முத்துவை சிக்க வைக்க ரோகினி போடும் புது திட்டம், மீனா செய்த வேலை- சிறகடிக்க ஆசை

By subhashini · 3/10/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரோகினி, முத்து மொபைலில் இருக்கும் சத்யா வீடியோவை எடுக்க வேண்டும் என்று தன் தோழிக்கு ஆர்டர் போட்டார். ஆனால், அவரால் எடுக்க முடியவில்லை. இதற்கிடையில் முத்து, மனோஜுக்கு கடிதம் கொடுத்த நபரை கண்டுபிடித்து விட்டார். இதை முத்து வீட்டில் சொல்ல ரோகினி உள்ளுக்குள் பயந்தார். பின் முத்து, அவன் என்னைத்தான் மிரட்ட வேண்டும். தேவையில்லாமல் மனோஜை மிரட்டுகிறான் என்றால் இவன் தான் ஏதாவது தேவையில்லாத வேலை செய்து இருப்பான் என்று சொன்னவுடன் ரோகினி முகம் மாறி இருந்தது.

எனக்கு தெரிந்த ஆளிடம் சொல்லி வைத்திருக்கிறேன். அவன் என் கையில் கிடைத்த உடனே உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று சொல்ல, பயத்தில் ரோகினி அந்த இடத்தை விட்டு கிளம்பி இருந்தார். பின் கொலு வைப்பது பற்றி முத்து-மனோஜ் -ரவி எல்லோரும் பேசி கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் சுருதி-மீனா- ரோகினி மூவருமே கொலு வைப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது சுருதி- மீனா பேசுவதை பார்த்து ரோகினிக்கு சந்தேகம் வந்தது. அதோடு முத்துவை மாட்ட வைக்க ரோகினி மீண்டும் திட்டம் போட்டார். நேற்று எபிசோட்டில் முத்து வீட்டில் கொலு வைக்கும் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

சிறகடிக்க ஆசை:

மீனா எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து இருந்தார். விழாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் என எல்லோருமே வந்தார்கள். ரோகினியும் அவருடைய தோழியும், எப்படியாவது இந்த விழா முடிவதற்குள் முத்து மொபைலை எடுத்து விட வேண்டும் என்று பிளான் போடுகிறார்கள். இந்த விழாவிற்கு காதல் ஜோடிகளுமே வந்திருந்தார்கள். அதை பார்த்து மீனா, முத்துவிடம் சொல்ல அவருக்கும் சந்தேகம் வந்தது. பின் விழாவில் விஜயா பாடி இருந்தார். விஜயா பாட்டை கேட்டவுடன் நாய் எல்லாம் குறைத்தது. விஜயா பாட்டை யாராலும் காது கொடுத்து கேட்கவில்லை. ஆனால், அண்ணாமலை மட்டும் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று பாட சொல்லிக் கொண்டே இருந்தார்.

நேற்று எபிசோட்:

கடைசியில் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், பயங்கரமாக திட்டி விட்டதால் விஜயா பாடுவதை நிறுத்திவிட்டார். அதற்குப்பின் மீனா பாடியதை கேட்டு எல்லோருமே பாராட்டி கைதட்டி இருந்தார்கள். இதற்கிடையில் முத்து போன் எடுக்க ரோகினி பார்த்தார். ஆனால், முத்து போனை கேட்டு வாங்கி கொண்டார். மேலும், முத்து-மீனா இருவரும் நடந்ததை பற்றி சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், இரண்டாவது நாளுக்கான கொலு விழா நடைபெறுகிறது.

இன்றைய எபிசோட்:

அப்போது ரோகினி தன்னுடைய மாமியாருக்கு ஐஸ் வைக்க புது புடவை வாங்கி வந்து தருகிறார். இதை பார்த்து விஜயா, சந்தோஷத்தில் ரோகினி- மனோஜை புகழ்ந்து பேசுகிறார். உடனே முத்து, அப்பாவிற்கு துணி இல்லையா என்று கேட்டதற்கு, இது பெண்களுக்கான விழா அதனால் தான் அத்தைக்கு மட்டும் எடுத்தோம் என்று ரோகினி சொன்னார். அதற்கு மீனா, கல்யாணம் ஆனவே இரண்டு பேருக்கும் சேர்த்து தான் கொடுக்க வேண்டும் என்று சொல்ல விஜயா, மீனாவை திட்டுகிறார். அதற்குப்பின் மீனாவின் நண்பர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். இதை பார்த்த விஜயா அவர்களை கிண்டலும் நக்கலுமாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பதாக சொல்லி ரோகினி ஒரு விளம்பர அட்டையை விஜயாவிடம் கொடுத்து திறக்க சொல்கிறார். இதனால் விஜயா ரொம்ப குஷியாகி விடுகிறார். அதற்குப்பின் வயதான தாத்தா, பாட்டிக்கு சாப்பாடு, துணி கொண்டு போய் முத்து-மீனா கொடுக்கிறார்கள். அப்போது முத்து இவர்களை வீட்டிற்கு கூப்பிடலாம் என்று சொல்லும்போது மீனா, அத்தை தேவையில்லாமல் அசிங்கப்படுத்துவார்கள். அவர்கள் வேணாம் என்று சொல்லி இருவருக்கும் வாக்குவாதம் ஆகிறது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் முத்துவுக்கு அறிவுரை சொல்லி அனுப்புகிறார்கள். கடைசியில் ரோகினி, எப்படியாவது முத்து போனை எடுக்க வேண்டும், நான் கொலுவில் பார்ட்டிஷிபேட் பண்ணும் போது போனை எடுத்து விடு என்று தனது தோழியுடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full