திருமணத்திற்கு சீதா போட்ட கண்டிஷன், விஜயாவை ஏமாற்றும் ரோகினி- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ஒரு வழியாக ரவி சுருதிக்கு டைமன் மோதிரம் கொடுத்து சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால், கோபப்பட்டு விஜயா திட்ட, ஸ்ருதி- விஜயா இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.
அதன் பின் ரோகினி, முத்துவின் மொபைலை எடுக்க அவர் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து இருந்தார். இது தெரியாமல் முத்து-மீனா இருவருமே குடித்து விட்டார்கள். முத்து- மீனா இருவருமே நன்றாக அசந்து தூங்கி விட்டார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று மொபைலை எடுக்க ரோகிணி போக, அந்த சமயம் பார்த்து விஜயா வந்ததால் ஏதோ காரணம் சொல்லி ரோகினி சமாளித்தார்.
அதற்குப்பின் மொபைலை எடுக்க ரோகினி வெளியே வந்தார். அப்போது மனோஜ் வந்ததால் மீண்டும் அவரால் போனை எடுக்க முடியவில்லை. இன்னொரு பக்கம் மனோஜ் கடையில், அவர் வைத்த பீம்பாய் அடியாட்கள் கூட்டிட்டு வந்து பணத்தைக் கேட்டு மிரட்டி இருந்தார். மனோஜ் பணம் கொடுக்காததால் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் அந்த ஆட்கள் எடுத்துக் கொண்டு சென்றார்கள். அதற்குப்பின் கோவிலில் சீதாவை பார்த்து மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்க, மீனாவின் அம்மா ஒத்து கொள்கிறார். இதை மீனாவிடம் அவர் சொல்லி சந்தோசப்படுகிறார்.
சிறகடிக்க ஆசை:
மேலும், நேற்றைய எபிசோட்டில் சீதாவை பெண்பார்க்க வரும் விசயத்தை முத்துவிடம் மீனா சொல்கிறார். உடனே முத்து, அவள் படிக்கட்டும். இன்னும் ரெண்டு வருடம் கழித்து கல்யாணம் பண்ணலாம் என்று சொன்னார். அதற்கு மீனா, நல்ல இடம் பார்க்கலாம். அதற்குப் பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல, முத்துவும் ஒத்து கொள்கிறார். பின் வீட்டில் மனோஜ், முத்துவால் என் கடையில் பிரச்சனை. கடை வியாபாரமே கெட்டுப் போனது என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார். அதற்குப்பின் நடந்தை மனோஜ் சொல்ல, விஜயா பயங்கரமாக கோபப்பட்டார்.
சீரியல் ட்ராக்:
கடைசியில் இந்த மாதம் பணம் கொடுக்க முடியாது என்று மனோஜ் சொல்ல, முத்து வாக்குவாதம் செய்கிறார். உடனே அண்ணாமலை, அடுத்த மாதம் சேர்த்து கொடு என்று சொல்லிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் சீதா, எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம். வேளைக்கு போகணும் அப்புறம் பண்ணுகிறேன் என்று சொல்ல, எல்லோருமே அவரை சமாதானம் செய்கிறார்கள். அதற்குப்பின் பின் மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் சீதாவை பார்த்து பிடித்திருக்கிறது என்று சொல்ல, ஆனால் சீதா எதுவுமே சொல்லாமல் தயங்கி அமைதியாகவே இருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சீதாவை பார்த்து மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடித்து விட்டது. அவர்களும் வீட்டில் கலந்து பேசி ஒரு நல்ல நாளை சொல்கிறோம் என்று சொன்னவுடன் மீனா குடும்பத்தில் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். அதற்கு பின் சீதாவிடம் முத்து, உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டதற்கு, என்னுடைய சம்பளத்தை வீட்டில் கொடுப்பேன் என்று சில கண்டிஷனை போடுகிறார். முத்துவும் ஏற்றுக் கொள்கிறார். இன்னொரு பக்கம் பிஏ, ரோகினியிடம் பேச வேண்டும் போன் செய்து கொடு என்று வித்யாவை டார்ச்சர் செய்கிறார்.
விஜயாவை ஏமாற்றும் ரோகினி:
வித்யா போன் செய்தவுடன் ரோகிணி போனை விஜயா எடுத்துப் பேசுகிறார். உடனே ரோகினி, போனை வாங்கி ஏதோ பேசி சமாளித்து விடுகிறார். கடைசியில் என்னுடைய அப்பாவுக்கு தெரிந்தவர். 300 கோடி பணம் பற்றி பேச தான் சொன்னேன் என்று பொய் சொல்கிறார். விஜயாவும் நம்பி ஏமாந்து விடுகிறார். பின் முத்து-மீனா இருவருமே மாப்பிள்ளை பற்றியும் சீதா திருமணத்தை பற்றியும் பேசிக்கொண்டு காரில் வருகிறார்கள். கடைசியில் ரோகினி- வித்யா இருவருமே சிட்டியை சந்தித்து பி.ஏ டார்ச்சர் செய்வதை பற்றி பேச, நீங்கள் வீடியோ எடுத்து கொடுத்தால் தான் நான் செய்வேன் என்று கண்டிஷன் போடுகிறார்.