சீதாவின் காதலுக்கு முத்து எடுத்த முடிவு, நீத்து சொன்ன வார்த்தையால் கொந்தளித்த விஜயா - சிறகடிக்க ஆசை

By subhashini · 9/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் டாக்டர் சொன்னதை கேட்டு மீனாவும் அவருடைய அம்மாவும் ரொம்பவே பயந்தார்கள். அதற்கு மீனா, நீங்கள் எப்படியாவது என் கணவரிடம் பேசுங்கள். சீதா விருப்பப்படியே திருமணம் செய்து வைக்கலாம் என்று தன்னுடைய அம்மாவிற்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், சீதாவின் கல்யாணத்தால் மீனாவின் வாழ்க்கையில் பிரச்சனை வருமா? என்று தான் மீனா அம்மா பயந்தார். இன்னொரு பக்கம் மனோஜ் பேசுவது விஜயாவிற்கு புரியவில்லை. உடனே ரோகினி, ஷோரூம்க்கு என்னையும் அழைத்துச் செல்வதாக சொல்கிறார் என்றவுடன் விஜயாவால் நம்ப முடியவில்லை. பின் கோபத்தில் விஜயா, மனோஜை திட்டி விட்டு ரோகினி மட்டும் கடைக்கு போக சொன்னார்.

அதற்குப்பின் மீனா, சீதா ஹாஸ்பிடல் இருக்கும் விஷயத்தை அண்ணாமலை இடம் சொன்னார். அவருமே அதிர்ச்சியாகி சீதாவிற்கு பிடித்த மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்கலாம் என்று சொன்னார். அதற்குப்பின் முத்து வெளியிலேயே சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட்டார். இதனால் முத்து-மீனா இடையே வாக்குவாதம் அதிகமானது. இதை பார்த்து அண்ணாமலை, சீதாவின் திருமணத்தை பற்றி முத்துவிடம் பேசினார். உடனே முத்து, நான் அங்கிருந்த போலீஸிடம் விசாரித்தேன். அருண் சரி இல்லை. பழிவாங்கும் எண்ணம் நிறைய வைத்திருக்கிறான் என்றெல்லாம் சொன்னார். மீனா, அருணுக்கு தான் சப்போர்ட் செய்து பேசி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

அண்ணாமலை எவ்வளவு எடுத்து சொல்லியுமே முத்து கேட்கவில்லை. அவருடைய முடிவில் பிடிவாதமாக இருந்தார். இதனால் மீனா விடம் அண்ணாமலை, நான் முத்துவிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறேன். நீ கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த ரோகினி, இன்று கடையில் நல்ல பிராஃபிட் கிடைத்தது. பழைய பொருட்களுக்கு புதிய பொருட்கள் என்று சொல்லிருந்தேன். நிறைய லாபம் கிடைத்தது என்று சொன்னார். இதைக் கேட்டு விஜயா, மனோஜ் ஷாக் ஆனார்கள். உடனே அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் நியாயமாக செய்யணும். ஏமாற்றி எதுவும் பண்ணக்கூடாது என்று அறிவுரை சொன்னார்.

கடந்த வாரம் எபிசோட்:

அதற்கு பின் ரோகினி, நாங்கள் இருவரும் சேர்ந்து கடைக்கு போகிறோம் என்றவுடன் விஜயா ஒற்றுக்கொண்டார். அடுத்த நாள் மீனா, சீதா வேலை செய்யும் இடத்திற்கு சென்று ஆறுதல் சொல்லிக் கொண்டிரு ந்தார். பின் முத்து காரில் வந்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அம்மா அழுது கொண்டிருந்தார். உடனே அவரை, சீதா வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு முத்து அழைத்து வந்தார். அப்போது அந்த அம்மா, அவளுடைய காதலுக்கு சம்மதம் சொல்லி இருந்தால் இந்த நிலைமை என் மகளுக்கு வந்திருக்குமா? என்று அழுது கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து முத்து மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் ஹாஸ்பிடலில் விஷம் குடித்த பெண்ணினுடைய அம்மா ரொம்பவே கதறி அழுது கொண்டிருக்கிறார். அப்போது அவர், என் மகளுக்கு பிடித்த பையனை திருமணம் செய்து வைக்க என் மகனிடம் அறிவுரை சொல்லுங்கள் என்கிறார். அதற்கு மின்ன, அவளுக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ளட்டும் என உங்கள் வாயால் சொல்லுங்கள் என்கிறார். கோபத்தில் முத்து, மீனாவை முறைக்கிறார். பின் முத்து, அவர்கள் குடும்ப விஷயத்தில் நான் எதுவும் சொல்ல முடியாது என்று சொல்கிறார். பின் சீதா, நான் எந்த தவறான முடிவும் எடுக்க மாட்டேன். தைரியமாக இருங்கள் மாமா என்று அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதி இருவரும் நீத்துவை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது விஜயா, உனக்கு நான் ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து இருக்கிறேன்.

சீரியல் ட்ராக்:

ரொம்ப அழகானவன் என்றெல்லாம் சொல்கிறார். உடனே நீத்து, எனக்கு ரவி மாதிரி பையன் இருந்தால் போதும் என்று ரொம்ப புகழ்ந்து பேசுகிறார். இது எல்லாம் கேட்டு விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. பின் வீட்டிற்கு வந்த விஜயா, நீத்து சொன்ன விஷயத்தை எல்லாம் சுருதியிடம் சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட சுருதிக்கு கோபம் அதிகமாகிறது. இன்னொரு பக்கம் மீனாவின் அம்மா, சத்யா இருவரும் முத்துவை சந்தித்து சீதாவின் கல்யாணம் விஷயமாக பேசுகிறார்கள். அப்போது முத்து, அவன் குணம் சரியில்லை. நான் நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன் தயவுசெய்து இதைப் பற்றி பேசாதீர்கள் என்று தன்னுடைய மாமியாருக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கிறார். பின் இதைப்பற்றி முத்து, மீனாவிடம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full