மீனாவின் ஆசைக்காக முத்து- அண்ணாமலை செய்த வேலை, விஜயா சம்மதித்தாரா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரோகினியை பிளாக்மெயில் செய்யும் மேனேஜர், 30 லட்சம் வேணும் என்று மிரட்டி இருந்தார். இன்னொரு பக்கம் சத்யா வாழ்க்கைக்காக மீனா, சிட்டியை பார்த்து சண்டை போட்டார். அப்போது சண்டையில் சிட்டி, மீனாவை கீழே தள்ளியதால் தலையில் அடிப்பட்டது. அந்த சமயம் வந்த முத்து, சிட்டியை வெளுத்து வாங்கி விட்டு மீனாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். இதை எல்லாம் தெரிந்த சத்யா, சிட்டியை பார்த்து சண்டை போட்டு வந்து விட்டார். பின் ஹாஸ்பிடலில் மீனாவிடம் சத்யா மன்னிப்பு கேட்டு, வாக்குறுதி கொடுத்தார்.
பிறகு வீட்டிற்கு வந்த மீனாவை பார்த்தவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி விசாரிக்க, வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று முத்து சொல்லி சமாளித்தார். பின் ரோகினி, சிட்டியை சந்தித்து அந்த மேனேஜரை ஏதாவது பண்ண சொல்லி கேட்க, உடனே சிட்டி, உங்கள் மாமியாரின் பணம் திருடு போனதற்கு காரணம் மீனாவின் தம்பி சத்யா தான். அது முத்துவிற்கும் தெரியும். அது தொடர்பான வீடியோ முத்து போனில் இருக்கு. அதை வெளியே விட்டால் நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்கிறேன் என்று சொன்னவுடன் ரோகினி ஒத்துக் கொண்டார். மேலும், மீனா-மூத்து இருவருமே பூ விற்க ஸ்கூட்டியில் சென்று இருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
அதை பார்த்த சிட்டி, தன் வண்டியால் முத்து-மீனா ஸ்கூட்டி மீது மோத வேகமாக சென்றார். ஒரு கட்டத்தில் முத்து வண்டி மீது சிட்டி கார் மோத போனது. அந்த சமயம் பார்த்து குறுக்கே வேறொரு வண்டி வந்ததால் முத்து-மீனா இருவருமே சிட்டியிடம் இருந்து தப்பித்து விட்டார்கள். நேற்று எபிசோட்டில், முத்து, வேலைக்கு டைம் ஆகிறது என்று தன்னுடைய மொபைலை சார்ஜ் போட்டு விட்டு குளிக்கப் போனார். உடனே ரோகினி, முத்து போனை எடுத்து கொண்டு கட்டிலுக்கு அடியில் சென்று செக் பண்ணார். அந்த சமயம் பார்த்து முத்து, குளித்து முடித்துவிட்டு ரெடியாகி கொண்டிருக்க, மீனா, முத்துவிற்கு சாப்பாடு ஊட்டி விட்டார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் மனோஜ், தன்னுடைய மனைவியை காணவில்லை என்று விஜயாவிடம் கேட்க, அவர் தெரியாது என்கிறார். ரோகினி, முத்துவின் மொபைலில் இருந்த சத்யா வீடியோவை பார்த்து ஷாக் ஆகி, அதை அவர் தன்னுடைய மொபைலுக்கு அனுப்ப பார்த்தார். ஆனால், போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. அப்போது முத்து தனது போனை தேட, கிடைக்கவில்லை. எப்படியோ ரோகினி போனை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து மாடிக்கு சென்று விட்டார். கடைசியில் மீனா, போனை எடுத்து கொண்டு போய் முத்துவிடம் தந்தார்.
இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் ரவி, தன்னுடைய ஓனர் மகள் உடன் சேர்ந்து ஹோட்டலுக்கு தேவையான பொருள் வாங்க சென்று இருந்தார். இதை பார்த்த ஸ்ருதி அம்மா கோபப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், தன் அம்மா வேலை செய்யும் இடத்திற்கு மீனா வந்து, தம்பி- தங்கை குறித்து நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோயில் இருந்த வந்த பூசாரி, ஒருவருக்கு கொலு வைப்பதற்கு பிரசாதம் செய்து தர வேண்டும் என்று கேட்க, மீனாவின் அம்மா செய்து தர சம்மதிக்கிறார். உடனே அந்த நபர், மீனாவை பார்த்து கொலு வைக்க சொல்லி அறிவுரை செய்தார்.
சீரியல் ட்ராக்:
உடனே மீனாவும் சந்தோஷப்படுகிறார். பின் இந்த விஷயத்தை முத்துவிடம் சொல்ல, அவரும் கொலு வைக்க ஒத்துக் கொள்கிறார். இதை அண்ணாமலையிடம் சொல்லி விஜயாவிடம் சம்மதம் கேட்கிறார் முத்து. ஆனால், அண்ணாமலை யோசிக்கிறார். அந்த நேரம் பார்த்து விஜயா வந்த உடன் கொலு விஷயத்தை அண்ணாமலை சொல்ல, விஜயா மறுக்கிறார். வழக்கம்போல் மீனாவை தான் விஜயா திட்டி பேசுகிறார். பின் அண்ணாமலை, விஜயாவை புகழ்ந்து பேசி கொலு வைக்க எப்படியோ சம்மதம் வாங்கி விடுகிறார். மீனா-முத்து ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் ஸ்ருதியிடம், ரவி நடந்து கொண்டதை பற்றி அவரின் அம்மா சொல்ல, அவர் சிரித்து கிண்டல் அடித்து விட்டு சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.