சிறகடிக்க ஆசை ரோகினிக்கு திருமணம் ஆகி இவ்வளவு பெரிய மகனே இருக்காரா? இதோ புகைப்படம்.

By Arun · 7/4/2024

தன்னுடைய கணவர் குறித்து முதன் முதலாக மனம் திறந்து சிறகடிக்க ஆசை சீரியல் ரோகினி அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்து தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார்.

இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஒரு வழியாக ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியல்:

தற்போது சீரியலில் முத்துவிற்கு பெரிய மாலை ஆர்டர் கிடைக்கிறது. அதை முத்து- மீனா இருவரும் பல போராட்டங்களுங்கு பின் செய்து முடிக்கிறார்கள். மாலை ஆர்டர் மூலம் கிடைத்த பணத்தில் முத்துவிற்கு தெரியாமல் சர்ப்ரைஸ் ஆக மீனா கார் வாங்கிக் கொடுக்கிறார். வழக்கம்போல் இதை விஜயா, மனோஜ் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் ரோகினிக்கு பயம் ஏற்படுகிறது. பின் மனோஜ்க்கும் ஒரு தொழில் வைத்து தர சொல்லி ரோகினியிடம் பேசுகிறார் விஜயா. இன்னொரு பக்கம் சுருதி- ரவியை தன் வீட்டிற்க்கே கொண்டு வர வேண்டும் என்று சுருதியின் அம்மா-அப்பா திட்டம் போடுகிறார்கள்.

சல்மா குறித்த தகவல்:

இப்படி அடுத்தடுத்த சுவாரசியங்களுடன் சிறகடிக்க சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் சல்மா அருணாகம். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவருக்கு சிறு வயதில் இருந்தே மீடியாவில் சாதிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம். இதனால் இவர் மாடலிங்கில் நுழைந்தார்.

சல்மா சின்னத்திரை பயணம்:

இதுவரை இவர் பத்துக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, பூர்விகா விளம்பரத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் இவர் நம்ம வீட்டுப் பொண்ணு, ராஜா ராணி சீசன் 2, பாரதிகண்ணம்மா, அமுதாவும் அன்னலட்சுமி போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவரைப் பற்றி பெரிதாக மக்களுக்கு தெரியவில்லை. இவரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சல்மா, நான் திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகுதான் மீடியாவிற்குள் நுழைந்தேன்.

சல்மா பேட்டி:

மீடியாவிற்குள் நுழையும் முன்பு என் கணவரிடம் போகட்டுமா? என்று கேட்டேன். அவர், மீடியாவில் வரும் நெகடிவ், பாசிட்டிவ் கருத்துக்களை எல்லாம் உன்னால் சமாளிக்க முடியும் என்றால் போ என்று சொன்னார். அதற்கு பிறகு என்னால் முடியும் என்று நினைத்து தான் மாடலிங் நுழைந்தேன். அதற்கு பிறகு தான் எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full