சீதாவின் காதலால் உறவை பிரிய முடிவெடுக்கும் முத்து, மீனா முடிவு என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 3/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா- சத்யா இருவருமே முத்துவை சந்தித்து சீதாவின் காதல் விஷயமாக பேசி இருந்தார்கள். அதைக் கேட்டவுடன் முத்து பயங்கரமாக கோபப்பட்டார். பின் சத்யா, சீதாவினுடைய நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், முத்து ஏற்றுக்கொள்ளவே இல்லை. மீனா- சத்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் சுருதி- ரவி இருவரும் ரெஸ்டாரண்டை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்ருதி, ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பதற்கு இடத்தை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், ரவிக்கு அதில் விருப்பமே இல்லை. இருந்தாலுமே ஸ்ருதி ரெஸ்டாரன்ட் தொடங்குவதில் உறுதியாக இருந்தார்.

பின் இதைப் பற்றி ரவி, முத்து- மீனாவிடம் பேசினார். மீனா, சுருதி சொல்வது சரிதான். அவர்களுக்கு சப்போர்ட் செய்யுங்கள் என்றார். உடனே முத்து, நீ சுயமாக சம்பாதித்து ரெஸ்டாரன்ட் தொடங்கு. யார் பேச்சையும் கேட்காதே என்று சொன்னார். பின் மீண்டும் மீனா, சீதாவின் காதல் விஷயமாக முத்துவிடம் பேச, அவர் இன்னும் அதிகமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, பாய் பிரண்டிடம் பேசுவது போல் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை கேட்டு மனோஜ் கோபப்படுகிறார் என்று தெரிந்துமே ரோகினி காதலரிடம் பேசுவது போல் பேசி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் நீத்து, முத்துவின் வீட்டிற்கு வந்தார். நீத்துவை பார்த்தவுடன் ஸ்ருதி கோபப்பட்டார். அப்போது நீத்து, புதிய ரெஸ்டாரன்ட் தொடங்குகிறேன். அதற்கு ஷேர் பார்ட்னர் ரவி தான். அதற்கான டாக்குமெண்ட்டை எடுத்து வந்திருக்கிறேன். அதில் ரவி சைன் போட்டால் போதும். ரெஸ்டாரன்ட் வெற்றிக்கு நான் மட்டும் காரணம் இல்ல ரவியும் ஒரு முக்கிய காரணம். சுருதி சொன்னது சரி தான் என்று பேசி இருந்தார். ரவிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் சுருதி- ரவி இருவருமே தனியாக சென்று ரெஸ்டாரன்ட் பற்றி பேசி இருந்தார்கள். அப்போது விஜயா, ரெஸ்டாரண்டிற்கு எவ்வளவு செலவாகும் என்றெல்லாம் கேட்டார்.

நேற்று எபிசோட்:

நீத்து, 60 கோடி ஆகும். எங்களுக்கு சென்னையில் மட்டும் இல்லை மும்பையிலும் 10 பிரான்ச் இருக்கிறது என்று சொன்னவுடன் விஜயா வாயை பிளக்கிறார். உடனே விஜயா, ரோகினியை கழட்டி விட்டு எப்படியாவது நீத்துவை மனோஜிற்கு திருமணம் செய்து வைக்க யோசித்தார். இதையெல்லாம் பார்த்து ரோகினிக்கு கோவம் தான் வந்தது. பின் ரவியும் விருப்பமே இல்லாமல் டாக்குமெண்டில் சைன் போட்டார். இன்னொரு பக்கம் சீதா அருணை நினைத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சத்யா, சீதாவின் திருமணத்தை பற்றி தன்னுடைய அம்மாவிடம் பேச, அவர் மாப்பிள்ளை முடிவு தான் என்னுடைய முடிவு என்றார். மீனாவும் எடுத்துச் சொல்லிப் பார்த்தார். ஆனால், சீதாவின் அம்மா மனமே மாறவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அருணின் அம்மா, மீனாவிடம் சீதாவை திருமணம் செய்து வைப்பது பற்றி பேசுகிறார். மீனா, எவ்வளவு சொல்லியும் என் கணவர் கேட்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை என்கிறார். அருண் அம்மா, என் வீட்டு மருமகள் சீதா தான் என்று ஆணித்தனமாக சொல்லிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் ரோகினி, தன்னுடைய பாய் பிரண்டை சந்திக்க போவதாக பொய் சொல்லி அழகாக மேக்கப் போட்டு தயாராகி மனோஜை வெறுப்பேற்றுகிறார். இது எல்லாம் பார்த்த மனோஜ் கவலையாக இருக்கிறார். இதை அவர் தன்னுடைய நண்பனிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதி இடம் நீத்துவை பற்றி சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் எப்படியாவது ரோகிணிக்கு டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு மனோஜை நீத்துவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போடுகிறார். பார்வதி எடுத்து சொல்லியும் விஜயா தன் முடிவில் மாறவில்லை. கடைசியில் வீட்டிற்கு வந்த முத்துவிடம் மீனா, சீதாவின் திருமணத்தை பற்றி பேசுகிறார். அப்போது மீனா, சீதாவும், அம்மாவும் உங்களுடைய விருப்பம் தான் என்று சொல்கிறார்கள். உங்களை மீறி இந்த திருமணம் நடந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறார். உடனே முத்து, அப்படியா! திருமணம் நடக்கட்டும். உனக்கும் எனக்கும் உறவு முடிந்துவிடும். உங்கள் குடும்பத்திற்குமான உறவு முடிந்துவிடும். நீ இந்த வீட்டு மருமகள் மட்டும்தான். இந்த முத்துவின் பாசம் கிடைக்காது என்று சொல்கிறார். மீனாவால் எதுவுமே பேச முடியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full