ரோகினி விரித்த வலையில் முத்து சிக்கினாரா? கோபத்தில் விஜயா- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யாவால் முத்து ஜெயிலுக்கு போய் இருந்தார். அவரை வெளியில் எடுக்க மீனா ரொம்ப சிரமப்பட்டார். இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்து எல்லோரும் மீனா-முத்துவை ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனில் முத்து எந்த தவறும் செய்யவில்லை என்று அவரை விடுதலை செய்தார்கள். அதற்குப்பின் ஸ்ருதிக்கு உடம்பு சரியில்லாததால் வேலைக்கு லீவு போட சொல்லி கேட்க, ரவியின் ஓனர் கண்டிப்பாக வந்தே தீர வேண்டும் என்று சொல்வதால் ரவி கிளம்பி விட்டார்.
இதனால் கோபப்பட்ட ஸ்ருதி வீட்டை விட்டு கிளம்பி இருந்தார். அப்போது வந்த விஜயா, சுருதியை சமாதனம் செய்தும் அவர் கேட்காமல் சென்றதால் பயங்கர கோபம் வந்து ரவிக்கு போன் செய்து நடந்ததை சொல்லி ஸ்ருதியை திட்டி இருந்தார். இந்த வாரம், சுருதியை எப்படியாவது சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வா என்று மீனா அறிவுரை சொல்ல, ரவியும் ஏற்று கொண்டார். அதற்குப்பின் மீனாவின் உறவினர் வீட்டிற்கு வர, அவர்களுக்கு சாப்பாடு போட்டு மீனா உபசரித்து இருந்தார். இதை பார்த்த விஜயா வழக்கம் போல் மீனாவையும் அவருடைய உறவினர்களையும் ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
இதனால் அவர்கள் பாதி சாப்பாட்டிலேயே சென்று விட்டார்கள். பின் நடந்ததை தன்னுடைய தோழிகளிடம் மீனா சொல்ல, அவர்கள் உன் மாமியாரை பெல்ட் எடுத்து வெளுத்து வாங்கு என்று சொல்லி இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ்க்கு நண்டு சூப்பு வை என்று விஜயா சொல்ல, மீனா முடியாது என்று மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. உடனே கோபத்தில் மனோஜ், மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி கண்டமேனிக்கு பேசி இருந்தார். இதனால் கோபத்தில் மீனா பெல்ட்டை எடுத்துக்கொண்டு வந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில், மனோஜ்- ரோகினி- விஜயா மூவரையுமே சாரா மாறியாக பெல்ட்டில் மீனா அடித்தார். அவர்களும் வலி தாங்க முடியாமல் கத்தினார்கள். கடைசியில் அது மீனா கண்ட கனவு. மீனா அவர்கள் மூவரையும் அடிப்பது போல கனவு கண்டு இருந்தார். அதை நிஜத்தில் நடந்தது போல மீனா நினைத்து விழுந்து விழுந்து சிரித்தார். அவர்கள் மூவருமே என்ன? எதற்கு சிரிக்கிறாய்? என்று கேட்டதற்கு, மீனா எதுவுமே சொல்லாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த முத்து, எதற்கு சிரிக்கிறாய்? என்று கேட்டதற்கு நடந்ததை மீனா முத்துவின் காதில் சொன்னார்.
இன்றைக்கு எபிசோட்:
அவரும் விழுந்து விழுந்து சிரித்தார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்து கத்தி இருந்தார். ஆனால், அவர்கள் சிரிப்பதை நிறுத்தவில்லை. இன்னொரு பக்கம் ரவி, சுருதிக்கு டைமன் மோதிரம் கொடுத்து சமாதானம் செய்து இருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். வழக்கம் போல விஜயா, மீனாவை வம்பு இழுத்து திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு சுருதி- ரவி வருகிறார்கள். அதை பார்த்தவுடன் விஜயா, ஷாக்காகி எதற்கு அவளை அழைத்துக் கொண்டு வந்தாய்? என்று கேட்க, ஸ்ருதி- விஜயா இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.
சீரியல் ட்ராக்:
பின் அண்ணாமலை, ஸ்ருதிக்கு அறிவுரை சொல்லி சொல்கிறார். பின் ஸ்ருதி, எனக்கு டைமன் மோதிரம் ரவி வாங்கி தந்தான். அதனால் வந்துவிட்டேன் என்று சொன்னவுடன் விஜயா பயங்கரமாக கோபப்படுகிறார். இதைப் பற்றி ரவியிடம் கேட்க, அண்ணி சொன்னது சரி என்று நான் ஸ்ருதியை அழைத்து வந்தேன் என்கிறார். பின் மீனாவிடம் எதற்கு நீ ஸ்ருதியை கூட்டிட்டு வர சொன்னாய்? என்று கேட்டதற்கு, நான் நல்லது தான் செய்தேன் என்கிறார். கடைசியில் ரோகினி, முத்துவின் மொபைலை எடுக்க அவர் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து விடுகிறார். இது தெரியாமல் முத்து-மீனா இருவருமே குடித்து விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.