சத்யாவால் கைது செய்யப்பட்ட மீனா அம்மா, முத்து என்ன செய்யப் போகிறார்? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா வீடியோவை சிட்டி இன்டர்நெட்டில் வெளியிட்டார். இதை பார்த்த ரோகினி ரொம்ப சந்தோஷப்பட்டு விஜயாவிடம் காண்பித்தார். தன்னிடம் பணத்தை திருடியது சத்யா தான் என்று தெரிந்தவுடன் விஜயா கொந்தளித்து சத்யாவை சரமாரியாக அடித்து வெளுத்து வாங்கி இருந்தார். பின் சத்யா வீடியோவை காண்பித்தவுடன் மீனா குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது. உடனே விஜயா, ரொம்ப கேவலமாக மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் பேசி, இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றார்.
சத்யா செய்த வேலையால் மீனாவின் குடும்பத்தினர் நிலைகுலைந்து அழுது கொண்டிருந்தார்கள். மேலும், முத்துவுக்கு உண்மை அறிந்து மீனா வீட்டிற்கு வந்து எல்லோரையும் சமாதானம் செய்தார். அப்போது வந்த போலீஸ், சத்யாவை கைது செய்ய பார்த்தது. ஆனால், சத்யா அங்கு இல்லை. பின் எல்லோருமே சத்யாவை தேட, அவர் மாடியில் தற்கொலை செய்ய நின்று இருந்தார். கடைசியில் முத்து அவரை எப்படியோ காப்பாற்றி விட்டார். சத்யா இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என்று தன்னுடைய நண்பர் செல்வம் வீட்டில் தங்க வைத்தார் முத்து. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மீனாவை உள்ளே விடாமல் பயங்கர கலவரமே செய்தார் விஜயா.
சிறகடிக்க ஆசை:
முத்து எவ்வளவு சொல்லியும் விஜயா கேட்கவே இல்லை. நேற்று எபிசோடில் முத்து, தன்னுடைய அப்பாவிடம் சத்யா பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லியும், அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. பின் மீனா எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க, விஜயா இன்னும் அதிகமாக தான் மீனாவை திட்டி இடுந்தார். அந்த சமயம் வந்த போலீஸ், விஜயாவிடம் கம்பளைண்ட் கேட்டது. விஜயாவுமே சத்யா மீது ஒண்ணுக்கு ரெண்டாக ஏற்றிவிட்டு புகார் கொடுத்தார். முத்து-மீனா இருவருமே கெஞ்சியும் யாரும் கேட்கவில்லை.
நேற்று எபிசோட்:
கடைசியில் மீனா வீட்டை விட்டு வெளியே போகணும் என்று விஜயா சொன்னதற்கு அண்ணாமலை முடியாது என்றார். உடனே கோபத்தில் விஜயா வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். பின் பார்வதியிடம் நடந்ததை விஜயா சொல்ல, அவர் மீனாவிற்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார். உடனே விஜயா இன்னும் கோபப்படுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் பார்வதி எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே விஜயா ஏற்றுக்கொள்ளவில்லை. மீனா வீட்டை விட்டு போனால் தான் போவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய மாமியார் வீட்டை விட்டு போனதை நினைத்து வருத்தப்பட்டு முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா, நாம் இந்த வீட்டை விட்டு வெளியே போகலாம். அத்தை பாவம் என்று சொல்ல, முத்துவும் நம் மீது எந்த தவறும் இல்லை. என் அப்பா இங்கிருக்கும் வரை நான் இங்கே தான் இருப்பேன். வெளியில் போகமாட்டேன் என்று சொல்லி மீனாவை சமாதானம் செய்கிறார். மறுநாள் ஸ்ருதியின் அம்மா, சத்யா வீடியோவை பற்றி பேச, ரோகினி ஒன்னுக்கு ரெண்டாக ஏற்றி விடுகிறார்.
இது எல்லாம் பார்த்த அண்ணாமலை எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தார்.
சீரியல் ட்ராக்:
மீனா வேதனையில் உள்ளுக்குள்ளே அழுது கொண்டிருந்தார். அப்போது முத்து, ஸ்ருதியின் அம்மாவிற்கு பதிலடி கொடுத்திருந்தார். பின் ஸ்ருதி-ரவி இருவருமே, எங்கள் வீட்டு விசயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அப்போது மீனாவின் அம்மாவை போலீஸ் கைது செய்து விட்டதாக போன் வருகிறது. மீனா-முத்து பதறி அடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்கள். அங்கு சத்யா வந்தால் தான் அவருடைய அம்மாவை விடுவேன் என்று போலீஸ் சொல்வதால், என்ன செய்வது என்று புரியாமல் மீனா,சீதா அழுது புலம்புகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.