சத்யாவை தேடி அலையும் முத்து-மீனா, கடத்தியது யார்? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 14/4/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது சீதாவிடம் மீனா, நீ யாருடன் பைக்கில் வந்தாய்? உன்னுடைய பிரண்டா? என்றெல்லாம் விசாரித்தார். சீதாவும் முடிந்தவரை சமாளிக்க, பின் அவர், அவர் என்னை காதலிக்கிறார். நானும் அவரை காதலிக்கிறேன். ஆனால், இன்னும் அவரிடம் நான் சம்மதம் சொல்லவில்லை. அவரைப் பற்றி தெரிந்து கொண்டு வீட்டில் எல்லோரிடமும் பேசிவிட்டு சொல்லலாம் என்று இருக்கிறேன் என்று சொன்னவுடன் மீனா சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி, தன்னுடைய பார்லர் ஆர்டரை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது விஜயா, ரோகினி இடம் விசாரித்துவிட்டு அவருடைய கிரெடிட் கார்டை வாங்கி வைத்து விட்டார். ரோகினியால் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மனோஜிடம் ரோகினி இடம் பேசினாயா? கடைக்கு வந்தாளா? என்றெல்லாம் விசாரித்தார். பின் ரோகினி உங்கள் அம்மா, என்னுடைய கிரிடிட் கார்ட் வாங்கி விட்டார் என்று சொன்னதற்கு, மனோஜ் எதுவுமே பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அதற்குப்பின் ஸ்ருதி, மீனா, முத்து, ரவி ஆகிய 4 பேருமே ரோகினி விஷயத்தை பற்றி பேசி இருந்தார்கள். அப்போது மாடிக்கு மனோஜை வரவைத்து விஜயா செய்த விஷத்தை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால், மனோஜ் அதை கண்டு கொள்ளவே இல்லை. அவர்களுக்கு எதிராக தான் பேசி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

முத்து-ரவி சொல்ல வருவதை மனோஜ் கேட்கவே இல்லை. அவர்கள் மீது தான் கோபப்பட்டு சென்றார். மறுநாள் காலையில் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது முத்து, மீனா ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு வா, என் அம்மாவிடம் கொடு என்று சொன்னவுடன் அண்ணாமலைக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது முத்து, ரோகினி விஷயத்தை சொன்னார். அதற்கு அண்ணாமலை, எதற்காக இப்படி செய்தாய்? என்று விஜயாவை கேட்டார். உடனே ரோகினி, அத்தைக்கு எப்போது விருப்பமோ அப்போ கொடுக்கட்டும்.

கடந்த வாரம் எபிசோட்:

இந்த விஷயத்தில் யாரும் தலையிட்டு குளிர் காயவேண்டாம் என்று சொல்லிவிடுவதால் யாராலும் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப் பெயர் மீனா தன் தோழிகளுடன் ஸ்கூட்டி வந்து கொண்டிருந்தார்.
மூன்று பேர் வருவதால் டிராபிக் போலீஸ் அருண், பைன் போட்டார். உடனே மீனாவை பார்த்ததும் அருண், நீ அந்த ரவுடி பொண்டாட்டி தானே என்று கேட்டதற்கு மீனா கோபப்பட்டார். பின் பயனை கட்டிவிட்டு கிளம்பி விட்டார். அதற்குப்பின் வேலை முடித்து விட்டு அருண், சீதாவை அழைத்து வர பார்க்கிறார். சீதாவே அங்கு வந்து விட்டார். அப்போது அவர், என் அக்காவிற்கு நம் விஷயம் தெரிந்து விட்டது என்று சொன்னவுடன் அருண் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் ஷோரூமில் வியாபாரம் ஆகவில்லை என்று தன் நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு அவருடைய நண்பர், ரோகினி தான் உன்னுடைய லக்கி சாம். அவரால் தான் உன் வாழ்க்கை மாறியது என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து வந்த ரோகினி, மனோஜிடம் மன்னிப்பு கேட்டு பேசுகிறார். மனோஜ், என் அம்மா பார்த்தால் பிரச்சினையாகிவிடும். இங்கிருந்து கிளம்பு என்று சொல்கிறார். ரோகினி எவ்வளவு சொல்லியுமே மனோஜ் ஏற்றுக்கொள்ளவில்லை. அழுது கொண்டே ரோகினி கிளம்பிவிட்டார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது போன் செய்த சீதா, சத்யாவை காணவில்லை, தேர்வு இருக்கிறது என்று ரொம்ப பதட்டமாக பேசினார். இதைக் கேட்டவுடன் முத்து ஷாக் ஆகிறார். பின் முத்து மீனாவிடம் எதுவும் சொல்லாமல் சத்யாவை தேடி தன்னுடைய நண்பருடன் சென்று விட்டார். சத்யா போகும் இடங்களுக்கெல்லாம் சென்று விசாரிக்கிறார். ஆனால், யாருமே சத்யா வரவில்லை என்று சொல்கிறார்கள். அப்போது அங்கு வந்த மீனா, சத்யாவை பற்றி கேட்கிறார். முத்து உண்மையை சொல்கிறார். இதனால் மீனா ரொம்பவே பயந்து விடுகிறார். அதற்குப்பின் சிசிடிவி கேமராவில் சத்யாவை சிட்டி கடத்தி சென்றிருப்பதை பார்த்து விடுகிறார்கள். இத்துடன் தொடர் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full