தடபுடலாக கொலு வைக்கும் விழாவை ஏற்பாடு செய்யும் மீனா, உற்சாகத்தில் முத்து குடும்பம்- சிறகடிக்க ஆசை

By subhashini · 25/9/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் சண்டையில் சிட்டி, மீனாவை கீழே தள்ளியதால் தலையில் அடிப்பட்டது. அந்த சமயம் வந்த முத்து, சிட்டியை வெளுத்து வாங்கி விட்டு மீனாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். இதை எல்லாம் தெரிந்த சத்யா, சிட்டியை பார்த்து சண்டை போட்டு, மீனாவிடம் மன்னிப்பு கேட்டு, வாக்குறுதி கொடுத்தார். பிறகு வீட்டிற்கு வந்த மீனாவை பார்த்தவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி விசாரிக்க, வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று முத்து சொல்லி சமாளித்தார். இன்னொரு பக்கம் ரோகினி, சிட்டியை சந்தித்த போது உங்கள் மாமியாரின் பணம் திருடு போனதற்கு காரணம் மீனாவின் தம்பி சத்யா தான்.

அது முத்துவிற்கும் தெரியும். அது தொடர்பான வீடியோ முத்து போனில் இருக்கு. அதை வெளியே விட்டால் நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்கிறேன் என்று சொன்னவுடன் ரோகினி ஒத்துக் கொண்டார். மேலும், மீனா-மூத்து இருவருமே பூ விற்க ஸ்கூட்டியில் சென்று இருந்தார்கள். அதை பார்த்த சிட்டி, தன் வண்டியால் முத்து-மீனா ஸ்கூட்டி மீது மோத வேகமாக சென்றார். ஒரு கட்டத்தில் முத்து வண்டி மீது சிட்டி கார் மோத போனது. அந்த சமயம் பார்த்து குறுக்கே வேறொரு வண்டி வந்ததால் முத்து-மீனா இருவருமே சிட்டியிடம் இருந்து தப்பித்து விட்டார்கள். இந்த வாரம் முத்து, தன்னுடைய மொபைலை சார்ஜ் போட்டு விட்டு குளிக்கப் போனார்.

சிறகடிக்க ஆசை:

உடனே ரோகினி, முத்து போனை யாருக்கு தெரியாமல் எடுத்து செக் பண்ணார். அந்த சமயம் பார்த்து முத்து வர, ரோகினி கட்டிலுக்கு அடியில் போயி மறந்து கொண்டார். இன்னொரு பக்கம் மனோஜ், தன்னுடைய மனைவியை காணவில்லை என்று விஜயாவிடம் கேட்க, அவர் தெரியாது என்றார். பின் ரோகினி, முத்துவின் மொபைலில் இருந்த சத்யா வீடியோவை பார்த்து ஷாக் ஆகி, அதை அவர் தன்னுடைய மொபைலுக்கு அனுப்ப பார்த்தார். ஆனால், போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. அப்போது முத்து தனது போனை தேட, போன் கிடைக்கவில்லை. எப்படியோ ரோகினி போனை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து மாடிக்கு சென்று விட்டார். கடைசியில் மீனா, போனை கொண்டு போய் முத்துவிடம் தந்தார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் ரவி, தன்னுடைய ஓனர் உடன் சேர்ந்து ஹோட்டலுக்கு தேவையான பொருள் வாங்க சென்று இருந்தார். இதை பார்த்த ஸ்ருதி அம்மா கோபப்பட்டு இருந்தார். நேற்று எபிசோட்டில், ஒருவர் கோவிலில் மீனாவை பார்த்து கொலு வைக்க சொல்லி அறிவுரை செய்தார். இந்த விஷயத்தை அவர் முத்துவிடம் சொல்ல, அவரும் கொலு வைக்க ஒத்துக் கொள்கிறார். இதை அண்ணாமலையிடம் சொல்லி விஜயாவிடம் சம்மதம் கேட்டார் முத்து. ஆனால், முதலில் விஜயா மறுத்தார். பின் அண்ணாமலை, விஜயாவை புகழ்ந்து பேசி கொலு வைக்க எப்படியோ சம்மதம் வாங்கி விட்டார்.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் ஸ்ருதியிடம், ரவி நடந்து கொண்டதை பற்றி அவரின் அம்மா சொல்ல, அவர் சிரித்து கிண்டல் அடித்து விட்டு சென்று விட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், வீட்டில் கொலு வைப்பது பற்றி விஜயா, பார்வதி இடம் பேசி கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அந்த காதல் ஜோடிகள் தேவையில்லாத வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் வந்த மீனா, அவர்களை பார்த்து திட்டுகிறார். ஆனால், விஜயா வழக்கம் போல் மீனா சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் அந்த காதல் ஜோடிகள் சொன்னதை நம்பி மீனாவை திட்டி அனுப்பி விடுகிறார். வீட்டில் முத்து, கொலு வைப்பதற்கு தேவையான பொம்மைகள் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறார். அதை பார்த்து மீனா சந்தோஷப்பட்டு எல்லாத்தையும் பிரித்து பார்க்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ரூமில் இதை பற்றி மனோஜ், ரோகினி பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது கிரிடிட் கார்ட் வைத்து துணி வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். அப்போது முத்து, கொலு வைக்க பணம் கேட்கிறார். ஆனால், மனோஜ் மறுக்க, ரோகிணி தர ஒத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் சுருதி, தன் அம்மா சொன்னதை பற்றி ரவி இடம் பேச இருவருக்கு சின்ன வாக்குவாதம் நடக்கும். அந்த சமயம் வந்த முத்து-மீனா கொலு வைப்பது பற்றி பணம் கேட்டவுடன் சுருதி எதுவுமே பேசாமல் எடுத்துக் கொடுத்து விடுகிறார். பின் கொலு பொம்மைகளை பற்றி மீனா, சுருதிக்கு அழகாக சொல்லிக் கொடுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full