கிரிஷை தத்தெடுக்க போகும் முத்து, ரோகினி அம்மா எடுக்கும் முடிவு? கோபத்தில் ரோகினி- சிறகடிக்க ஆசை

By subhashini · 6/9/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினியை பற்றி மீனா வீட்டில் சொன்னவுடன் விஜயா கோபத்தில் சண்டை போட்டார். பின் ரோகினி சொன்ன கதையை எல்லோருமே நம்பி விடுகிறார்கள். இதை எல்லாம் மீனா தான் சொன்னார் என்றவுடன் விஜயா பயங்கரமாக திட்டி பேசி இருந்தார். கடந்த வாரம் மீனா-சுருதி இருவருமே உட்கார்ந்து பேய் படம் பார்க்க, விஜயா கிண்டலாக பேச, உடனே சுருதி, விஜயாவிற்கு பயத்தை காண்பிக்க, பேய் போல் பயங்கரமாக சவுண்ட் எபெக்ட் எல்லாம் வைத்து பயமுறுத்தி இருந்தார். பின் சுருதி செய்த வேலை என்று தெரிந்தவுடன் விஜயா, மீனாவை தான் திட்டி இருந்தார்.

மறுநாள் ஸ்ருதி, மீனாவை இடித்ததால் கையில் இருந்த எண்ணெய் கீழே விழுந்தது. அந்த சமயம் வந்த விஜயா வழுக்கி விழுந்தார். ஆனால், அதற்கு காரணம் மீனா என்று திட்டி இருந்தார். இதை எல்லாம் பார்த்த சுருதி, விஜயாவை திட்டி விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி -மனோஜ் இருவருமே விஜயாவை ஏற்றி விட்டார்கள். விஜயாவிற்கு கோபம் வந்து அவருடைய அம்மாடம் நடந்ததை சொன்னார். உடனே ஆத்திரத்தில் அவர் மீனாவை பார்த்து ரொம்ப கேவலமாக பேசி இருந்தார். அதன்பின் முத்துவிடம் நடந்ததை மீனா சொல்ல, அவர் கோபமாக வீட்டிற்கு வந்தார்.

சிறகடிக்க ஆசை:

பின் ஸ்ருதி-ரவி, முத்து -மீனா ஆகிய நான்கு பேருக்கும் இடையே சண்டை பயங்கரமாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து விஜயா சந்தோசப்பட்டார்.மேலும், அண்ணாமலையிடம் முத்து நடந்ததை பற்றியும், தன் அம்மா போட்ட திட்டத்தையும் சொன்னார். அதற்கு அண்ணாமலை ஒத்து கொண்டார். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய அம்மாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போயிருந்தார். இந்த வாரம் முத்து சவாரியில் ஒரு நபரை அழைத்துக் கொண்டு வந்தார். அந்த சமயம் பார்த்து மீனாவின் ஸ்கூட்டி, முத்து கார் மீது மோத, ஏதோ தெரியாத நபர்கள் போல இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள் .

சீரியல் கதை:

அப்போது போலீஸ் வந்து விசாரிக்க, உடனே முத்து, இவர் என் மனைவி என்று சொல்ல, சவாரி வந்த நபர், நீங்கள் சொன்ன பேயாட்டம் பொண்ணு இவர் தானா? என்று கேட்டவுடன் மீனாவிற்கு பயங்கர கோபம் வந்து விடுகிறது. இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் ரோகினிக்கு மனோஜ்க்கு போன் செய்து பேச, வித்யா உடன் இருக்கிறேன் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து ஷோரூமுக்கு வித்யா போனார். உடனே மனோஜ்க்கு சந்தேகம் வருகிறது. நேற்று, மீனாவை சமாதானம் செய்ய முத்து பல ராஜதந்திர வேலைகலை செய்தார். இருந்தும் மீனா மனம் மாறவில்லை.

நேற்று எபிசோட்:

முத்து வெள்ளைக்கொடி காட்டி அல்வா கொடுத்து மீனாவை சமாளித்து விடுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ், என்னிடம் பொய் சொல்லி எங்கே போனாய்? என்று கேட்க, உனக்கு கருங்காலி மாலை வாங்க போனேன் என்று ரோகினி சமாளிக்கிறார். இருந்தும் மனோஜ் நம்பவில்லை. வழக்கம்போல் ரோகினி ஏதேதோ ட்ராமா செய்து மனோஜை நம்ப வைக்கிறார். அடுத்த நாள் காலையில் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, அப்போது பாட்டி, கடலை மூட்டை அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், ரவி கடலையை வைத்து ஒரு டிஷ் செய்கிறார்.

இன்றைய எபிசோட்:

அதை சாப்பிட்டு பார்த்தும் மீனா- சுருதி இருவருமே பாராட்டுகிறார்கள். அப்போது விஜயா வந்தவுடன் ஸ்ருதி- மீனா சண்டை போடுவது போல் நடிக்கிறார்கள். அதை பார்த்து விஜயா சந்தோசப்பட்டு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து, மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போகிறார்கள். ஆனால், அங்கு கிரிஷ் இல்லை. பின்பு கிரிஷை தத்தெடுப்பது பற்றி பேச, ரோகினி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். கடைசியில் முத்து, யோசித்து முடிவெடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். இதை ரோகினி இடம் அவருடைய அம்மா கூற, ரோகினி ஆவேசப்பட்டு கத்துகிறார். பின் ரோகினி விஜயாவிடம் முத்து தத்தெடுப்பது பற்றி பேசிய விஷயத்தை சொல்லி பிரச்சனையை செய்ய பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full