மனோஜ் செய்த வேலையால் கொந்தளித்த அண்ணாமலை குடும்பம்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கேஸ் வாபஸ் வாங்க வக்கீல் 2 லட்சம் பணம் கொடுத்ததால் விஜயா ஒத்துக் கொண்டார். ஆனால், இது யாருக்கும் தெரியாது. பின் சத்யா கேஸ் வாபஸ் வாங்கின விஷயம் அறிந்த முத்து,மீனா வீட்டில் சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் சிட்டி, பணத்தை கேட்டு மிரட்ட, எப்படியாவது ரெடி பண்ணி தருகிறேன் என்றார் ரோகினி. பின் மீனா அம்மா குடும்பத்தினர் விஜயாவிடம் மன்னிப்பு கேட்டார்கள். அதன் பின் முத்து, ஏதேதோ சொல்லி விஜயாவை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
பின் கேஸ் வாபஸ் வாங்கின விஷயம் குறித்து எல்லோரும் கேட்க, வக்கீல் சொன்னது நியாயம் என்று பட்டது. அதனால் தான் வாங்கினேன். எனக்கு மீனா இந்த வீட்ல இருக்கலாம். அவர் வீட்டிலிருந்து யாரும் இங்கே வரக்கூடாது என்று கேவலமாக பேசி விஜயா இருந்தார். அண்ணாமலை, முத்து எவ்ளோ பேசியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை அடுத்து ரோகினி, விஜயா கேஸ் வாபஸ் வாங்கின விஷயத்தை பற்றி பார்வதி இடம் போட்டு வாங்கி இருந்தார். பார்வதியும் உளறி விட்டார். பின் விஜயா 2 லட்சம் வாங்கி இருந்த பணத்தை பார்வதி காண்பித்தவுடன் ரோகினி ரொம்ப சந்தோசப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய புதிய ஆர்டருக்கான வேலையை சிறப்பாக செய்திருந்தார். மண்டபத்தில் டெக்கரேஷன் செய்யும் வேலை கிடைத்து இருக்கிறது. இதை பார்த்து ஸ்ருதி-முத்து இருவருமே பாராட்டி இருந்தார்கள். நேற்று எபிசோட்டில் சுருதி, நீங்கள் இதை சோசியல் மீடியாவில் போட்டால் நிறைய ஆர்டர் கிடைக்கும் என்று சொல்ல, முத்து ஒத்துக் கொண்டார். பின் மீனாவை அழகாக தயார் செய்து மாடலிங் போல் ஸ்ருதி நடிக்க வைத்தார். மீனாவும் ஸ்ருதி சொன்னது போலவே செய்தார்.
நேற்று எபிசோட்:
இதையெல்லாம் பார்த்து முத்துவுக்கு ஒரே சந்தோஷம். இதனால் மீனாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சிட்டி, ரோகினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்ட, அவர் ரொம்பவே பயந்து இருந்தார். பின் ரோகினி, பணத்தை பற்றி யோசித்து பார்வதி வீட்டிற்கு போனார். அங்கு விஜயாவிற்கு பானிபூரி கொடுத்து ஐஸ் வைத்தார். பின் போனில் சிக்னல் இல்லை என்று சொல்லி பார்வதியின் ரூமிற்கு சென்று பணத்தை எடுத்துக் கொண்டு வந்தார் ரோகினி.
சீரியல் ட்ராக்:
இந்த விஷயம் பார்வதி-விஜயாவுக்கு எதுவுமே தெரியவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் ரவி - முத்து இருவருமே மீனா- சுருதி செய்வதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வந்த மனோஜ், மீனா-முத்து நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியானார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மனோஜுக்கு டீலர் ஓனர் போன் செய்து, விளம்பரம் எடுக்க மொத்த குடும்பத்தையும் நடிக்க சொல்கிறார். அதற்காக பணமும் கொடுக்கிறார்.
https://www.youtube.com/watch?v=dkT8lN-XQ4A
சீரியல் ப்ரோமோ:
அதை மறைத்து மனோஜ்- ரோகினி இருவருமே வீட்டில் சொன்னவுடன் எல்லோரும் சம்மதிக்கிறார்கள். பின் விளம்பரமும் எடுக்கிறார்கள். ஆனால், அந்த கேமரா மேன் அண்ணாமலை செய்தது சரியில்லை என்று திட்டிகிறார். இதனால் முத்து கோபப்படுகிறார். பணம் வாங்கிட்டு ஒழுங்காக நடிக்க முடியலையா? மனோஜ் இடம் ஓனர் பணம் கொடுத்து விட்டார் என்று கேமரா மேன் கத்துகிறார். எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். பின் வீட்டில் மனோஜ்ஜை நிக்க வைத்து எல்லோருமே முறைக்க, அவர் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார்.