மன வேதனையில் புலம்பிய செல்வத்திற்கு முத்து கொடுத்த வாக்கு, கடிதத்தை கண்டு அலறும் விஜயா-சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரோகினி-விஜயா செய்த வேலையால் ஸ்ருதி-ரவி, முத்து -மீனா ஆகிய நான்கு பேருக்கும் இடையே சண்டை நடந்தது. ஆனால், இது எல்லாம் நாடகம் என்று அண்ணாமலையிடம் முத்து சொல்லி இருந்தார். பின் மீனாவின் ஸ்கூட்டி, முத்து கார் மீது மோத, இருவருக்கும் சண்டை வந்து கோபத்தில் மீனா இருந்தார். முத்து அல்வா கொடுத்து மீனாவை சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் ரோகினி செய்த வேலை மனோஜ்க்கு சந்தேகம் வரவைத்தது . உடனே ரோகினி, ஏதோ ட்ராமா செய்து மனோஜை நம்ப வைத்தார்.
பின் முத்து, மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போயி தத்தெடுப்பது பற்றி பேச, ரோகினி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கடைசியில் முத்து, யோசித்து முடிவெடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்ப, இதை ரோகினி இடம் அவருடைய அம்மா சொன்னவுடன் ரோகினி ஆவேசப்பட்டு கத்தி இருந்தார். பின் முத்து- மீனா இருவருமே கிரிஷ்யை தத்தெடுப்பது பற்றி அண்ணாமலையிடம் பேச, அவர் வீட்டில் எல்லோரிடமும் பேசி முடிவெடுக்கலாம் என்று சொல்லி இருந்தார். இதை ஒளிந்து நின்று கேட்ட ரோகினி, விஜயாவிடம் சொல்லி ஏத்தி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
இந்த வாரம் மீனாவை சமைத்து பார்வதி வீட்டிற்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வா என்று விஜயா சொல்ல , முத்துவுக்கு கோபம் வந்து சண்டை போட்டார். அப்போது அண்ணாமலை, நானே சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொன்னவுடன் மீனா, நான் கொண்டு போகிறேன் என்று சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் கடையில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் லெட்டர் கொண்டு வந்து கொடுத்து படிக்கச் சொல்லி மறைந்து விட்டார். அந்த கடிதத்தில் உன் தம்பி கொலையாளி ஆவான், நீ தற்கொலை செய்து கொள்வாய் என்று இருந்ததை பார்த்து மனோஜ் ரொம்ப பயந்து அந்த நம்பரை தேடி போனார்.
மனோஜுக்கு வந்த கடிதம்:
அந்த நபர் ஒரு டீக்கடையில் இருந்து பில் கொடு நான் சொல்கிறேன் என்று சொன்னவுடன் மனோஜும் நம்பி பணம் கொடுக்க, அதற்குள் அந்த நபர் காணாமல் போய்விடுகிறார். அங்கிருந்தவர்கள் மனோஜை கிண்டலாக பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம், மீனா தன்னுடைய மாமியாருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் முதியவர்கள் பசியால் இருந்ததால் அவர்களுக்கு போட்டு விட்டார். நேற்று எபிசோடில் விஜயாவிற்கு பிரியாணி வாங்கி கொண்டு போய் மீனா கொடுத்தார். ஏன் ஓட்டலில் வாங்கி வந்தாய்? என்று விஜயா கேட்டதற்கு ஏதேதோ சொல்லி மீனா சமாளித்தார்.
சீரியல் ட்ராக்:
வீட்டில் விஜயா, பிரியாணி சாப்பிட்டு ஜீரணம் ஆகாமல் ரொம்ப அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க, அண்ணாமலை, உனக்கு சமைத்து தானே எடுத்துக் கொண்டு மீனா போனார் என்று கேட்டதற்கு, விஜயா திட்டி இருந்தார். பின் மீனா, முதியவர்களுக்கு சாப்பாடு கொடுத்த விசயத்தை சொல்ல, முத்து- அண்ணாமலை இருவருமே பாராட்டி இருந்தார்கள். பின் எல்லாரும் தூங்கிய பிறகு மனோஜ் தனக்கு வந்த கடிதத்தை தன் அம்மாவிடம் காண்பித்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், கடிதத்தை நினைத்து இருவருமே பயந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் வந்த ரோகினி, இதெல்லாம் ஒன்றுமில்லை விளையாட்டிற்காக யாரோ செய்த வேலை என்று சொல்லி சமாதானம் செய்தார் .
இன்றைய எபிசோட்:
மறுநாள் மீனா, அந்த முதியவர்களுக்கு சாப்பாடு கொண்டு போய் தருகிறார். அதற்கு முன்பே முத்து அவர்களுக்கு வேலை கொடுத்து சம்பளமும் தந்தார் . இதை பார்த்து மீனா- முத்து இருவருமே சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினி, தன் மகன் அம்மாவிற்காக வீடு தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது வீட்டின் ஓனர் இரண்டு நாட்களில் பணத்தை கொடுக்க வேண்டும் என்று சொல்வதால் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார். கடைசியில் செல்வம், பண கஷ்டத்தில் குடித்துவிட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார். உடனே முத்து, நான் உனக்கு ஏற்பாடு செய்து தருகிறேன் என்று வாக்கு கொடுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.