நிலை தடுமாறும் அளவிற்கு குடித்த முத்து, ரோகினியின் எண்ணம் நிறைவேறுமா? பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் கடந்த வாரம் மனோஜ், கடையில் வியாபாரமே ஆகவில்லை என்று புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வந்த மனோஜ் நண்பர், பெரிய டீலர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நீங்கள், பெரிய பணக்கார வசதியான குடும்பம் என்று சொன்னால் அந்த ஆர்டர் கிடைக்கும் என்று சொன்னவுடன் மனோஜ் பேராசைப்படுகிறார். ஆனால், ரோகினி வேணாம் என்று சொல்லியும் மனோஜ் கேட்கவில்லை. நம்முடைய கல்யாண நாளை கிராண்டாக கொண்டாடி அந்த டிலரை வர வைத்து ஆர்டரை ஓகே பண்ணிடலாம் என்று மனோஜ் சொல்ல, அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று ரோகினி சொன்னார்.
இன்னொரு பக்கம், மீனா, மாப்பிள்ளை நன்றாகத்தான் இருக்கிறார். சீதா ஒருமுறை பார்த்து பேசி விட்டால் முடிவெடுக்கலாம் என்று சொல்ல, சீதாவும் தயங்கி அமைதியாகவே இருந்தார். பின் மனோஜ்-ரோகினி இருவருமே வீட்டில் தங்களுடைய கல்யாண நாளை பற்றி பேச, வழக்கம்போல் கிண்டலாக முத்து பேசி இருந்தார். அப்போது மனோஜ், திருமண நாளை கிராண்டாக கொண்டாட இருக்கிறேன். காரணம், டீலர் ஒருவர் மூலம் புது பிசினஸ் பண்ண இருக்கிறேன் என்று சொல்ல, விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் மனோஜ், முத்து- ரவியை தனியாக அழைத்து பேசி இருந்தார். அதே போல் ரோகினி, மீனா- சுருதியை தனியாக அழைத்து பேசி இருந்தார். அப்போது மனோஜ், அந்த டீலரிடம் நாங்கள் வசதியான குடும்பம் என்று சொல்லி இருக்கிறேன். அதற்கு தகுந்தார் போல் நீங்கள் உடை அணிந்து வர வேண்டும் என்று சொல்ல ஆரம்பத்தில் முத்து- ரவி இருவருமே தயங்கினார்கள். பின் தன் அண்ணனுக்காக ஒத்து கொண்டார்கள். நேற்று எபிசோட்டில் மனோஜ் சொன்னதை போலவே ரோகினியும் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
அதற்கு மீனா மறுத்தார். ரோகினையும் ஏதேதோ காரணத்தை சொல்லி பார்க்கிறார். ஆனால், மீனா ஒத்துக் கொள்ளவே இல்லை. கடைசியில் முத்து ஒத்துக் கொண்டார் என்றவுடன் வேறு வழி இல்லாமல் மீனா ஒத்துக் கொண்டார். மறுநாள் பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு அண்ணாமலை குடும்பம் வந்தார்கள். ரோகினி எப்படியாவது இந்த பங்க்ஷனில் முத்து மொபைல் இருக்கும் வீடியோவை எடுக்க வேண்டும் என்று தன்னுடைய தோழியிடம் சொல்லி திட்டம் போட்டார். இன்றைய எபிசோட்டில், டீலர் ஓனர் வந்தவுடன் மனு அவரை மனோஜ் வரவேற்று தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கிறார்.
சீரியல் ட்ராக்:
தன்னுடைய அப்பா பிசினஸ்மேன், அம்மா பரதநாட்டிய ஸ்கூல் நிறைய வைத்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார். அதற்குப் பின் முத்து 50 கார் வைத்து ரன் பண்ணி இருப்பதாக சொல்ல, முத்துவும் ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார். பின் நல்லபடியாக கேக் வெட்டி தங்களுடைய திருமண நாளை மனோஜ்-ரோகினி கொண்டாடி இருந்தார்கள். அதற்குப்பின் தன்னுடைய டீலிங்கை மனோஜிற்கு தருவதாக அந்த ஓனரும் சொன்னதால் மொத்த குடும்பமே சந்தோஷப்படுகிறது. பின் முத்துவை வீட்டுக்கு மீனா அழைத்து செல்கிறார்.
https://www.youtube.com/watch?v=08CFgxGF6a4
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நல்லபடியாக ரோகினி- மனோஜ் தங்களுடைய திருமண நாளை கொண்டாடி விடுகிறார்கள். பின் திருமண பார்ட்டிக்கு வந்திருப்பவர்களுக்கு டிரிங்ஸ் அரேஞ்ச் பண்ணி வைக்கிறார்கள். மனோஜ், டீலர் என எல்லோருமே குடித்து இருக்கிறார்கள். முத்து மட்டும் வெளியில் அமைதியாக இருக்கிறார். பின் முத்துவையும் குடிக்க வைத்து விடுகிறார்கள், தலைகால் புரியாமல் முத்து குடித்து இருக்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று முத்துவின் போனை எடுக்க பார்க்கிறார் ரோகினி.