கிரிஷை தத்தெடுப்பதில் மும்மரம் காட்டும் முத்து, தோழியுடன் சேர்ந்து ரோகிணி போடும் மாஸ்டர் பிளான் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By Rajkumar · 6/8/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மனோஜ், மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்த பஞ்சாயத்து ஒரு வழியாக தீர்ந்தது. அந்த 4 லட்சத்திற்கு ரோகிணி பொறுப்பேற்று, 2 லட்ச ரூபாயை முத்துவிடம் கொடுத்து விட்டார். பின், அண்ணாமலையின் 29 லட்சத்தை மனோஜ், மாதம் மாதம் 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று, அந்தப் பொறுப்பை விஜயாவிடமே பாட்டி ஒப்படைத்து விட்டார். கடைசியில் விஜயா, உன் அப்பாவிடம் பணம் வாங்கி கொடுத்து விடு என்று ரோகினியிடம் சொல்லிவிட்டார்.

இந்த சமயத்தில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் மொட்டை கடிதம் எழுதி அனுப்ப, அவர் பரிகாரங்களை செய்து வருகிறார். பின் மீனா, வித்தியாசமான உணவை சமைத்துக் கொடுக்க, முத்து போன் பேசிக்கொண்டு அதை கண்டுகொள்ளாமல் போனதால் மீனா வருத்தப்பட்டார். கடைசியில், முத்து புடவை வாங்கி கொடுத்து மீனாவை சமாதானம் செய்திருந்தார். மேலும் கிரிஷ் பிறந்த நாளுக்காக, கேக் வெட்டி கொண்டாட ரோகிணி எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அந்த சமயம் பார்த்து முத்து-மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போனார்கள்.

உண்மையை அறிந்த முத்து-மீனா:

உடனே ரோகினி யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டார். பின், புது துணியை கொடுத்து கிரிஷ்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரின் பாட்டியிடம் கிரிஷை பற்றி முத்து விசாரித்தார். ஆரம்பத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் இருந்த கிரிஷ் பாட்டி, இறுதியில்தனது மகள் பற்றிய உண்மையை முத்துவிடம் சொல்லிவிட்டார். ஆனால்,ரோகிணி தான் தனது மகள் என்று அவர் சொல்லவில்லை. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்து- மீனா, கிரிஷன் அம்மா செய்தது தவறு என்று கூறிவிட்டு, கடைசியில் கிரிஷ் பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடி மகிழ்ந்து இருந்தார்கள்.

முத்து-மீனா எடுக்கும் முடிவு:

அதற்குப் பின் ரோகினி தனது அம்மாவிடம் கோபமாக பேசியிருந்தார். இதற்குப் பிறகு முத்து- மீனாவிடம் போனில் கூட பேசக்கூடாது. அவர்கள் வந்தால் கூட முகம் கொடுத்து பேச வேண்டாம் என்று எச்சரித்து இருந்தார். பின் முத்து-மினா வீட்டிற்கு வரும் வழியில், கிரிஷை தத்து எடுக்க வேண்டும் என்று, ஒரு கோவிலில் சீட்டு குலுக்கி போட, வேண்டாம் என்று வருவதால் மீனா வருத்தப்படுகிறார். ஆனால், முத்து அவருக்கு ஆதரவாக பேசுகிறார். இன்னொரு பக்கம் விஜயாவின் நடன வகுப்பிற்கு ஆறு பேர் சேர்ந்ததால் விஜயா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்.

நேற்றைய எபிசோட்:

நேற்று எபிசோடில், விஜயாவின் பரதநாட்டிய வகுப்பிற்கு புதிய காதல் ஜோடி சேர்ந்து, சந்திப்பதற்கு இடமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து- மீனா கிரிஷை குறித்து அனைவரிடமும் சொல்கிறார்கள். பின், கிரிஷ் அம்மாவை விஜயா மற்றும் மனோஜ் கேவலமாக பேசி இருந்தார்கள். இதையெல்லாம் ரோகிணி வெளியே நின்று கொண்டு கேட்டு வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இந்நிலையில், இன்றைய எபிசோடில் கிரிஷை தத்து எடுக்கப் போகும் முடிவு குறித்து முத்து-மீனா வீட்டில் அனைவரிடமும் சொல்கிறார்கள்.

இன்றைய எபிசோட்:

அதைக் கேட்ட விஜயா, கண்டவர்கள் எல்லாம் வந்து இருக்க இது என்ன சத்திரமா என்று கோபப்படுகிறார். ஆனால், முத்து கிரிஷை தத்து எடுப்பேன் என்று உறுதியாக நிற்கிறார். பின் ரோகினி வீட்டுக்குள்ளே வர, விஜயா ரோகினி இடமே பஞ்சாயத்தை வைக்கிறார். மற்றொரு பக்கம், ரோகினி தனது அம்மாவிடம் இந்த உண்மையையெல்லாம் சொல்லி முத்து போன் செய்தால் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இதற்கிடையே சீதா, கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்ததாக முத்து மீனாவிடம் சொல்லி மகிழ்ச்சி அடைகிறார். கடைசியில், இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் முதலில் குழந்தை பெத்துக்க வேண்டும் என்று தனது தோழியுடன் சேர்ந்து ரோகிணி பிளான் போடுகிறார். இனிவரும் நாட்களில் கிரிஷை முத்து தத்து எடுப்பாரா? ரோகினி போடும் பிளான் வொர்க் அவுட் ஆகுமா? போன்ற விறுவெப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full