ரோகினி- சிட்டிக்கு அடித்த ஜாக்பாட், போனை தேடி அலையும் முத்து- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 30/10/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் தங்களுடைய திருமண நாளை மனோஜ்-ரோகினி கிராண்டாக கொண்டாடி இருந்தார்கள். அப்போது தன்னுடைய ஆர்டரை மனோஜிற்கு தருவதாக அந்த ஓனரும் சொன்னதால் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. இன்னொரு பக்கம் பார்ட்டியில் ஆண்கள் எல்லோருமே குடித்துக்கொண்டு ஜாலியாக இருக்க, முத்து மட்டும் குடிக்காமல் அமைதியாக இருந்தார். பின் எல்லோருமே அவரை உஸ்பேத்த, வேறு வழி இல்லாமல் முத்து குடித்து விட்டார். பின் போதையில் முத்து, தாங்கள் பணக்கார குடும்பம் இல்லை என்று ஓனரிடம் சொன்னவுடன் அவர் ஷாக் ஆனார்.

இருந்தாலும், அவர் முத்துவின் நேர்மையை பாராட்டி இந்த டீலங்கை மனோஜூக்கு கொடுத்தார். அதற்குப்பின் வீட்டுக்கு வரும் வழியிலேயே முத்துவின் போனை ரோகினி எடுத்து மனோஜ் பாக்கெட்டில் போட்டு விட்டார். மேலும், இவர்கள் மூவரும் குடித்து இருப்பதை அறிந்த அண்ணாமலை கோபப்பட்டு திட்டி அவர்களை வெளியிலேயே தூங்க சொன்னார். மருமகள்கள் மூவருமே மன்னிப்பு கேட்டும் அண்ணாமலை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் ரோகினி எப்படியாவது போனை எடுத்துவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

அந்த சமயம் பார்த்து முத்து தண்ணீர் குடிக்க உள்ளே வர, இதை பார்த்த மீனா அவரை வெளியே கூட்டிட்டு போயி பேசி இருந்தார். முத்து, பார்ட்டியில் நடந்ததையும், மீனாவையும் புகழ்ந்து பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். மீனாவும் அவருடன் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த ரோகினி, போனை எப்படி எடுப்பது என்று புலம்பி தன்னுடைய தோழிக்கு போன் செய்து நடந்ததை பற்றி சொல்லி சொல்லி இருந்தார். நேற்று எபிசோட்டில் முத்து - மனோஜ் - ரவி மூவருமே படிக்கட்டிலேயே தூங்கி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

இதை பார்த்த அண்ணாமலை அவர்களை எழுப்ப சொன்னார்கள். மூன்று பேரையுமே அவர்கள் மனைவிமார்கள் எழுப்பி அழைத்து வர, அவர்களுக்கு அண்ணாமலை அறிவுரை சொல்லி திட்டி அனுப்பி இருந்தார். அதற்குப்பின் மனோஜின் கோட்டில் இருந்த முத்து போனை ரோகினி பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டார். அந்த சமயம் வந்த சப் டீலர்ஸ் மனோஜிற்கு மாலை அணிவித்து அவரை பாராட்டி புகழ்ந்து பேசி இருந்தார்கள். இதெல்லாம் கேட்டு மனோஜ் ரொம்பவே பெருமைப்பட, விஜயா-ரோகினி இருவருமே மனோஜை புகழ்ந்து பேசி சந்தோசப்பட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

வழக்கம்போல் முத்து, மனோஜை கிண்டல் அடுத்து பேசி இருந்தார். பின் வேலைக்கு கிளம்பும்போது போன் காணவில்லை என்று முத்து சொல்ல, மீனாவும் போனை தேடுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் போனை காணவில்லை என்று வீடு முழுக்க முத்து-மீனா இருவருமே தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ரோகினி மனதுக்குள் சந்தோஷப்படுகிறார். பின் முத்து, செல்வத்திற்கு போன் செய்து போன் காணவில்லை. அதில் தான் வீடியோ இருக்கிறது என்று சொன்னவுடன் அவரும் பதறி போனார்.

சீரியல் ட்ராக்:

உடனே மீனா, என்ன வீடியோ? என்று கேட்க, ஏதேதோ சொல்லி முத்து சமாளிக்கிறார். இதை எல்லாம் கேட்டு ரோகினி அமைதியாகவே இருக்கிறார். பின் பங்க்ஷன் நடந்த இடத்திற்கு முத்து செல்கிறார். இன்னொரு பக்கம் ரோகினி, சிட்டியை பார்க்கப் போகிறார். அப்போது அவர் பிஏவை கடத்தி அடைத்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல, ரோகினியும் வீடியோவை சிட்டியின் மொபைலுக்கு அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் மண்டபம் முழுவதுமே முத்து மொபைல் தேடி அலைகிறார். ஆனால், கிடைக்கவே இல்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full