கிரிஷ் பள்ளியில் வேலைக்கு சேர்ந்த அண்ணாமலை, சிக்கினாரா ரோகினி? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜின் நண்பர், புது பங்களா விலைக்கு வருகிறது என்று சொல்ல, மனோஜும் சரி என்றார். இன்னொரு பக்கம் மீனாவை காதலிக்கும் முருகன், நேரடியாகவே முத்து வீட்டுக்கு சென்று அண்ணாமலை இடம் பெண் கேட்க, எல்லோருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். அப்போது முத்து, அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அவள் என் பொண்டாட்டிடா என்று சொன்னவுடன் முருகன் அதிர்ச்சியாகி மன்னிப்பு கேட்டார். இதனால் கோபத்தில் மீனா, முத்துவிடம் சண்டை போட்டார்.
அதன் பின் கடையில் பிராஃபிட் வந்ததை வீட்டில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து மனோஜ் சொல்ல, விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டு பெருமையாக பேசி இருந்தார். உடனே முத்து கிண்டல் அடிக்க, ரோகினி நக்கலாக பதிலளித்தார். நேற்று எபிசோட்டில் ரோகினி-மனோஜ் , பிசினஸில் பிராஃபிட் வந்ததால் விஜயாவிற்கு தங்க வளையல் வாங்கி கொடுத்தார்கள். உடனே விஜயா சந்தோஷத்தில் குதித்தார். ஆனால், அண்ணாமலைக்கு வெறும் வேஷ்டி சட்டையை மட்டும் மனோஜ் கொடுத்தார்.
சிறகடிக்க ஆசை:
இதனால் முத்து கோபப்பட்டு மனோஜை திட்டி இருந்தார். அதன்பின் பீச் ஹவுஸ் வாங்குவதை பற்றி வீட்டில் சொல்ல, விஜயா தலைக்கால் புரியாமல் தாண்டவம் ஆடி இருந்தார். பின் மீனா, மாடியில் நின்று நடந்தை நினைத்து கொண்டு இருந்தார். அப்போது முத்து, நாம் கண்டிப்பாக ரூம் கட்டுவோம், வருத்தப்படாதே என்று சொன்னார். பின் இருவருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் ரோகினி, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று பொருள்களை எல்லாம் கொடுத்துவிட்டு, பீச் ஹவுஸ் வாங்குவதை பற்றி சொல்ல, அவரும் சந்தோஷப்பட்டார்.
நேற்று எபிசோட்:
பின் வீட்டில் எப்படியாவது உண்மையை சொல்லிவிடு என்று ரோகினி அம்மா சொல்ல, வழக்கம் போல் ரோகினி, அவர் மீது கோபப்பட்டார். அதற்குப்பின் வேலைக்கு அண்ணாமலை கிளம்பி இருந்தார். அப்போது முத்து, வேண்டாம் என்று தடுத்துமே அண்ணாமலை கேட்கவில்லை. இதனால் வீட்டில் பெரிய பஞ்சாயத்து நடந்தது. ஒரு வழியாக அண்ணாமலை வேலைக்கு கிளம்பினார். ஆனால், முத்துவிற்கு மனசே இல்லை. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, தன்னுடைய கணவர் வேலைக்கு செல்வதற்காக வழி அனுப்பி வைக்கிறார்.
இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய மகனை அழைத்து கொண்டு பள்ளிக்கு வருகிறார். க்ரிஷ் பள்ளியில் தான் அண்ணாமலை வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அண்ணாமலையை பார்த்தவுடன் ரோகினி ஷாக்காகி ஒளிந்து கொள்கிறார். பள்ளியில் அண்ணாமலை- முத்து இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சென்ற பிறகு ரோகினி, செக்யூரிட்டி இடம் விசாரிக்கிறார். அப்போது அவர், புதன்கிழமை மட்டும் வேலைக்கு வருவார் என்றார். பின் என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்து கிளம்பி கிரிஷ் உடன் வீட்டுக்கு வந்து விடுகிறார் ரோகினி.
சீரியல் ட்ராக்:
பின் தன் அம்மாவிடம் நடந்ததை சொல்ல, அவர் உண்மையை சொல்லிவிடு என்கிறார். உடனே கோபத்தில் ரோகினி, அவர் அம்மாவை திட்டிவிட்டு, இதற்கு ஒரு வழி செய்கிறேன். நீங்கள் அவனை பள்ளிக்கூடத்திற்கு புதன்கிழமை மட்டும் அனுப்பாதீர்கள் என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு கிரிஷ் அவர் அம்மா மீது கோபப்படுகிறார். அதற்கு பின் தாங்கள் வாங்க இருக்கும் பங்களாவை பார்க்க ரோகினி- மனோஜ் இருவருமே போய் இருக்கிறார்கள். அதை பார்த்தவுடன் எப்படியாவது அந்த பங்களாவை வாங்க வேண்டும் என்று ரோகினி சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.