கிரிஷை பற்றி மறைந்து இருக்கும் ரகசியத்தை அறிவாரா முத்து? பயத்தில் ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 15/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, கிரிஷ் பயோடேட்டாவை கேட்டு வாங்கினார். ஆனால், அதில் கிரிஷ் பாட்டியின் போட்டோ தான் இருக்கிறது. கிரிஷ் அம்மா பற்றிய விவரம் எதுவுமே இல்லை. அதற்குப்பின் க்ரிஷ் பாட்டியின் போட்டோவை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி விட்டு முத்து,மீனா, அண்ணாமலை எல்லோருமே விசாரித்தார்கள். இதையெல்லாம் பார்த்து கடுப்பான விஜயா, எதற்கு இந்த தேவையில்லாத வேலை. அவனை கொண்டு போய் எங்கேயாவது விட்டு விடுங்கள் என்று சொன்னார்.

அதற்குப்பின் மனோஜ், கிரிஷ் இந்த வீட்டில் இருக்கணுமா? இல்லையா? என்பதை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கலாம். யாரெல்லாம் இந்த வீட்டில் கிரிஷ் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார். முத்து, மீனா, அண்ணாமலை மூவருமே கை தூக்கினார்கள். ஆனால், சுருதி- ரவி கையை தூக்கவில்லை. அதற்கு பின் கிரிஷ் இங்கு இருக்க கூடாது என்று சொல்லுங்கள் என்றார். அதற்கு விஜயா, மனோஜ் இருவரும் ஓட்டு போட்டார்கள். அவர்களுக்குமே ஸ்ருதி, ரவி கையை தூக்கவில்லை. ரோகினி தூக்கலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து கிரிஷ்க்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் அண்ணாமலை, கிரிஷ் இந்த வீட்டில் தான் இருப்பான். அவன் பாட்டி வரும்வரை எங்கேயும் அனுப்ப முடியாது என்று சொன்னார். இதனால் மனோஜ் பிரச்சனை செய்கிறார். உடனே சுருதி-ரவி இருவருமே கிரிஷுக்கு சப்போர்ட் செய்து பேசுவதால் மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் முத்து-மீனா இருவருமே தங்களுக்கு தெரிந்த இடங்களுக்கு சென்று கிரிஷ் பாட்டியை பற்றி விசாரித்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ஸ்கூல் வந்த ரோகினி, தலைமை ஆசிரியரிடம் கிரிஷை தன்னுடன் அழைத்துச் செல்வதால் டிசி கொடுக்க சொல்லி கேட்டார். அவர்களும் ஒத்து கொண்டு கிரிஷுக்கு டிசி கொடுத்து விட்டார்கள்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் மீனா, கிரிஷ் பாட்டி கோயிலில் வேலை செய்து கொண்டு அன்னதானம் சாப்பிடும் விஷயத்தை தெரிந்து கொண்டார். பின் ரோகினி, கிரிஷை அழைத்துக் கொண்டு வித்யா வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது ரோகினி, கொஞ்ச நாட்களுக்கு கிரிஷ் இங்கேயே இருக்கட்டும். நான் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார். ஆரம்பத்தில் வித்யா முடியாது என்று வருகிறார் பின் வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டார். அதோடு வித்யா, ஒரு வாரம் மட்டும் தான் கிரிஷ் இங்க இருக்க நான் ஒத்துக் கொள்வேன். அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டு சென்று விடணும் என்று சொல்வதால் ரோகிணியும் சம்மதிக்கிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் க்ரிஷ், வித்யாவுடன் இருக்க மாட்டேன் என்று அழுது கதறுகிறார். ஆனால், ரோகினி கேட்கவில்லை. கிரிஷை வித்யா வீட்டிலேயே விட்டு வந்து விடுகிறார். இன்னொரு பக்கம் சோகமாக முத்து வீட்டிற்கு வருகிறார். அண்ணாமலை, கிரிஷ் எங்கே? என்று கேட்கிறார். அதற்கு முத்து, கிரிஷ் அம்மா டிசி வாங்கிக்கொண்டு சென்று விட்டதாக சொல்கிறார். இதைக் கேட்டு மீனா ஷாக் ஆகிறார். மனோஜ் -விஜயா இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். மீனா, எதுவுமே சொல்லாமல் துபாயில் இருந்து வந்து கிரிஷை அவர் அம்மா அழைத்து சென்றது சந்தேகமாக இருக்கிறது. கிரிஷுக்கு பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

அதை தான் கண்டுபிடிக்கணும் என்று சொல்கிறார். முத்து, முதலில் கிரிஷ் அம்மாவை கண்டுபிடிக்கணும். அதற்கு பிறகு எல்லா உண்மையும் வெளிவந்துவிடும் என்கிறார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நிற்கிறார். இன்னொரு பக்கம் கோவிலில் கிரிஷ் பாட்டி யாருக்கும் தெரியாமல் அன்னதானம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதே கோயிலுக்கு சென்ற மீனா, தன் அம்மாவை பார்த்து கிரிஷ் பற்றி எல்லா விவரத்தையும் சொல்லி வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதியை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது யோகா வகுப்பு தொடங்க இருப்பதாக விஜயா சொல்கிறார். அந்த சமயம் வந்த சிந்தாமணி, விஜயாவின் ஐடியாவை பாராட்டுகிறார். பின் மூவருமே யோகா கிளாஸ் தொடங்குவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full