மலேசியா மாமாவால் மீண்டும் பிரச்சனையில் சிக்கும் ரோகினி, உண்மையை கண்டுபிடிப்பாரா முத்து? சிறகடிக்க ஆசை

By subhashini · 9/2/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ரோகினி, சத்யா வீடியோ பற்றி முத்து தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல, அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் சிட்டி. இன்னொரு பக்கம் சீதா, ஹாஸ்பிடலில் ட்ராபிக் போலீஸின் அம்மாவிற்கு உதவி செய்வது பற்றி வீட்டில் சொன்னவுடன் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பின் சத்யா, தன்னுடைய அக்காவிற்காக பெரிய ஆர்டரை வாங்கிக் கொண்டு வந்தார். இதை கேட்டவுடன் மீனா, அவருடைய அம்மாவும் சந்தோஷப்பட்டார்கள். பின் இதைப்பற்றி மீனா, முத்துவிடம் சொன்னார். பின் மீனா, அதற்காக காசு செலவாகும். ஐம்பதாயிரம் வரை தேவை என்று சொன்னவுடன் முத்து பார்த்துக்கொள்ளலாம் என்றார்.

முத்து-மீனா இருவரும் ரவி, சுருதியை சந்தித்து பேசி இருந்தார்கள். பின் முத்து புதிய ஆர்டர் பற்றி பேசிக்கொண்டார். அப்போது மீனா, எங்களுக்கு பணம் தேவை என்று சொன்னவுடன் ஸ்ருதி- ரவி இருவருமே போட்டி போட்டுக் கொண்டு பணத்தை அனுப்பி இருந்தார்கள். இன்னொரு பக்கம் சிந்தாமணி, விஜயாவிடம் நடனம் கற்றுக் கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணியின் ஆட்கள் போன் செய்து புதிய ஆர்டர் மீனாவுக்கு கிடைத்துவிட்டது என்று சொன்னவுடன் பயங்கரமாக கோவப்பட்டார். உடனே கோபத்தில் சிந்தாமணி, மீனாவை பற்றி தப்புத் தப்பாக விஜயாவிடம் சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மாமியாரின் கொட்டத்தை அடக்கத்தான் வேலைக்கு போவதாக மீனா சொன்னது போல் சொன்னார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. பின் சிந்தாமணி, மீனாவுக்கு புதிய ஆர்டரை கிடைக்க விடாமல் பண்ணுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விஜயாவை உஷ்பேத்தி விட்டார். இதனால் கொந்தளித்த விஜயா, வீட்டிற்கு வந்து பயங்கரமாக மீனாவை திட்டி இருந்தார் என்ன பிரச்சனை என்று சொல்லாமல் மீனாவை மோசமாக திட்டி இருந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் செல்வத்தின் வண்டியை அந்த ட்ராபிக் போலீஸ் பிடித்து விட்டார். இதை முத்துவிடம் செல்வம் சொல்ல, அதற்கு முத்து பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த முத்துமிடம் விஜயா, மீனாவை பற்றி குறை சொல்லி சண்டை போட்டார். ஆனால், முத்து அதைப்பற்றி பெரிதாகவே கண்டு கொள்ளவில்லை. முத்து-மீனா இருவரும் புதிய ஆர்டர் பற்றி பேசி, அதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சீதா, அந்த ட்ராபிக் போலீஸின் அம்மாவை நன்றாக கவனித்துக் கொண்டார்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்தவுடன் அவருடைய அம்மாவிற்கும், போலீசுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த டிராபிக் போலீஸ்க்கு, சீதா மீது ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கிறது. இன்னொரு பக்கம் மீனா, வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு ஆர்டருக்காக செல்ல பார்த்தார். அந்த சமயம் பார்த்து விஜயாவிற்கு போன் செய்த சிந்தாமணி, மீனா ஆர்டரை முடிக்க விடாமல் வீட்டிலேயே வையுங்கள். அவள் மண்டபத்திற்கு வரக்கூடாது என்று சொன்னவுடன் விஜயாவும் வீட்டில் உள்ள எல்லோரையும் அனுப்பி விட்டு, மீனாவை வெளியில் அனுப்பாமல் இருப்பதற்கு புது டிராமா போட்டார்.

https://www.youtube.com/watch?v=aO6_T2efbI0

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அண்ணாமலை நண்பனின் மகள்
பவானி, கடிதம் எழுதிவைத்து காதலனுடன் சென்று சென்று விடுகிறார். இதனால் அவர் மனம் உடைந்து அண்ணாமலை குடும்பத்தில் சொல்கிறார். அப்போது முத்து, நான் எப்படியாவது உங்கள் மகளை அழைத்து வருகிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இன்னொரு பக்கம் பவானி காதலன் வீட்டிற்கு நெருக்கமானவர் தான் மலேசியா மாமா. அவர் பெண்ணின் வீட்டில் பேச வருகிறார். அப்போது முத்து, பவானியை வீட்டிற்கு அழைத்து வருகிறார். பின் வீட்டிற்கு வெளியே மலேசியா மாமா இருக்கிறார். அடுத்து என்ன? விறுவிறுப்பில் சீரியல் செல்கிறது.

behindtalkies AMP · Quick view
View full