சீதாவின் காதலுக்கு முத்து எடுத்த அதிரடி முடிவு, மீனா சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சுருதி, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரவி வேலைக்கு கிளம்பினார். ஆனால், விடாமல் சுருதி வாக்குவாதம் செய்தார். அப்போது வீட்டிற்கு வந்த ரோகினி, சிட்டியிடம் வாங்கிய நகையை விஜயாவிடம் கொடுத்தார். ஆனால், விஜயா நகையை வாங்கவே இல்லை. ரோகினியை திட்டி கொண்டு தான் இருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த முத்து, நகை யாருக்கும் வேண்டாம் என்றால் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னவுடன் விஜயா, அது எனக்கு வாங்கிய நகை என்று பிடுங்கி எடுத்துக் கொண்டு உள்ளே போனார்.
அதை பார்த்து ரோகினி சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் சீதா, அருண் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அருண், சஸ்பெண்ட் ஆன விஷயத்தை சொன்னவுடன், சீதா ஆறுதல் சொன்னார். அது மட்டும் இல்லாமல் எங்கள் வீட்டில் நம் காதலை சொல்லிவிடலாம் என்று சீதா சொல்வதால் அருண் சந்தோசப்பட்டார். பின் சீதா இதைப்பற்றி மீனாவிடம் சொன்னார். மீனாவும் அருணை சந்திக்க ஒத்து கொண்டார். பின் வீட்டிற்கு வந்த மீனா, முத்துவிடம் சீதா காதலிக்கும் விஷயத்தை சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் சீதா, காதலிக்கும் விஷயத்தை தெரிந்தவுடன் முத்து கோபப்பட்டார். உடனே மீனா, சீதாவிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நாம் இருவரும் சந்திப்போம். அதற்குப் பிறகு முடிவெடுக்கலாம் என்று சொன்னார். அதனால் முத்துவும் அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் மனோஜ், தன்னுடைய அம்மாவிற்கு செயின் வாங்கித் தந்த விஷயம் பற்றி ரோகினி இடம் பேசி இருந்தார். ரோகினி, எனக்காக வீட்டில் பேசவே மாட்டாயா? எதற்காக இப்படி இருக்கிறாய்? என்றெல்லாம் கேட்டார். அதற்கு மனோஜ், என் அம்மா எனக்காக எவ்வளவோ செய்திருந்தார். நான் அம்மா பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டேன். நான் சின்ன வயதில் இருந்தே அப்படித்தான் வளர்ந்தேன் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
ரோகிணி எவ்வளவு சொல்லியுமே மனோஜ் கேட்கவில்லை. இன்னொரு பக்கம் சுருதி சொந்தமாக restaurant திறப்பதை பற்றி ரவியிடம் பேசினார். ஆனால், அவர் கேட்கவே இல்லை. அதற்கு ரவி, என் சுயமரியாதையை விட்டு செய்ய முடியாது என்று சொன்னார். சுருதி எவ்வளவு எடுத்து சொல்லியுமே ரவி ஏற்றுக்கொள்ளவே இல்லை. மறுநாள் முத்து-மீனா இருவருமே சீதா காதலிக்கும் நபரை சந்திக்க போனார்கள். கோவிலில் சீதா, அருண் இருவருமே முத்து-மீனா வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோவிலில் முதலில் முத்து-அருண் இருவருமே யார் என்று தெரியாமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இதனால் கோபப்பட்டு இருவருமே முறைத்துக்கொண்டார்கள். பின் முத்து- மீனா இருவரும் சீதாவை பார்க்கிறார்கள். அப்போது சீதா, அருணை அறிமுகம் செய்கிறார். அருணை பார்த்தவுடன் மீனா-முத்து இருவருமே ஷாக் ஆகிறார்கள். அப்போது முத்துவிற்கு பயங்கர கோபம் வந்து மீனாவிடம் இந்த கல்யாணம் நடக்காது என்று அங்கிருந்து சொல்லிவிட்டு சென்று விடுகிறார். அருண், நான் இந்த வேலை சஸ்பெண்ட் ஆனதற்கு காரணம் உன் மாமா தான் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் மீனாவின் அம்மாவை பார்க்க சென்ற முத்து, சீதா ஒருவரை காதலிக்கிறார். அவன் நல்லவனே கிடையாது. அவனால் சீதாவை நன்றாக பார்த்துக்கொள்ள மாட்டான். நான் நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்கிறார். மீனாவின் அம்மாவால் எதுவுமே பேச முடியவில்லை, அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு மீனா, சீதா வருகிறார்கள். அப்போது சீதா காதலிக்கும் விஷயம் தெரிந்ததால் மீனாவின் அம்மா கோபப்பட்டு அவரை அடிக்கிறார். மீனா, நான் அவரிடம் எடுத்து சொல்லி புரிய வைக்கிறேன். தயவுசெய்து அமைதியாக இருங்கள் என்று தன் அம்மாவை சமாதானம் செய்கிறார். சீதாவிற்கு சப்போர்ட்டாக மீனா இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.