உண்மையை கண்டுபிடிக்க முத்து செய்த வேலை, மாட்டிக்கொண்டாரா ரோகினி? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி எவ்வளவு பேசியும் மனோஜ் அதை பற்றி எல்லாம் கேட்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதனால் ரோகினி, அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் முத்து அவருடைய நண்பர்கள் சரக்கு வாங்கி கொடுத்து அவரை குடிக்க வைத்தார்கள். பின் குடித்துவிட்டு முத்துவை அருண் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். அங்கு முத்துவின் நண்பர்கள் கல் எடுத்து அருண் வீட்டின் முன்பு அடித்தார்கள். இதையெல்லாம் பார்த்து அருண் மொபைலில் ரெக்கார்ட் செய்தார். பின் வெளியே வந்த அருண், முத்துவிடம் பேசி இருந்தார்.
முத்து-அருண் இடையே கோபமாக வாக்குவாதம் நடக்குது. இதையெல்லாமே முத்து வாக்குவாதம் செய்தார்கள். அருண், இங்கிருந்து கிளம்பவில்லை என்றால் போலீஸ் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் என்று மிரட்டி இருந்தார். வேறு வழியில்லாமல் முத்து தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். இதையெல்லாம் தூரமாக நின்று பார்த்த சத்யா, மீனாவிற்கு போன் செய்து தகவல் சொன்னார். பின் முத்து வீட்டுக்கு குடித்து வந்ததை பார்த்த மீனா பயங்கரமாக சண்டை போட்டார். பிரச்சனை இருந்தால் குடிப்பது தான் தீர்வா? என்றெல்லாம் கோபப்பட்டார். ஆனால், முத்து வேதனையில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
மறுநாள் காலையில் முத்து, வீட்டு வேலையெல்லாம் செய்தார். இதை பார்த்த விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டு முத்துவை ஏளனம் செய்தார். இதனால் கோபத்தில் மீனா முத்துவைத் திட்டி இருந்தார்.
இதை பார்த்த விஜயா, ஷாக்காகி அமைதியாகி விட்டார். அதற்குப்பின் சிட்டி, ரோகினியை போன் செய்து வரவைத்தார். அப்போது சிட்டி, என்னிடம் ரொம்ப பழமையான நகை இருக்கு. இதன் மதிப்பு 3 லட்சம். ஆனால், எனக்கு ஒரு லட்சத்திற்கு தந்தார்கள். இதை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் செய்த உதவிக்கு தான் தருகிறேன். பணம் பொறுமையாக தாருங்கள் என்று சொன்னார். ரோகினியும் நம்பி விட்டார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி வீட்டிற்கு சென்று இருந்தார் மீனா. அஅங்கு அவர், உன் கணவன் குடித்துவிட்டு அருண் வீட்டின் முன்பு கல் எடுத்து அடித்து தகராறு செய்திருந்தார். இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முத்துவை திட்டி இருந்தார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மீனா, அங்கு ஒரு போலீஸ் அதிகாரிக்கு தன் கணவரின் காரை ஓட்டி சென்று தான் அடிபட்டது என்ற உண்மை தெரிந்தது. பின் மீனா, அவரிடம் கெஞ்சி கேட்டு,அழுது புலம்பி உண்மையைக் கேட்டார். ஆனால், அவர் கீழே விழுந்ததாக பொய் சொன்னார். அதற்கு பின் வெளியே மீனா, கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு உதவி செய்தார். இதை அந்த போலீஸ் பார்த்தார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் முத்துவை போலீஸ் அழைத்து வந்தார்கள். மீனாவை போலீஸ் ஸ்டேஷனில் முத்து பார்த்தவுடன் கோபப்பட்டார்கள். பின் அந்த அதிகாரி, நீ அருண் வீட்டிலேயே கல் அடித்து பிரச்சனை செய்வாயா? என்று சொல்லி முத்துவை கைது செய்ய சொன்னார்கள். உடனே மீனா, போலீசிடமும் கெஞ்சி கதறி இருந்தார். அப்போது மனம் தாங்காமல் அந்த கையில் அடிபட்ட போலீஸ், உண்மையிலேயே வண்டியில் பிரேக் பிடிக்கவில்லை. அதன் மூலம் தான் எனக்கு அடிபட்டது என்று சொன்னார். அருண் வேண்டாம் என்று கண்ணால் சைகை பண்ணி இருந்தார். ஆனால், அந்த போலீஸ் கேட்காமல் உண்மையை சொல்லி விட்டார்.
https://www.youtube.com/watch?v=GtLoPUc7F-0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் முத்துவின் மீது எந்த தப்பும் இல்லை என்று லைசன்ஸ் கேன்சல் செய்யாமல் அவரை போலீஸ் விடுதலை செய்கிறது. பின் வீட்டிற்கு வந்த முத்து நடந்த உண்மையை எல்லோரிடமும் சொல்கிறார். பின் முத்து, என் பிரேக் ஒயர் கட் பண்ணி ஆயில் லீக் ஆகி இருக்கிறது. அதனால் தான் பிரேக் பிடிக்கவில்லை. இந்த வீட்டில் உள்ள ஒருத்தர் தான் என் சாவியை கொடுத்திருக்க வேண்டும் என்று ரோகினியை பார்க்கிறார். உடனே ரோகினி, என் மீது எதற்கு பழி போடுகிறீர்கள் என்று சொல்கிறார். அதற்கு மீனா, என் கணவர் உங்க பெயரை சொல்லவே இல்லையே என்கிறார். அதற்கு ரோகினி, இந்த வீட்டில் ஆன்ட்டி இடம் தினமும் திட்டுவாங்குகிறேன். மாட்டி வைத்த சாவியை நானா எடுத்துக் கொடுத்தேன் என்று கேட்டவுடன் முத்து, நான் அப்படி சொல்லவே இல்லையே
என்கிறார்.