விஜயாவின் முகத்திரையை கிழித்த முத்து, மீனா என்ன செய்யப் போகிறார்? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ புது டீலர், விளம்பரத்தில் நடிக்க 2 லட்சம் பணத்தை கொடுக்க மனோஜ் வீட்டில் சொல்லாமல் மறைத்தார். பின் வீட்டில் உள்ள எல்லோரும் மனோஜிக்காக நடிக்க ஒத்து கொண்டார்கள். ஷூட்டிங்கில் ஒவ்வொருவருக்கும் டயலாக் கொடுத்து பேச சொன்னார்கள். அவர்கள் தப்பாக பேசி இருந்ததால் இயக்குனர் பயங்கரமாக திட்டி இருந்தார். இதனால் முத்து, அவரிடம் சண்டைக்கு போக, இயக்குனர் கோபப்பட்டு யாரும் ஓசியில் நடிக்கவில்லை. காசு வாங்கி தானே நடிக்க வந்தீர்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக்கில் மனோஜை பார்த்தார்கள்.
பின் வீட்டில் இதை பற்றி எல்லோரும் கேட்க, சொன்னதையே திருப்பி திருப்பி மனோஜ் சொன்னார். இதனால் எல்லோரும் மனோஜ் மீது கோபப்பட்டார்கள். ஓரு வழியாக பணத்தை ரோகினி எல்லோருக்கும் அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் பார்வதி பூ கேட்டதால் மீனா கொண்டு போய் தந்தார். அப்போது விஜயா, மீனாவை அவமானப்படுத்தி பார்வதி வீட்டு வேலையை செய்ய சொன்னார். அவரும் எதுவும் பேசாமல் செய்தார். நேற்று எபிசோட்டில், பீரோவில் பணம் இல்லை என்று பார்வதி சொன்னவுடன் விஜயா ஷாக் ஆகி தேடிப் பார்த்தார்கள். ஆனால், அங்கு பணம் இல்லை.
சிறகடிக்க ஆசை:
பார்வதி உடைய நகைகள், பணமெல்லாம் இருந்தது. ஆனால், விஜயா பணம் மட்டும் இல்லை. இதனால் விஜயா, இங்கு மீனா தான் துணி அடுக்கி வைத்தாள். அவள் தான் இந்த வேலையை செய்திருக்கணும் என்று சொன்னவுடன், பார்வதி அப்படி எல்லாம் இருக்காது பழி போடாதே என்று சொன்னார். இருந்தாலுமே விஜயா கேட்கவில்லை. பின் வீட்டில் விஜயாவிற்கு பார்வதி போன் செய்தார். அப்போது விஜயா, என்ன பணம் காணவில்லையா? மீனா எடுத்திருப்பார் என்று சந்தேகப்படுகிறாயா? என்று மீனா மீது பழி போட்டார்.
நேற்று எபிசோட்:
உடனே மீனாவுக்கு ஆத்திரம் தாங்க முடியலவில்லை, பயங்கரமாக அழுதார். அண்ணாமலை-முத்து கோப்பப்பட்டு மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். ஆனால், விஜயா கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் மீனா மீது தான் பழி போட்டாள். ரோகினி எதுவும் பேசாமல் உள்ளுக்குள்ளே பயத்தில் அமைதியாக இருந்தார். பின் மீனா, முத்து இருவருமே நடந்ததை நினைத்து பேசிக் கொண்டிருக்கும்போது பார்வதி ஆண்டியிடம் விசாரிக்கலாம் என்று முத்து சொன்னார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து , உண்மையை கண்டுபிடிக்க பார்வதி வீட்டிற்கு செல்கிறார்.
இன்றைய எபிசோட்:
அப்போது பார்வதி, முத்து கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவே முடியவில்லை, திணறுகிறார். உடனே முத்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுங்கள் என்று சொன்னவுடன் பார்வதி, பயத்தில் அது என்னுடைய பணமில்லை. விஜயா பணம். சத்யா கேஸ் மூலமாக வக்கீல் கொடுத்தது என்று சொன்னவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டிற்கு வந்த முத்து, மீனா தான் பணத்தை திருடினாள். அவள் மீது கேஸ் கொடுக்க வேண்டாம் என்று சொன்னவுடன் எல்லோருமே அதிர்ச்சியாகிறார்கள். உடனே மீனா, நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று அழுது புலம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
அண்ணாமலை- ஸ்ருதி- ரவி மூவருமே மீனாவிற்கு சப்போர்ட் செய்கிறார்கள். வழக்கம்போல் மனோஜ்- விஜயா இருவருமே மீனாவை திட்டி பேசுகிறார்கள். ஆனால், முத்து உண்மையை வரவைக்க தான் மீனா மீது பழி போட்டார். கடைசியில் முத்து, மீனா பணத்தை எடுக்கவில்லை. இதை எல்லா வேலையும் செய்தது அம்மா தான். சத்யா கேஸ் வாபஸ் வாங்க இரண்டு லட்ச ரூபாய் பணத்தை வாங்கி இருக்கிறார் என்று சொன்னவுடன் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்தார். பின் அண்ணாமலை கோபப்பட்டு விஜயாவை திட்டி மீனாவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். ஆனால், விஜயா முடியாது என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.