குடிபோதையில் மீனாவை அடித்த முத்து, கோபத்தில் சத்யா செய்தது- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிருஷ்ணர் வேடம் போட்டு கிரிஷை வீட்டிற்கு முத்து-மீனா அழைத்து வந்தார்கள். இதை பார்த்து எல்லோருமே சந்தோஷப்பட, விஜயா மட்டும் கோபப்பட்டார். பின் மீனா, கிருஷ்ணர் பாட்டை பாட, கிர்ஷை முத்து கொஞ்சி இருந்தார். இதையெல்லாம் பார்த்து ரோகினி அம்மா, நீங்கள் எதற்கு என் பேரனுக்கு தேவையில்லாமல் நம்பிக்கை கொடுக்கிறீர்கள். இன்னொரு முறை தத்தெடுப்பதை பற்றி பேசாதீர்கள். எங்கள் வீட்டிற்கும் வராதீர்கள் என்று கோபமாக பேசி கிளப்பி விட்டார். இதனால் முத்து-மீனா ரொம்ப வருத்தப்பட்டார்கள்.
முத்து-மீனாவை திட்டியதை நினைத்து ரோகினி அம்மா ரொம்ப வருத்தப்பட்டு அழுதார். அவரை ரோகினியின் தோழி சமாதானம் செய்தும் புலம்பி அழுது கொண்டே இருந்தார். அந்த சமயம் பார்த்து வந்த ரோகினி, நீ பேசுனது சரி என்று அவரை பாராட்ட, கோபப்பட்டு அவர் அம்மா, ஏன் இந்த பாவத்தை செய்ய வைத்தாய்? அவர்கள் நல்லவர்கள் என்று சொன்னார். வழக்கம்போல ரோகினி, அவர் அம்மாவை திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே நடந்ததை நினைத்து வருத்தப்பட, இதை பார்த்து விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
மறுநாள் மீனாவின் மனதை மாற்ற முத்து அவருடைய அம்மா வீட்டிற்கு அழைத்து போனார். அங்கு கல்லூரியில் தேர்வு எழுத முடியாததால் சத்யா வீட்டுக்கு வந்திருந்தார். இதை அறிந்த முத்து, நான் எப்படியாவது எழுத வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார். நேற்று எபிசோட்டில் தன்னுடைய தம்பியை நினைத்து வருத்தப்பட்டு மீனா கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அப்போது சுருதிக்கு வந்த கொரியரை விஜயா பிரித்து பார்த்தார். அந்த சமயம் வந்த ஸ்ருதி, என்னுடைய பார்சலை எதற்கு பிரித்து பார்த்தீர்கள்? என்று கோபப்பட்டு தன் மாமியார் என்று கூட பார்க்காமல் திட்டி விட்டார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் முத்து-மீனா இருவருமே சத்யாவிற்காக கல்லூரிக்கு சென்றார்கள். அங்கு பிரின்ஸ்பலை பார்க்க முடியாது என்று சொன்னவுடன் அங்கிருக்கும் ஒருவரிடம் எப்படி பார்ப்பது எல்லாம் விசாரித்தார்கள். ஆனால், அவரைப் பார்க்க முடியாது, அவர் யாரிடமும் பேச மாட்டார் கிளம்புங்கள் என்று சொல்ல, விடாமல் முத்து அந்த நபரிடம் பிரின்ஸ்பல் பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் கேட்டார். பின் தன் மச்சானுக்காக ஒரு புது ஐடியா போட்டார். இன்னொரு பக்கம் கடையில், லாட்ரியில் 25 கோடி பணம் விழுந்து இருக்கு என்று ஒருவர் வந்தார். அவரை பார்த்து மனோஜ் ஷாக் ஆகி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், கடைக்கு வந்த நபர் மனோஜை வெறுப்பேற்றியதால் கோபப்பட்டு அவர் அடிக்க செல்கிறார். அந்த நபர் மனோஜுக்கு சாபம் விட்டு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து, எப்படியாவது சத்யாவை கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்காக நான் ஒரு திட்டம் வைத்து இருக்கிறேன். நான் குடித்து உன்னை அடிப்பது போல் நடிக்கிறேன். சத்யாவை கல்லூரியில் ஏற்றுக்கொள்வார்கள் என சொல்ல மீனாவும் ஒத்துக் கொள்கிறார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் கல்லூரி முதல்வர் முன்பு முத்து குடிப்பது போல நடிக்கிறார். அந்த சமயம் வந்த சத்யா, நிஜமாகவே தன் அக்காவை மாமா அடிக்கிறார் என்று தடுக்க பார்க்கிறார். உடனே அந்த கல்லூரி முதல்வர், குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியவில்லை. நீ கல்லூரியில் சேர்ந்து கொள் என்று சொல்ல மீனா-சத்யா சந்தோசப்படுகிறார்கள். ஆனால், முத்து மீது போலீசில் புகார் கொடுத்து விடுவதால் அவரை போலீஸ் கைது செய்து விடுகிறது. பின் நடந்த உண்மையை மீனா போலீசிடம் சொல்கிறார். ஆனால், அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முத்துவை வெளியே எடுக்க மீனா போராடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.