விஜயாவிற்கு பாடம் புகட்ட முத்து போட்ட பிளான், அண்ணாமலை சொன்ன வார்த்தை-விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 1/9/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் சீதா வேலை செய்யும் இடத்தில் ரோகினியை பற்றி உண்மை தெரிந்து மீனா அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார். அந்த சமயம் முத்து செய்த சாதனையை இணையத்தில் புகழ்ந்தார்கள். பின் ஸ்ருதியிடம் ரோகினி பற்றி மீனா சொன்னவுடன் சுருதி அதிர்ச்சியில் ரவியிடம் சொன்னார். ரவி அதிர்ச்சியாகி முத்துவிடம் சொன்னார். முத்து உடனே அண்ணாமலை இடம் சொல்ல, அண்ணாமலை விஜயாவிடம் ரோகினியை பற்றி பேசி இருந்தார். உடனே விஜயா, கோபத்தில் ரோகினி இடம் சண்டை போட, ரோகினி பயத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் அழுதார்.

கடைசியில் ரோகினி, ஆமாம் இது இரண்டாவது குழந்தை தான். முதல் குழந்தை அபாசன் ஆகிவிட்டது என்று ஒரு புது கதையை சொல்லி இருந்தார். ரோகினி சொல்வதைக் கேட்டு எல்லோருமே நம்பி விடுகிறார்கள். பின் இதை மீனா தான் சொன்னார் என்றவுடன் விஜயா பயங்கரமாக திட்டி பேசி இருந்தார். இந்த வாரம் மீனா-சுருதி இருவருமே உட்கார்ந்து பேய் படம் பார்க்கிறார்கள். பேய் படத்தை பார்த்து மீனா ரொம்பவே பயப்படுகிறார். இதை பார்த்த விஜயா கிண்டலாக பேச, உடனே சுருதி, விஜயாவிற்கு பயத்தை காண்பிக்க நினைத்து, பேய் போல் பயங்கரமாக சவுண்ட் எபெக்ட் எல்லாம் வைத்து பயமுறுத்துகின்றார். விஜயாவும், பயத்திலேயே கட்டில் மேலிருந்து கீழே விழுந்து விடுகிறார்.

சிறகடிக்க ஆசை:

மீனா, வேண்டாம் என்று தடுத்தும், விடாமல் சுருதி பேய் போல் சவுண்ட் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
கடைசியில் சுருதி செய்த வேலை என்று தெரிந்தவுடன் விஜயா, மீனாவை தான் பயங்கரமாக திட்டிவிட்டு செல்கிறார். மறுநாள் ஸ்ருதி வெளியே வரும்போது மீனாவை இடித்ததால் கையில் இருந்த எண்ணெய் கீழே விழுந்தது. துடைப்பதற்காக மீனா உள்ளே துணி எடுத்து வர போக, அந்த சமயம் அங்கு வந்த விஜயா வழுக்கி விழுந்து விடுகிறார். கடைசியில் விஜயா, மீனாவை தான் பயங்கரமாக திட்டுகிறார்.

நேற்று எபிசோட்:

உடனே ஸ்ருதி, இது என்னுடைய தவறால் நடந்தது. தேவையில்லாமல் மீனாவை திட்டாதீர்கள் என்று கோபமாக கத்திவிட்டு சென்று விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி -மனோஜ் இருவருமே விஜயாவை ஏற்றி விடுகிறார்கள். நேற்று எபிசோடில் விஜயாவிற்கு கால் அடிபட்டதால் மீனா வருத்தப்பட்டு அவருக்காக வைத்தியம் ரெடி பண்ணி கொடுக்கிறார். இருந்தும் மீனாவை பயங்கரமாக விஜயா திட்டி விடுகிறார். பின் மீனா சொன்ன மாதிரி காலுக்கு ஒத்தனம் கொடுத்து விட்டு அதை கிச்சனில் வைக்க போகிறார்.

இன்றைய எபிசோட்:

அந்த சமயம் பார்த்து மீனா, ஏதோ அலமாரியில் தேடிக் கொண்டிருக்கும்போது கால் தடுமாறி கீழே விழப் போகிறார். அப்போது முத்து மீனாவை பிடித்து விட, மொத்த மாவு டப்பாவும் விஜயா மேல் விழுந்ததால் பார்ப்பதற்கு காமெடியாக இருந்தார். விஜயாவை பார்த்து எல்லோருமே பயந்து கலாய்த்து இருந்தார்கள். ஸ்ருதி அவரை போட்டோ எடுத்து சோசியல் மீடியா போட்டுவிட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி, ஸ்ருதி- மீனாவை பற்றி தப்பு தப்பாக விஜயாவிடம் சொல்ல, விஜயாவிற்கு கோபம் வந்து அவருடைய அம்மாவிற்கு போன் செய்து வர வைத்தார். பின் சுருதி பத்தி சொன்னவுடன் அவர் அம்மாவிற்கு பயங்கர கோபம் வந்தது.

https://youtu.be/cdcsooyc7Eg?si=ZttUDvGJVri5t6Hy

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், விஜயாவின் பேச்சை கேட்டு ஸ்ருதியின் அம்மா மீனாவை பயங்கரமாக திட்டுகிறார். கோபத்தில் மீனாவும் சண்டை போடுகிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து கோபமாக ஸ்ருதியிடம் சண்டை போட, ரவியும் கத்துகிறார். இதையெல்லாம் வெளியில் இருந்து விஜயா கேட்டு சந்தோசப்படுகிறார். ஆனால், ரூம் உள்ளே எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு சண்டை போடுவது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை முத்து, அண்ணாமலை இடம் சொல்ல பிரச்சனை வராமல் இருந்தால் சரி என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full