கிரிஷை தேடி அலையும் முத்து, மீனா மீது கோபப்படும் அருண் - பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, எல்லோரும் கும்பகோணம் போறோம். நீங்களும் மாமாவும் வரவேண்டும் என்று சொல்ல, மீனா வேலை இருப்பதால் வர முடியாது என்றார். பின் மீனா அதைப் பற்றி முத்துவிடம் சொன்னார். அதற்கு முத்து, நீ போயிட்டு வா என்றார். அதற்கு பின் ஸ்ருதி, ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணுவதற்காக இன்வெடேஷனை மீனாவிடம் காண்பித்தார். வீட்டில் உள்ள எல்லோரிடமும் பத்திரிகைகளை காண்பிக்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விருப்பத்தை சொன்னார்கள். ரவி, இந்த ஓட்டல் விஷயத்தில் தலையிடவில்லை.
மறுநாள் காலையில் தன்னுடைய யோகா கிளாஸ் தொடங்குவதற்காக விஜயா, பார்வதி, சிந்தாமணி மூவருமே நோட்டீஸ் கொடுக்க கிளம்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் வித்யா வீட்டிற்கு ரோகினி, கிரிஷை பார்க்க வந்திருந்தார். அதேசமயம் பார்த்து தன்னுடைய வண்டி ரிப்பேர் ஆனதால் மீனாவுமே வித்யா வீட்டிற்கு வந்தார். உடனே ரோகினி, கிரிஷை அழைத்துக்கொண்டு ஒளிந்து கொண்டார். அப்போது மீனா, மெக்கானிக்கல் வரும் வரை உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று வெளியே கிளம்பினார். அப்போது கிரிஷ் செருப்பை பார்த்தவுடன் மீனா ஷாக் ஆகி கேள்வி கேட்டார்.
சிறகடிக்க ஆசை:
பின் வித்யா தடுமாற, உடனே ரோகினியின் தோழி, என்னுடைய மகன் செருப்பு தான் என்று சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் வித்யா, எத்தனை நாட்கள் தான் இப்படி பொய் சொல்லப் போகிறாய். தயவு செய்து உண்மையை சொல் என்றார். இதனால் கோபப்பட்டு ரோகினி, வித்யாவை திட்டினார். அதற்குப்பின் வித்யாவின் வீட்டிற்கு நோட்டீஸ் கொடுக்க விஜயா வருவதை பார்த்து மீண்டும் ரோகினி, கிரிஷ் இருவருமே ஒளிந்து கொண்டார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்து, விஜயாவின் யோகா கிளாஸ் பற்றி எல்லோரிடமே சொல்லி சந்தோஷப்பட்டார்.
நேற்று எபிசோட்:
எல்லோருமே யோகாவை பதறி கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். அதற்கு விஜயாவுமே ஏதேதோ பதில் சொல்லி சமாளித்தார். அதன் பின் விஜயா நோட்டீஸ் கொடுத்திருக்கும்போது லட்சுமியை பார்த்திருந்தார். விஜயா அவரிடம் பேச போவதற்குள் அவர் சென்று விடுகிறார். அதைப்பற்றி மீனாவிடம் விஜயா சொல்ல, ரோகினி ஷாக் ஆனார். அதற்குப் பின் ரோகினி, வித்யாவிற்கு போன் செய்து என் அம்மா வந்தால் தயவு செய்து எனக்கு போன் செய். கிரிஷை பத்திரமாக பார்த்துக் கொள் என்றெல்லாம் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிரிஷ் பாட்டி வீட்டிற்கு முத்து-மீனா சென்று இருக்கிறார்கள். ஆனால், அங்கு வீட்டை காலி செய்து விட்டதாக ஓனர் சொல்கிறார். அதோடு அந்தப் பையனை அழைத்துக் கொண்டு அவருடைய அம்மா சாப்பிட போவதாக சொன்னார். உடனே முத்து-மீனா இருவருமே அந்த ஹோட்டலுக்கு போகிறார்கள். அதற்குள் கிரிஷ்- ரோகினி இருவரும் சென்று விடுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் தங்களுடைய புது ரெஸ்டாரண்டை திறப்பதற்கான கார்டை ஸ்ருதி, அண்ணாமலையிடம் காண்பிக்கிறார். அவருமே பாராட்டுகிறார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் கார்டை கொடுத்து ஸ்ருதி அழைக்கிறார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் சீதா வீட்டில் எல்லோரும் கும்பகோணம் செல்வதால் மீனா அவர்களை வழியனுப்ப போகிறார். முத்து, தன் மாமியாரிடம் பணம் கொடுக்க சொல்லி இருக்கிறார். அருண், முத்து வரக்கூடாது என்று சொன்னானா? என்று பேசுகிறார். அதற்கு மீனா, அப்படியெல்லாம் இல்லை எனக்கு வேலை இருப்பதால் தான் வர முடியவில்லை என்கிறார். பின் எல்லோருமே கிளம்புகிறார்கள். அப்பொழுது மீனா, தன்னுடைய அம்மாவிடம் பணத்தை கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்து கடுப்பான அருண், எதற்கு தேவையில்லாமல் செய்கிறீர்கள்? நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா, என்னை அசிங்கப்படுத்துகிறீர்களா? என்று முத்து மீது இருந்த கோபத்தை மீனா மீது காண்பிக்கிறார். மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே அருண் அம்மா, அவருடைய மருமகன் கொடுக்கிறார். இதில் என்ன பிரச்சனை என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது