அசிங்கப்பட்ட மனோஜ், ரோகினியின் சுயரூபத்தை கண்டுப்பிடிப்பாரா முத்து ? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் மீனா, கொலு வைக்கும் விஷயத்தை முத்துவிடம் சொல்ல, அவரும் ஒத்துக் கொண்டு விஜயாவிடம் கேட்டார். முதலில் மறுத்த விஜயா கடைசியில் ஒத்து கொண்டார். வீட்டில் கொலு வைப்பது பற்றி விஜயா, பார்வதி இடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த காதல் ஜோடிகள் தேவையில்லாத வேலைகளை செய்ததை பார்த்து மீனா திட்டினார். உடனே, விஜயா அந்த காதல் ஜோடிகள் சொன்னதை நம்பி மீனாவை திட்டி அனுப்பி விட்டார். பின் வீட்டில் கொலு வைப்பதற்கு தேவையான பொம்மைகள் எல்லாம் முத்து வாங்கி வைத்திருந்தார்.
அதற்கு பின் மீனா வகுப்பில் நடந்ததை முத்துவிடம் சொல்ல, மீண்டும் விஜயா கோபப்பட்டு பேசி இருந்தார். உடனே மனோஜ்- ரோகினி இருவருமே சேர்ந்து கொண்டு மீனாவை தான் குறை சொல்லி இருந்தார்கள். பின் முத்து கேட்டதால் விஜயா, அந்த பரத பாவத்தை செய்தார். ஆனால் மீனா, அந்த மாணவர்கள் இப்படி செய்யவில்லை என்றவுடன் விஜயா கோபப்பட்டார். அண்ணாமலை, நீ கவனமாக இரு. ஏதாவது தவறு நடந்தால் உன் மேல் தான் பழி வரும் என்று சொல்ல, இனிமேல் மீனா சாப்பாடு கொண்டு வர தேவை இல்லை என்று விஜயா சொல்லி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
பின் வகுப்பில் விஜயா சொல்லிக் கொடுக்கும் போது அந்த காதல் ஜோடிகள் செய்வதை கவனித்தார். உடனே விஜயாவிற்கு சந்தேகம் வந்து அந்த ஜோடிகளை தனியாக பிரித்து வைத்து நடனம் ஆடுங்கள் என்று சூசகமாக சொன்னார். நேற்று எபிசோடில், அதற்கு பின் பார்வதி இடம் விஜயா, வீட்டில் நடந்ததை சொல்ல, அவரும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதே என்று அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் மனோஜ் தனக்கு கடிதம் எழுதிய நபரை தேடி கோயிலுக்கு சென்று இருந்தார். அங்கு பிளாக்மெயில் செய்யும் மேனேஜர் சாமியார் கெட்டப்பில் மனோஜிடம் பேச, இதையெல்லாம் பார்த்து ரோகினி பயத்தில் அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
அப்போது உங்களுக்கு ஒரு கடிதம் இருக்கிறது. அதை முத்து தான் கொடுத்தார் என்று சாமியார் சொல்ல, மனோஜ்க்கு கோவம் வந்து வீட்டில் கத்துகிறார். இதுவரை லெட்டர் மூலமாக நடந்த விஷயத்தை பற்றி மனோஜ்-விஜயா சொன்னார்கள். ஆனால் ரோகினிக்கு, இது முத்து செய்யவில்லை என்று தெரியும். இது எல்லாம் கேட்டு மீனா, அண்ணாமலை இருவருமே கோபப்பட்டு முத்துவுக்காக பேசுகிறார்கள். பின் மனோஜ் சொன்ன வார்த்தையை நம்பி விஜயா, முத்து-மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். இன்று எபிசோடில், மனோஜ் சொன்ன விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்கிறார்.
இன்றைய எபிசோட்:
உடனே முத்து கோபப்பட்டு மனோஜை அடிக்க வருகிறார். ஆனால், மனோஜ் மீண்டும் மீண்டும் முத்து மேல் தான் பழி போடுகிறார். உடனே மனோஜ், தன் அடியாளை கூப்பிட்டு முத்துவை அடிக்க வைக்கிறார். வீட்டில் உள்ள எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆனால், முத்து அந்த ஆளை அடித்து தூக்கி வெளியே போட்டு விடுகிறார். இதையெல்லாம் பார்த்து மொத்த வீடுமே ஷாக் ஆகிறார்கள். உடனே விஜயா, மனோஜை கிண்டலடிக்கிறார். பின் முத்து, நான் எதற்கு உனக்கு கடிதம் கொடுக்கணும்? எதுவாக இருந்தாலும் நேரிலேயே வைத்து வெளுத்து வாங்குவேன் என்று சொன்னதற்கு, உன் பெயர்தான் அந்த சாமியார் சொன்னான் என்று சொன்னவுடன் ரோகினி நடந்ததை சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது மீனா, உங்களை மாட்டி விட்ட அந்த சாமியார் தான் இந்த வேலையை செய்திருக்கணும் என்று சொன்னவுடன் ரோகிணி பயப்படுகிறார். அந்த சாமியார் யார் என்று தெரிந்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும் முத்து சொல்கிறார். சாமியார் பணம் கேட்கவில்லை என்றால் நீங்கள் ஏதாவது தப்பு செய்திருக்கனும். அதுக்காக தான் பிளாக்மெயில் பண்ணி இருக்கலாம் என்று சொன்னவுடன் ரோகிணிக்கு அடி வயிறு கலங்குகிறது. அண்ணாமலை, சுருதி, ரவி எல்லோருமே முத்து சொல்வதை ஒத்து கொள்கிறார்கள். அதற்கு முத்து, ரோகினி - மனோஜ் இருவருமே பிராடு தான். இந்த பிரச்சனைக்கு நானே முடிவு கட்டுகிறேன். யார் அந்த குற்றவாளி என கண்டுபிடிக்கிறேன் என்று சொல்ல, ரோகிணி என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக பயத்தில் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.