கிரிஷை தத்தெடுக்க நினைக்கும் முத்து, விஜயாவிடம் ரோகினி செய்த சகுனி வேலை கை கொடுத்ததா? சிறகடிக்க ஆசை

By subhashini · 7/9/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் மீனா-சுருதி இருவருமே உட்கார்ந்து பேய் படம் பார்க்க, விஜயா கிண்டலாக பேச, உடனே சுருதி, விஜயாவிற்கு பயத்தை காண்பிக்க, பேய் போல் பயங்கரமாக சவுண்ட் எபெக்ட் எல்லாம் வைத்து பயமுறுத்தி இருந்தார். பின் சுருதி செய்த வேலை என்று தெரிந்தவுடன் விஜயா, மீனாவை தான் திட்டி இருந்தார். மறுநாள் ஸ்ருதி, மீனாவை இடித்ததால் கையில் இருந்த எண்ணெய் கீழே விழுந்தது. அந்த சமயம் வந்த விஜயா வழுக்கி விழுந்தார். ஆனால், அதற்கு காரணம் மீனா என்று திட்டி இருந்தார்.

இதை எல்லாம் பார்த்த சுருதி, விஜயாவை திட்டி விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி -மனோஜ் இருவருமே விஜயாவை ஏற்றி விட்டார்கள். விஜயாவிற்கு கோபம் வந்து அவருடைய அம்மாவிடம் நடந்ததை சொன்னார். உடனே ஆத்திரத்தில் அவர் மீனாவை பார்த்து ரொம்ப கேவலமாக பேசி இருந்தார். இதனால் ஸ்ருதி-ரவி, முத்து -மீனா ஆகிய நான்கு பேருக்கும் இடையே சண்டை பயங்கரமாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். இந்த வாரம் முத்து சவாரியில் ஒரு நபரை அழைத்துக் கொண்டு வந்தார்.

சிறகடிக்க ஆசை:

அந்த சமயம் பார்த்து மீனாவின் ஸ்கூட்டி, முத்து கார் மீது மோத, ஏதோ தெரியாத நபர்கள் போல இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள் . அப்போது போலீஸ் வந்து விசாரிக்க, உடனே முத்து, இவர் என் மனைவி என்று சொல்ல, சவாரி வந்த நபர், நீங்கள் சொன்ன பேயாட்டம் பொண்ணு இவர் தானா? என்று கேட்டவுடன் மீனாவிற்கு பயங்கர கோபம் வந்து விடுகிறது. இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் ரோகினிக்கு மனோஜ்க்கு போன் செய்து பேச, வித்யா உடன் இருக்கிறேன் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து ஷோரூமுக்கு வித்யா போனார். உடனே மனோஜ்க்கு சந்தேகம் வருகிறது.

சீரியல் கதை:

மீனாவை சமாதானம் செய்ய முத்து பல ராஜதந்திர வேலைகலை செய்தார். இருந்தும் மீனா மனம் மாறவில்லை. முத்து வெள்ளைக்கொடி காட்டி அல்வா கொடுத்து மீனாவை சமாளித்து விடுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ், என்னிடம் பொய் சொல்லி எங்கே போனாய்? என்று கேட்க, உனக்கு கருங்காலி மாலை வாங்க போனேன் என்று ரோகினி சமாளிக்கிறார். இருந்தும் மனோஜ் நம்பவில்லை. வழக்கம்போல் ரோகினி ஏதேதோ ட்ராமா செய்து மனோஜை நம்ப வைக்கிறார். நேற்று எபிசோடில், ரவி கடலையை வைத்து ஒரு டிஷ் செய்தார். அதை சாப்பிட்டு பார்த்தும் மீனா- சுருதி இருவருமே பாராட்டி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

அப்போது விஜயா வந்தவுடன் ஸ்ருதி- மீனா சண்டை போடுவது போல் நடிக்க, விஜயா சந்தோசப்பட்டு இருந்தார். இன்னொரு பக்கம் முத்து, மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போனார்கள். ஆனால், அங்கு கிரிஷ் இல்லை. பின்பு கிரிஷை தத்தெடுப்பது பற்றி பேச, ரோகினி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கடைசியில் முத்து, யோசித்து முடிவெடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்ப, இதை ரோகினி இடம் அவருடைய அம்மா சொன்னவுடன் ரோகினி ஆவேசப்பட்டு கத்துகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் முத்து- மீனா இருவருமே கிரிஷ்யை தத்தெடுப்பது பற்றி அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அண்ணாமலை, வீட்டில் எல்லோரிடமும் பேசி முடிவெடுக்கலாம் என்று சொல்லி ஆறுதல் சொல்கிறார்.

இன்றைய எபிசோட்:

இதை ஒளிந்து நின்று கேட்ட ரோகினி, விஜயாவிடம் சொல்கிறார். உடனே விஜயா, கிரிஷ்யை அழைத்து வந்தால் அவர்கள் வீட்டை விட்டு துரத்தி விடுவேன். இதுதான் சந்தர்ப்பம் என்று சொல்கிறார். அடுத்த நாள் ரோகினி, கிரிஷுக்கு பள்ளியில் அட்மிஷன் போடுகிறார். பின் தன்னுடைய அம்மா, மகனை சென்னைக்கு அழைத்து வர திட்டம் போடுகிறார். பின் வீட்டில் மீனா பூ கட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா, சமைத்து பார்வதி வீட்டிற்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வா என்று சொன்னவுடன் முத்து கோபம் வந்து எவ்வளவு சம்பளம் தருவீர்கள் என்று கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full