முத்து வைத்த ஆப்புவால் ஆடிப்போன அருண், சீதாவின் நிலை என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சாமியார், மனோஜ் பேசுவதற்காக அவருடைய வாயில் சூடத்தை போட, அவரால் வலி தாங்க முடியாமல் கத்தினார். ஒரு வழியாக மனோஜ் பேசி விட்டார். அதற்குபின் ரோகினிடம் மனோஜ், எதற்காக நான் சொல்லாததை என்னுடைய அம்மாவிடம் சொன்னாய் என்று கேட்டார். உடனே ரோகினி, நீ தான் எனக்காக சப்போர்ட் செய்ய மாட்டுகிறாய். அதனால் தான் நான் பேசுகிறேன் என்று வழக்கம்போல இருவரும் சண்டை போட்டார்கள். மறுநாள் காலையில் முத்து சவாரிக்கு வந்து கொண்டிருக்கும்போது ஒரு பெண்ணினுடைய செயினை திருடர்கள் திருடி விட்டார்கள்.
முத்து- அருண் இருவருமே அந்த திருடனை பிடிக்க போனார்கள். அந்த திருடன் ஒரு பெண்ணுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட, எப்படியோ முத்து அந்த திருடனை பிடித்து விட்டார். அருண், அந்த திருடனை போலீசில் கொடுத்ததால் அவரை எல்லோருமே பாராட்டி இருந்தார்கள். இந்த சந்தோஷத்தை அருண் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். உடனே அவருடைய அம்மா, மீனாவின் மாமியாரை சந்தித்து பேசினேன். ஆனால், அவர் என்னை ரொம்பவே அவமானப்படுத்திவிட்டார். இனி சீதா உனக்கு வேண்டாம் என்று ரொம்ப எமோஷனலாக பேசினார். இன்னொரு பக்கம் ரோகினி, தன்னுடைய பாய் பிரண்ட் உடன் பேசுவது போல் நடிக்க, இதை எல்லாம் கேட்ட மனோஜ்க்கு சந்தேகம் வந்தது.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகினியை மனோஜ் ஃபாலோ செய்து போனார். அங்கு ஒரு ஹோட்டலில் ரோகினி, ஆண் நண்பரை சந்தித்து பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட மனோஜ், ரோகினி இடம் போய் சண்டை போட்டார். உடனே ரோகினி, இவர் என்னுடைய தோழி மகேஸ்வரியின் கணவர். என்னுடைய தோழி வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லி முடிப்பதற்குள் அவருடைய தோழி மகேஸ்வரி வந்து விட்டார். அதற்குப்பின் ரோகினி, மனோஜ் இருவரும் தனியாக பேசி இருந்தார்கள். ரோகினி, நான் உங்களை காதலிக்கிறேன். உங்களை விட்டு எங்கும் போகமாட்டேன் என்று சொல்ல, இருவரும் சேர்ந்து விட்டார்கள்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் அருண், மீனாவை சந்தித்து பேசுகிறார். அப்போது மீனா, நீங்கள் செய்த தவறால் தான் அவர் கோபத்தில் இருக்கிறார். என்னால் எதுவுமே பேச முடியவில்லை என்று சொன்னார். உடனே சீதா, அப்பா இல்லாத கஷ்டம் இப்ப புரியுது என்று வேதனையாக புலம்பிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் திருடர்களை தான் தனியாக பிடித்தது போல அருண் பேட்டி கொடுத்திருந்தார். இதை முத்துவின் நண்பர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதை அறிந்த முத்து, அந்த திருடனை பிடித்துக் கொடுத்தது நான் தான். இவன் பொய் சொல்கிறான். இதை நான் சும்மா விட மாட்டேன் என்று கோபப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி- ரவி இருவருமே புது ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் முத்து நிறைய குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து மீனாவுக்கு கோபம் தான் அதிகமாகிறது. அப்போது முத்து, நான் அருண் செய்த வேலை எல்லாம் சொல்லி புலம்புகிறார். அந்த சமயம் பார்த்து சீதா, மீனாவிற்கு போன் செய்து பேசுகிறார். அப்போது மீனா, அருண் செய்த வேலையை சொல்கிறார். மறு நாள் காலையில் முத்து காப்பாற்றிய அந்தப் பெண் தன்னுடைய கணவருடன் சேர்ந்து முத்துவின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது அவர்கள், தங்கமான பையனை பெற்றெடுத்திருக்கிறீர்கள். உங்கள் மகனால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்றெல்லாம் முத்துவை புகழ்ந்து பேசினார்கள். இதைக் கேட்டு அண்ணாமலை ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் முத்துவிற்கு தங்கச் செயினை பரிசாக கொடுத்திருக்கிறார்கள்,
இதை எல்லாம் சுருதி வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு விடுகிறார். இதை அருண், அவருடன் வேலை செய்யும் அதிகாரிகள் எல்லோருமே பார்த்து விடுகிறார்கள். பின் அருணுக்கு போன் செய்த உயர் அதிகாரி, நீ செய்தாய் என்று சொல்லி பாராட்டு வாங்கினாய். அந்த பெண்ணே முத்துவிற்கு பரிசு கொடுத்து இருக்கிறார். என்ன சொல்ல போகிறாய் என்று கேட்கிறார். அருணால் எதுவுமே பேச முடியவில்லை.