புது பிரச்சனையில் சிக்கி கொள்ளும் மனோஜ், மீனா சொன்ன வார்த்தையால் கலங்கும் முத்து - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் அதன்பின் பீச் ஹவுஸ் வாங்குவதை பற்றி வீட்டில் சொல்ல, விஜயா தலைக்கால் புரியாமல் தாண்டவம் ஆடி இருந்தார். பின் ரோகினி, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று பொருள்களை எல்லாம் கொடுத்துவிட்டு, பீச் ஹவுஸ் வாங்குவதை பற்றி சொல்ல, அவரும் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் வேலைக்கு அண்ணாமலை கிளம்பி இருந்தார். அப்போது முத்து, வேண்டாம் என்று தடுத்துமே அண்ணாமலை கேட்கவில்லை. இதனால் வீட்டில் பெரிய பஞ்சாயத்து நடந்தது. ஒரு வழியாக அண்ணாமலை வேலைக்கு போனார். ஆனால், முத்துவிற்கு மனசே இல்லை.
நேற்று எபிசோட்டில் விஜயா, தன்னுடைய கணவர் வேலைக்கு செல்வதற்காக வழி அனுப்பி வைத்தார்.
இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய மகனை அழைத்து கொண்டு பள்ளிக்கு போனார். க்ரிஷ் பள்ளியில் தான் அண்ணாமலை வேலைக்கு சேர்ந்திருந்தார். அண்ணாமலையை பார்த்தவுடன் ரோகினி ஷாக்காகி ஒளிந்து கொண்டார். அப்போது பள்ளியில் அண்ணாமலை- முத்து இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள் . அவர்கள் சென்ற பிறகு ரோகினி, செக்யூரிட்டி இடம் விசாரித்தார். அதற்கு அவர், புதன்கிழமை மட்டும் வேலைக்கு வருவார் என்றார்.
சிறகடிக்க ஆசை:
பின் என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்து கிரிஷ் உடன் வீட்டுக்கு வந்து விட்டார் ரோகினி. தன் அம்மாவிடம் நடந்ததை ரோகினி சொல்ல, அவர் உண்மையை சொல்லிவிடு என்றார். உடனே கோபத்தில் ரோகினி, அவர் அம்மாவை திட்டிவிட்டு, இதற்கு ஒரு வழி செய்கிறேன். நீங்கள் அவனை பள்ளிக்கூடத்திற்கு புதன்கிழமை மட்டும் அனுப்பாதீர்கள் என்றார். அதற்கு பின் தாங்கள் வாங்க இருக்கும் பங்களாவை பார்க்க ரோகினி- மனோஜ் இருவருமே போய் இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அதை பார்த்தவுடன் எப்படியாவது அந்த பங்களாவை வாங்க வேண்டும் என்று ரோகினி சொன்னார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், புது பங்களாவை சுத்தி பார்த்து மனோஜ்- ரோகினி இருவருமே பங்களா ஓனரிடம் அமௌன்ட் பத்தி பேசுகிறார்கள். அவர், ஐந்து கோடி மதிப்பு. ஆனால், உங்களுக்கு மூன்று கோடிக்கு தருகிறோம். அட்வான்ஸ் தொகையாக 50 லட்சம் கொடுங்கள் என்று கேட்கிறார். ஆனால், மனோஜ் 30 லட்சம் தருகிறேன் என்றவுடன் அவரும் ஒத்துக் கொள்கிறார். பின் ஆறு மாதத்திற்குள் மொத்த பணத்தையும் செலுத்த வேண்டும் என்று சொல்ல, மனோஜ் ஒத்து கொள்கிறார்.
இன்றைய எபிசோட்:
அதன் பின் தான் அவர்கள் ஓனரே இல்லை என்று தெரிகிறது. அவர்கள் அந்த பங்களாவில் வாடகை இருப்பவர்கள். மனோஜை ஏமாற்றி பணத்தை வாங்க பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆர்டரின் மூலம் தனக்கு கிடைத்த லாபத்தை நினைத்து மீனா சந்தோஷப்படுகிறார். அப்போது அந்த மண்டபத்தின் மேனேஜர், இங்கு சிந்தாமணி என்பவருக்கு தான் எப்போதுமே ஆர்டர் கிடைக்கும். ஆனால், இந்த முறை உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி மண்டபத்திற்கு வந்து ஆர்டர் கொடுக்காததால் மேனேஜரிடம் சண்டை வாங்குகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் அவர், மீனா தான் இந்த ஆர்டர் எடுத்தார் என்று தெரிந்தவுடன் இன்னும் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் மீனா, தனக்கு கிடைத்த லாபத்திற்கு எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து சந்தோஷப்படுகிறார். ஆனால், வழக்கம் போல் விஜயா, மீனாவின் வேலையை கிண்டல் கேலி செய்கிறார். அதற்கு பின் மீனா, முத்துவிடம் உங்களை விட நான் தான் அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று சொன்னவுடன் முத்துவின் முகமே மாறுகிறது. அது மட்டுமில்லாமல் மீனா, சில வீட்டு வேலைகளையும் முத்துவுக்கு வைக்கிறார். என்ன சொல்வது என்று தெரியாமல் முத்து அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது .