத்தில் இருந்தார்கள். அப்போது முத்து, இது அருணிற்கு இரண்டாவது கல்யாணம். இவனை வேண்டாம் என்று சொன்னேன். சீதா வாழ்க்கை அழிக்க பார்க்கிறான் என்றெல்லாம் கொந்தளித்தார். சீதா- மீனா இருவருமே உண்மையை பேச முடியாமல் தவித்தார்கள். ஒரு கட்டத்தில் அருண், ஆமாம் இது எனக்கு இரண்டாவது கல்யாணம் தான் என்று சொல்லி விட்டார். இதனால் பெண் வீட்டில் எல்லோருமே பேசி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அருண், எனக்கு இது ரெண்டாவது திருமணம் தான். சீதாவை தான் நான் முதல் திருமணம் செய்தேன். எங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் ஆகிவிட்டது என்று சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகிறது. முத்துவுக்கு இன்னும் கோபம் அதிகமாகின்றது. எங்கள் வீட்டுப்பிள்ளையை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாயா? என்று அருணின் சட்டையை பிடிக்க போகிறார். உடனே அருண் நண்பர், அருணிற்கு நான் சாட்சி கையெழுத்து போட்டேன். சீதாவிற்கு அவருடைய அக்கா மீனாதான் கையெழுத்து போட்டார் என்று சொல்கிறார். இதை முத்துவால் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. கடைசியில் மீனாவுமே உண்மையை ஒத்துக் கொண்டார். இதனால் முத்துவிற்கு இன்னும் கோபம் அதிகமாகி மீனாவை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் விஜயா இது தான் சந்தர்ப்பம் என்று மீனா குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேசுகிறார். அதிர்ச்சியில் மீனாவின் அம்மா, சீதா- மீனா இருவரையும் அடிக்கிறார். அருண் அம்மா, இவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள். திருமணத்தை நடத்தலாம் என்று சொல்வதற்கு சீதாவின் அம்மா எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் சீதா, தன் குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார். அப்போது அவருடைய அம்மா, முத்து வந்தால் தான் இந்த திருமணம் நடக்கும் என்பதால் சீதா- மீனா இருவருமே முத்துவைத் தேடி போகிறார்கள். இன்னொரு பக்கம் அருண், என்ன நடக்குமோ? என்று புரியாமல் பயத்தில் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது